News April 2, 2025
பெற்றோர்களே, இதை கவனிங்க

பெற்றோர்களே இந்த விஷயங்களையும் கவனியுங்கள்: *குழந்தைக்கு எவர்சில்வர் பாத்திரங்கள், தட்டுகளில் உணவை கொடுத்து பழக்கவும் *தண்ணீர் பாட்டில் ஸ்டீல் (அ) காப்பரில் வாங்கலாம். வாய் சிறிதான பாட்டில் நல்லது. *பணிக்கு செல்லும் பெற்றோர் ஞாயிறன்று முழு நேரத்தையும் குழந்தையுடன் செலவழியுங்கள் *வீட்டுக்கு அருகில் உள்ள பள்ளிகளில் சேர்ப்பது நல்லது; பாதுகாப்பும் கூட *பிடிக்காத விஷயத்தை செய்ய வற்புறுத்தாதீர்.
Similar News
News April 2, 2026
தஞ்சாவூர் மாவட்டத்தில் ரூ.1.15 கோடி பறிமுதல்

ஏப்ரல் 23ல் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தஞ்சை மாவட்டத்திலுள்ள 8 தொகுதிகளிலும் 72 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு தீவிரக் கண்காணிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மார்ச் 15 முதல் 31-ம் தேதி வரை நடத்தப்பட்ட சோதனையில், உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1,14,74,127 ரொக்கம், சில்வர் பாத்திரங்கள் உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. தஞ்சையில் அதிகபட்சமாக ரூ. 39.86 லட்சம் பறிமுதல்
News April 2, 2026
பூக்கள் விலை பாதியாக குறைந்தது!

மதுரை, ஆண்டிபட்டி, குமரி தோவாளை சந்தைகளில் பூக்கள் விலை கணிசமாக குறைந்துள்ளது. மதுரையில் கடந்த சில நாள்களாக மல்லிகைப்பூ கிலோ ₹1,500 – ₹2,000 வரை விற்பனையான நிலையில், இன்று ₹700 ஆக குறைந்துள்ளது. பிச்சி, முல்லை தலா ₹500, செவ்வந்தி – ₹250, சம்பங்கி – ₹120, பட்டன் ரோஸ் – ₹150, அரளி – ₹350 என விற்பனையாகிறது. சுப முகூர்த்தம், கோயில் திருவிழா காலம் என்பதால் விலை குறைவால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
News April 2, 2026
இரண்டே நாள் தான்.. இரண்டு கட்சிகள் என்ன செய்கின்றன?

வேட்புமனு தாக்கலுக்கு கடைசி நாள் ஏப்.6. விடுமுறையை தவிர்த்து 2 நாள்களே உள்ளன. ஆனால் தேசிய கட்சிகளான காங்., பாஜக ஆகியவை இதுவரை வேட்பாளர் பட்டியலை இறுதி செய்யவில்லை. இன்று இரவு காங்., வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் என ஸ்டாலின் அப்டேட் கொடுத்த நிலையில், மறுபுறம் பாஜகவில் குழப்பம் நீடிப்பதாக கூறப்படுகிறது. சில தொகுதிகளை மாற்றி கேட்பதால் அதிமுக வேட்பாளர்களும் வேட்புமனு தாக்கல் செய்யாமல் உள்ளனராம்.


