News September 28, 2025
PHOTO GALLERY: காதலனை கரம் பிடித்தார் செலினா கோமஸ்

உலகளவில் பிரபலமான அமெரிக்க பாடகி செலினா கோமஸ், தனது நீண்ட நாள் காதலனான பென்னி பிளாங்கோவை கரம் பிடித்தார். தங்களது திருமண புகைப்படங்களை செலினா தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். நேற்று நடந்த திருமண நிகழ்ச்சியில் உலக பிரபலங்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டுள்ளனர். முன்னதாக, பிரபல பாடகர்களான ஜஸ்டின் பீபர் மற்றும் வீக்கெண்ட் ஆகியோரை செலினா டேட் செய்திருந்தார்.
Similar News
News September 28, 2025
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் PHOTOS

கரூரில் 40 பேர் உயிரிழந்த துயர சம்பவம் நிகழ்ந்து 20 மணிநேரங்களை கடந்தும் அங்கு மரண ஓலங்கள் தொடர்ந்து வருகிறது. 30-க்கும் மேற்பட்டோரின் உடல்கள் உடற்கூராய்வுக்கு பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. ஒரே குடும்பத்தில் 3 பேர், ஒரே கிராமத்தில் 5 பேர் என அடுத்தடுத்த துயரங்கள் நம்மை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளன. இந்நிலையில், உயிரிழந்தவர்களின் கடைசி போட்டோக்கள் காண்போரை கண்கலங்க வைக்கிறது. #RIP
News September 28, 2025
2 தீவிரவாதிகளை சுட்டுக் கொன்ற ராணுவம்

ஜம்மு & காஷ்மீரின் குப்வாரா பகுதியில் 2 தீவிரவாதிகளை இந்திய ராணுவம் சுட்டுக் கொன்றது. பாகிஸ்தானில் இருந்து எல்லை வழியாக இந்தியாவிற்குள் நுழைய முயன்றவர்கள் தற்போது கொல்லப்பட்டுள்ளனர். மேலும், உளவுத்தகவல்கள் அடிப்படையில் எல்லையில் ராணுவம் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறது.
News September 28, 2025
FLASH: அருணா ஜெகதீசன் விசாரணையை தொடங்கினார்

கரூர் வேலுச்சாமிபுரத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணையை தொடங்கினார். முன்னதாக, விஜய் பிரசாரம் செய்த இடத்தை சுற்றியுள்ள கடைகள், வீடுகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை காவல்துறையினர் கைப்பற்றியிருந்தனர். கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 40 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 110 பேர் ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.