News November 30, 2024

மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்

image

ஃபெஞ்சல் புயல் கரையை கடக்கும் நேரத்தில் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. அந்த நேரத்தில் தரைக்காற்று மணிக்கு 90 கிமீ வேகம் வரை வீசக்கூடும். இதனால், கிழக்கு கடற்கரை சாலையில் பொதுப் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ளது. மரங்கள் முறிந்து விழ வாய்ப்பிருப்பதால் அதன் அருகே நிற்பதை மக்கள் தவிர்க்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Similar News

News November 12, 2025

ஏற்றுமதியை ஊக்குவிக்க ₹45,060 கோடி: மத்திய அரசு

image

சிறு, குறு & நடுத்தர ஏற்றுமதியாளர்களுக்கு உதவ, ₹45,060 கோடி ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. 6 ஆண்டுகளுக்கான இந்த திட்டத்தில் ஏற்றுமதி ஊக்குவிப்பு திட்டத்துக்கு (EPM) ₹25,060 கோடியும், ஏற்றுமதியாளர்களுக்கான (CGSE) கடன் உத்தரவாத திட்டத்துக்கு ₹20,000 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. உலக சந்தைகளில் இந்திய நிறுவனங்களின் போட்டியிடும் திறனை ஊக்குவிக்க இந்த நிதியுதவி உதவும்.

News November 12, 2025

பொங்கல் பண்டிகைக்கு தமிழக அரசு புதிய பரிசா?

image

வரும் பொங்கல் பண்டிகைக்கு அரிசி, சர்க்கரை, கரும்பு உள்ளிட்ட பொருள்களின் தொகுப்புடன் ரொக்கப்பணம் வழங்க TN அரசு திட்டமிட்டுள்ளதாக ஏற்கெனவே தகவல் வெளியானது. தற்போது, அரசின் தொகுப்புடன் பொங்கல் பானைகளையும் வழங்க வேண்டும் என மண் பாண்ட தொழிலாளர்கள் CM ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்கான சாத்தியக்கூறு மற்றும் நிதிநிலைமை குறித்து அரசு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

News November 12, 2025

மெழுகு டாலு ரகுல் ப்ரீத் சிங்

image

மெழுகு பொம்மை போன்ற பிரகாசமும், கண்ணால் பேசும் பார்வையும் கொண்டவர் ரகுல் ப்ரீத் சிங். இவர், மாடலிங் உலகில் தொடங்கி தெலுங்கு, தமிழ் திரைப்படங்களின் வழியே தற்போது பாலிவுட்டில் கலக்கி வருகிறார். சமீபத்தில் இவர், இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள போட்டோக்களுக்கு, லைக்குகள் குவிந்து வருகின்றன. உங்களுக்கும் இந்த போட்டோஸ் பிடிச்சிருந்தா, ஒரு லைக் போடுங்க.

error: Content is protected !!