News August 10, 2024
கர்ப்பமாக இருக்கிறேன்: நடிகை இந்திரஜா

நடிகை இந்திரஜா ஷங்கர், தான் கர்ப்பமாக உள்ளதாக அறிவித்துள்ளார். இந்த உணர்வை வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாது என்றும், அனைவரின் ஆசீர்வாதத்தை விரும்புவதாகவும் இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். நடிகர் ரோபோ சங்கரின் மகளான இவர், விஜய் நடித்த பிகில் படத்தின் மூலம் நடிகையானார். தொடர்ந்து, கார்த்தி நடித்த விருமன் படத்திலும் நடித்திருந்தார். இவருக்கு மார்ச் மாதம் முறைமாமன் கார்த்திக் உடன் திருமணம் நடந்தது.
Similar News
News January 28, 2026
மாவட்ட செயலாளரை நீக்கிய OPS

அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் கழகத்தில் இருந்து திருப்பூர் புறநகர் மாவட்ட செயலாளர் TT காமராஜை அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் OPS நீக்கி உத்தரவிட்டுள்ளார். கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினால் நீக்கியதாக கூறியுள்ள OPS, காமராஜுக்கு பதிலாக திருப்பூர் புறநகர் மாவட்ட செயலாளராக மாரிமுத்துவை நியமித்துள்ளார்.
News January 28, 2026
SPORTS 360°: செஸ்ஸில் குகேஷ் அபாரம்

*இலங்கைக்கு எதிரான 3-வது ODI-ல் 53 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற இங்கிலாந்து, தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது *ஆசிய ஒலிம்பிக் கவுன்சிலின் புதிய தலைவராக ஷேக் ஜோவான் பின் ஹமாத் அல் தானி தேர்வு *டி20 உலகக் கோப்பை தொடருக்கு முன்னோட்டமாக, சென்னையில் 4 பயிற்சி போட்டியில் நடைபெறவுள்ளன *டாடா ஸ்டீல் செஸ் தொடரின் 8-வது சுற்றில் சுலோவேனியா வீரர் பெடோசீவை இந்தியாவின் குகேஷ் வீழ்த்தினார்.