News April 3, 2025
இன்று தாய்லாந்து செல்லும் பிரதமர்

பிம்ஸ்டெக் கூட்டமைப்பின் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள, பிரதமர் மோடி இன்று தாய்லாந்து பயணம் செய்ய உள்ளார். நாளை நடைபெறும் உச்சி மாநாட்டில் நேபாள பிரதமர் சர்மா ஒலி, வங்கதேச இடைக்கால அரசு தலைவர் முகமது யூனுஸ் ஆகியோரும் பங்கேற்கின்றனர். கடல்சார் ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதை பிரதமர் மோடி மேற்பார்வையிடுகிறார். பின், அங்குள்ள வாட்போ கோவிலுக்கு அந்நாட்டு பிரதமருடன் இணைந்து செல்கிறார்.
Similar News
News April 4, 2025
ரோஹித்தை அரணாக தாங்கி நிற்கும் பொல்லார்ட்

ஒரு சில போட்டிகளில் குறைவான ரன்கள் எடுத்ததற்காக ரோஹித் இப்படிதான் விளையாடுவார் என முடிவு செய்து விட முடியாது என MI பேட்டிங் கோச் பொல்லார்ட் தெரிவித்துள்ளார். கிரிக்கெட்டில் வெற்றிகளை விட தோல்விகளே அதிகம் எனவும், மும்பை அணி எப்போதும் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். IPL-ல் இதுவரை 3 போட்டிகளில் விளையாடியுள்ள ரோஹித், 21 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார்.
News April 4, 2025
அந்த வீரனுக்கு எவ்வளவு கனவுகள் இருந்திருக்கும்..

குஜராத்தில் நேற்று நள்ளிரவு இந்திய விமானப்படையைச் சேர்ந்த போர் விமானம் விபத்துக்குள்ளானது. இதில் ஹரியானாவைச் சேர்ந்த லெப்டினன்ட் சித்தார்த் யாதவ் (28) உயிரிழந்தார். இவருக்கு 10 நாள்களுக்கு முன்புதான் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. நவம்பர் 2ஆம் தேதி திருமணம் நடக்க இருந்த நிலையில், அநியாயமாக உயிர் பறிபோயுள்ளது. சித்தார்த்தின் பூட்டன், தாத்தா, அப்பா என அவரது குடும்பமே ராணுவ சேவை செய்தவர்களாவர்.
News April 4, 2025
டிரம்பின் அச்சுறுத்தல்.. இந்தியா என்ன செய்யப்போகிறது?

இந்திய இறக்குமதிகளுக்கு USA-வில் 27% வரிவிதித்திருப்பது குறித்து தீவிர ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக மத்திய வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது. தொழில்துறை பிரதிநிதிகள், ஏற்றுமதியாளர்களுடன் ஆலோசனை நடத்தி வரும் அதேவேளையில், USA அதிகாரிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அமைச்சகம் அறிவித்துள்ளது. அதேபோல், பல துறைகளைச் சேர்ந்த உயர்மட்ட அதிகாரிகளுடன் பிரதமர் அலுவலகமும் ஆலோசனை நடத்தியுள்ளது.