News September 30, 2025
கரூருக்கு வர PM விரும்பினார்: நிர்மலா சீதாராமன்

பிரதமர் கரூருக்கு வந்து, பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க விரும்பியதாக கூறிய நிர்மலா சீதாராமன், அவர் வர முடியாத காரணத்தால் தான் வந்ததாக தெரிவித்துள்ளார். விஜய் பரப்புரையில் 41 பேர் உயிரிழந்த நிலையில், ஹாஸ்பிடலில் சிகிச்சையில் இருந்தோரை நேரில் சந்தித்து அவர் ஆறுதல் தெரிவித்தார். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய அரசின் நிவாரணம் விரைவில் வழங்கப்படும் என்றார்.
Similar News
News September 30, 2025
கரூர் வருகிறார் கே.சி.வேணுகோபால்

கரூர் துயரில் பாதிக்கப்பட்டவர்களை காங்., பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் இன்று நேரில் சந்திக்கிறார். இதற்காக காலை 9.20 மணிக்கு விமானத்தில் கோவை வரும் அவர், பகல் 12 மணிக்கு பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் தெரிவிக்கவுள்ளார். தொடர்ந்து மாலை கட்சி நிகழ்விலும் அவர் பங்கேற்கிறார். இச்சம்பவம் தொடர்பாக ராகுல் காந்தி விஜய்யுடன் தொலைபேசியில் பேசிய நிலையில், வேணுகோபாலின் வருகை அரசியல் கவனம் பெற்றுள்ளது.
News September 30, 2025
இரவில் ஜொலிக்கும் இந்திய கிராமம் PHOTOS

இந்தியாவின் லடாக் பகுதியில் 14,500 அடி உயரத்தில் அமைந்துள்ள ஹன்லே, அற்புதமான இயற்கைச் சிறப்பு மிக்க கிராமம். வானியல் விரும்பிகளுக்கான ஒரு சொர்க்கபூமி. இங்கே இரவு நேரத்தில் கோடிக்கணக்கான நட்சத்திரங்களை காண முடியும். 2022இல் இந்த கிராமம் இந்தியாவின் முதல் ‘டார்க் ஸ்கை ரிசர்வ்’ என அறிவிக்கப்பட்டது. இரவு நேரத்தில் ஜொலிக்கும் ஹன்லே கிராமத்தின் போட்டோஸ் மேலே உள்ளன. பிடித்திருந்தா லைக் போடுங்க!
News September 30, 2025
ஒரு பீரின் உண்மையான விலை தெரியுமா?

பிரபல பிராண்ட் பீர், ₹180-க்கு விற்கப்படுகிறது. ஆனால், அந்த பீர் தயாரிக்க ஆகும் செலவு ₹30 தானாம். அப்படியானால் மீதி ₹150 யாருக்கு போகிறது என்கிறீர்களா? கலால் வரி -₹70, வாட் வரி -₹35, டிஸ்ட்ரிபியூட்டர் & ரீடெய்லர் -₹20, கம்பெனி லாபம் -₹15, போக்குவரத்து & பேக்கிங் -₹10 எல்லாவற்றுக்கும் சேர்த்துதான் ₹180 ஆகிறது. பெட்ரோலில் விலையில் பாதி அரசுக்கு என்றால், சரக்கில் பாதிக்கு மேல் அரசுக்கு போகும்போல.