News April 25, 2025

போப் இறுதிச் சடங்கில் பங்கேற்கும் குடியரசுத் தலைவர்

image

போப் ஆண்டவரின் இறுதிச் சடங்கில் இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பங்கேற்கவுள்ளதாக வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது. உடல்நலக் குறைவால் காலமான போப் பிரான்சிஸ் உடல் நாளை (ஏப்.26) இறுதி மரியாதையுடன் அடக்கம் செய்யப்படவுள்ளது. இதில், பங்கேற்க வாடிகன் நகருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று செல்லவுள்ளார் என வெளியுறவுத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News November 21, 2025

EPS-ன் ஆட்சியில் கோவைக்கு மெட்ரோ உறுதி: வானதி

image

EPS முதல்வரானவுடன் கோவைக்கு மெட்ரோ ரயில் கொண்டு வரப்படும் என்று வானதி சீனிவாசன் உறுதிப்பட தெரிவித்துள்ளார். தற்போது நிராகரிக்கப்பட்டுள்ள மெட்ரோ திட்டத்தினை, வரையறைகளுக்கு உட்பட்டு மாற்றி அமைத்து மத்திய அரசிடம் அனுமதி பெறப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், PM மோடி தமிழகத்திற்கு எதிராக இருப்பது போல நடத்தப்படும் நாடகத்தை மக்கள் நம்பமாட்டார்கள் எனவும் அவர் பேசியுள்ளார்.

News November 21, 2025

BREAKING: தங்கம் விலை மீண்டும் குறைந்தது

image

தங்கம் விலை தொடர்ந்து 2-வது நாளாக சரிவைக் கண்டுள்ளது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ₹40 குறைந்து ₹11,460-க்கும், சவரனுக்கு ₹320 குறைந்து ₹91,680-க்கும் விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வருவதால் நம்மூர் சந்தையில் 2 நாள்களில் மட்டும் சவரனுக்கு ₹1,120 குறைந்துள்ளது. இதனால், நடுத்தர மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.

News November 21, 2025

வண்ணங்களின் களஞ்சியம்.. இன்று சர்வதேச டிவி தினம்

image

இன்று சர்வதேச டிவி தினம் கொண்டாடப்படுகிறது.
வீட்டு ஹாலில் TV வைத்து மாடியில் ஒருவர் ஆன்டெனா திருப்பி கீழே படம் வந்துருச்சா? என கத்தும் குரல்களுக்கு இடையே, அத்திரை மின்னுவது ஒரு மாயாஜாலம். புள்ளியாய் தெரிந்த திரை விலகி, ‘ஒளியும் ஒலியும்’ நிகழ்ச்சியை இமைக்காமல் தெருவே ஒன்று கூடி ரசித்த அந்த தருணங்களால், டிவி ஒரு இயந்திரமாக தெரியவில்லை; அது மகிழ்ச்சியின் சாவியாக இருந்தது. நீங்க டிவி வாங்கிய ஆண்டு?

error: Content is protected !!