News April 1, 2025

PF ஆட்டோ செட்டில்மென்ட் ரூ.5 லட்சமாக உயருகிறது

image

மருத்துவம், கல்வி, திருமணம், வீடு கட்டுதலுக்காக PF பணத்தை ஆட்டோ செட்டில்மென்ட் மூலம் எடுக்க அனுமதி தரப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மே மாதம் இந்த தொகை ரூ.50 ஆயிரத்தில் இருந்து ரூ.1 லட்சமாக அதிகரிக்கப்பட்டது. இந்தத் தொகையை ரூ.5 லட்சமாக உயர்த்த இபிஎப் நிர்வாக குழு ஒப்புதல் அளித்துள்ளதாகவும், இதையடுத்து மத்திய குழுவின் அனுமதி கிடைத்ததும் இது அமலுக்கு வரும் என்றும் கூறப்படுகிறது.

Similar News

News November 23, 2025

வர்த்தகம் 360°: இந்திய ரயில்வே படைத்த புதிய சாதனை

image

*இந்தியா இஸ்ரேல் இடையே தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுத்துவதற்கான பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்பட உள்ளது. *நடப்பாண்டில் இதுவரை ஒரு லட்சம் கோடி டன் சரக்குகளை கையாண்டு இந்திய ரெயில்வே சாதனை படைத்துள்ளது. *கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கி, இந்தாண்டு அக்டோபர் வரையிலான கணக்கெடுப்பின்படி இந்தியாவின் ஏற்றுமதி 11.8% சரிந்துள்ளது.

News November 23, 2025

உதயநிதியை முதல்வராக்க ஸ்டாலின் ஏற்பாடு: நயினார்

image

மத்திய அரசு எதைக் கொண்டு வந்தாலும், அதை எதிர்ப்பதிலேயே நான்கரை ஆண்டுகளை திமுக வீணடித்து விட்டதாக நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டினார். கஞ்சா, போதை பொருட்களை ஒழிக்காத ஸ்டாலின், சொத்து வரி, மின் கட்டண உயர்வு பற்றி கண்டுகொள்ளவில்லை எனவும் சாடினார். ஆனால் உதயநிதியை முதல்வராக்கும் ஏற்பாடுகளை ஸ்டாலின் செய்து வருவதாக விமர்சித்தார். மேலும் நெல் ஈரப்பத அதிகரிக்க முழு காரணம் திமுகதான் எனவும் தெரிவித்தார்.

News November 23, 2025

16 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

image

அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால் தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும் என IMD கணித்துள்ளது. முக்கியமாக கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், மதுரை, அரியலூர், கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை, கடலூர், டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் ஊரில் மழை பெய்யுதா?

error: Content is protected !!