News November 30, 2024
மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்

ஃபெஞ்சல் புயல் கரையை கடக்கும் நேரத்தில் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. அந்த நேரத்தில் தரைக்காற்று மணிக்கு 90 கிமீ வேகம் வரை வீசக்கூடும். இதனால், கிழக்கு கடற்கரை சாலையில் பொதுப் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ளது. மரங்கள் முறிந்து விழ வாய்ப்பிருப்பதால் அதன் அருகே நிற்பதை மக்கள் தவிர்க்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
Similar News
News January 19, 2026
விஜய் படம் ரிலீஸ்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

விஜய்யின் ‘தெறி’ ரீ-ரிலீஸை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக கலைப்புலி தாணு அபிஷியலாக அறிவித்துள்ளார். முன்னதாக, ஜன.15-ல் அறிவிக்கப்பட்ட தெறி ரீ-ரிலீஸ் புதிய படங்களின் வரவால், ஜன.23-க்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் <<18893477>>திரெளபதி 2, ஹாட்ஸ்பாட் 2<<>> பட தயாரிப்பாளர்களின் கோரிக்கையை ஏற்று ரீ-ரிலீஸ் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஜன நாயகனை தொடர்ந்து தெறி படமும், தற்போது வெளியாகாததால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
News January 19, 2026
விஜய்யிடம் துருவித் துருவி கேள்விகளை கேட்ட CBI

விஜய்யிடம் 2-வது முறையாக CBI நடத்தும் விசாரணையில் பல கிடுக்குப்பிடி கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. *கூட்டநெரிசல் தொடர்பான தகவல் எப்போது கிடைத்தது? *பிரசார வாகனத்தில் இருந்து கூட்ட நெரிசலை பார்க்க முடியவில்லையா? * கரூர் – திருச்சி வரையிலான பயணத்தில், நெரிசல் சம்பவம் தொடர்பாக யார் யாரிடம் பேசி, எந்த தகவலை பெற்றீர்கள்? *போலீஸ் அதிகாரிகளின் எச்சரிக்கை மீறப்பட்டதா? உள்ளிட்ட கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன.
News January 19, 2026
தமிழகத்திற்கு Goodbye சொன்ன வடகிழக்கு பருவமழை

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருந்து வடகிழக்கு பருவமழை விலகியதாக IMD அறிவித்துள்ளது. இதன் காரணமாக 22-ம் தேதி வரை தமிழகத்தில் வறண்ட வானிலையே நிலவும் என்றும், அதேசமயம் வரும் 23-ல் இருந்து 25-ம் தேதி வரை TN மற்றும் புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் கணித்துள்ளது. மேலும் 20-ம் தேதி வரை நீலகிரி மற்றும் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் IMD கூறியுள்ளது.


