News November 29, 2024
கடலூர் மக்கள் நாளை வெளியே வர வேண்டாம்

“ஃபெஞ்சல்” புயல் கரையைக் கடக்கும்போது 90 கி.மீ., வேகத்தில் சூறைக்காற்று வீசும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. இதனையடுத்து, நாளை பிற்பகலில் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என கடலூர் ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இதற்கிடையில் செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களுக்கு மரம் அறுக்கும் கருவி, ரப்பர் படகு உள்ளிட்ட வெள்ள மீட்புக் கருவிகளுடன் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் விரைந்துள்ளனர்.
Similar News
News April 26, 2025
போதை கடத்தல், பஹல்காம் தாக்குதல்… என்ன தொடர்பு?

சமீபத்தில் குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்தில் ₹21,000 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டதற்கும், பஹல்காம் தாக்குதலுக்கும் தொடர்புள்ளதாக என்ஐஏ SC-ல் தெரிவித்துள்ளது. இந்த போதைப்பொருளை விற்று, அதில் கிடைக்கும் பணத்தில் தீவிரவாத நடவடிக்கைகளை லஷ்கர்-இ-தொய்பா அரங்கேற்றி வருகிறது, இதன் மூலம் இந்தியாவை பலவீனப்படுத்த தீவிரவாத அமைப்பு முயல்வதாகவும் என்ஐஏ கூறியுள்ளது.
News April 26, 2025
அட! இத தெரிஞ்சுக்காமலே செத்துட்டாரே…

இங்கிலாந்தை சேர்ந்த ஒருவருக்கு 3 ஆண்குறிகள் இருந்தது மருத்துவ உலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அரிய பிறவி குறைபாடான இது ‘triphallia’ என அழைக்கப்படுகிறது. உடல்தானம் செய்த 78 வயது முதியவரின் உடலை உடற்கூராய்வு செய்ததில், அவருக்கு 3 ஆண்குறிகள் இருப்பது தெரிந்தது. ஒரு உறுப்பு மட்டும் வெளியிலும், மற்ற 2 உறுப்புகளும் விதைப்பையிலும் இருந்தன. இதை அறியாமலேயே, அந்நபர் வாழ்ந்துள்ளார் என்கின்றனர் மருத்துவர்கள்.
News April 26, 2025
இடுக்கண் வருங்கால் நகும் பாகிஸ்தானியர்

போர்ச் சூழலிலும், கையாலாகாத தங்கள் அரசைக் கிண்டலடித்து பாகிஸ்தானியர்கள் பதிவிட்டு வருகின்றனர். ‘இந்தியா குண்டு வீசுமா?’ என ஒருவர் கேட்க, ‘அந்த அளவுக்கு இந்தியா முட்டாளல்ல’ என்கிறார் மற்றொருவர். அதற்கு மூன்றாமவர், ‘இந்தியா முட்டாளாகவே இருக்கட்டும், அப்பத்தான் இந்த கொடுமை முடியும்’ என்கிறார். மேலே படங்களை புரட்டிப் பாருங்கள், பாகிஸ்தானியர்களின் நகைச்சுவைக்கும் பின் இருக்கும் சோகம் தெரியும்.