News April 28, 2025
சென்னையில் பாகிஸ்தானியர் காலமானார்

சென்னையில் ஹாஸ்பிடலில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த பாகிஸ்தானியர் காலமானார். பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானியர்கள் உடனே வெளியேற வேண்டும் என மத்திய, மாநில அரசுகள் உத்தரவிட்டிருந்தன. இந்நிலையில், உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்த பாகிஸ்தானியர் உயிரிழந்தார். இறந்த நபரின் உடலையும், அவரின் தாயையும் பாகிஸ்தானுக்கு அனுப்ப அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
Similar News
News November 16, 2025
வாழ்க்கையை மாற்றும் பழக்கங்கள்

உங்களுக்குப் புதிய வாழ்க்கை தேவையில்லை. சில நல்ல பழக்கவழக்கங்கள் மட்டுமே தேவை. சிறிய, நிலையான செயல்கள் நம் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்குகின்றன. என்ன பழக்கத்தை வழக்கமாக மாற்ற வேண்டும் என்று, மேலே போட்டோக்களில் பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE பண்ணுங்க.
News November 16, 2025
தமிழகத்திலும் பிஹார் ஃபார்முலா

பிஹாரில் NDA வெற்றிக்கு சிராக் பஸ்வானின் LJP(RV) முக்கிய காரணமாக அமைந்தது. அதேபோல், தமிழகத்திலும் பட்டியலின கட்சிகளை ஒருங்கிணைத்து அவர்களின் வாக்குகளை பெற அமித்ஷா முடிவெடுத்துள்ளாராம். பிஹாரில் பட்டியலின கட்சிகள் முக்கிய அரசியல் சக்தியாக மாறியுள்ளன. ஆனால், TN-ல் பட்டியலின கட்சிகள் வளருவதை திமுக உள்ளிட்ட பெரிய கட்சிகள் விரும்புவதில்லை என்றுசொல்லி பிரசாரம் மேற்கொள்ள அமித்ஷா திட்டமிட்டுள்ளாராம்.
News November 16, 2025
போன் திருடுப்போனால் இங்கே மீட்கலாம்!

மொபைல் போன்கள் தொலைந்தாலோ, திருடப்பட்டாலோ மத்திய அரசின் ‘www.sanchar saathi.gov.in’ என்ற இணையதளம் வாயிலாக மீட்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தில் இதுவரை திருடுப்போன 41,229 போன்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சைபர் மோசடி அழைப்புகள், உங்கள் பெயரில் யாராவது சிம் கார்டு வாங்கி இருப்பதை தெரிந்து கொள்ளவும் மேற்கூறிய இணையதளத்தை அணுகலாம்.


