News April 11, 2025

பங்குனி உத்திரம்: பூக்கள் விலை கிடுகிடு உயர்வு

image

பங்குனி உத்திரத்தையொட்டி சென்னை கோயம்பேடு சந்தையில் பூக்கள் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு வரை கிலோ ₹400-க்கு விற்பனையான மல்லி இன்று ₹600-க்கு விற்பனையாகிறது. அதேபோல், ஐஸ் மல்லி – ₹400, முல்லை – ₹750, ஜாதிமல்லி- ₹750, பன்னீர் ரோஜா- ₹120, சாமந்தி – ₹180, அரளிப் பூ – ₹350-க்கு விற்பனையாகிறது. அதேபோல், குமரியின் தோவாளை சந்தையிலும் பூக்கள் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.

Similar News

News November 21, 2025

விழுப்புரம்: மனைவி கண்டித்ததால் கணவர் தற்கொலை!

image

விழுப்புரம்: ஓமிப்பேரைச் சேர்ந்தவர் பாலமுருகன் (35). இவருக்கு மதுப்பழக்கம் இருந்த நிலையில், இவரது மனைவி ராகசுதா கண்டித்துள்ளார். இதில் மனமுடைந்த பாலமுருகன், பூச்சிக் கொல்லி மருந்தைக் குடித்துள்ளார். பின்னர் சிகிச்சைக்காக விழுப்புரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் பிரம்மதேசம் போலீஸார் நேற்று (நவ.20) வழக்குப் பதிந்தனர்.

News November 21, 2025

BREAKING: மீண்டும் அதிமுகவில் இணைந்தார்

image

திருவாரூரில் அமமுக நிர்வாகி மணிகண்டன் 500-க்கும் மேற்பட்ட தனது ஆதரவாளர்களுடன் அதிமுகவில் இணைந்துள்ளார். Ex அமைச்சர் காமராஜ் முன்னிலையில், தன்னை மீண்டும் அதிமுகவில் இணைத்து கொண்ட அவர், மீண்டும் தாய்க் கழகத்தில் இணைந்ததில் மகிழ்ச்சி எனக் கூறினார். NDA கூட்டணியிலிருந்து TTV விலகிய பிறகு சென்னை, தஞ்சை, வேலூர், சேலம் உள்ளிட்ட பல மாவட்டங்களிலிருந்து <<18211919>>அமமுக நிர்வாகிகள்<<>> அதிமுகவில் ஐக்கியமாகி வருகின்றனர்.

News November 21, 2025

கில்லுக்கு இன்று பிட்னஸ் டெஸ்ட்

image

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கொல்கத்தா டெஸ்டில் கழுத்தில் ஏற்பட்ட பிரச்சனையால் சுப்மன் கில் பாதியில் வெளியேறினார். இதனால் கவுகாத்தியில் நடக்கும் 2-வது டெஸ்டில் அவர் விளையாடுவதும் கேள்விக்குறியாக உள்ளது. இந்நிலையில் அவருக்கு இன்று பிட்னஸ் டெஸ்ட் எடுக்கப்படுகிறது. இதன் முடிவில் கில் நாளை தொடங்கும் 2-வது டெஸ்டில் விளையாடுவாரா, மாட்டாரா என்பது தெரியவரும்.

error: Content is protected !!