News May 15, 2024

டி20 தொடரை கைப்பற்றிய பாகிஸ்தான்

image

அயர்லாந்து எதிரான மூன்றாவது டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. முதலில் களமிறங்கிய அயர்லாந்து 178/7 ரன்களைச் சேர்த்தது. சிறப்பாக பந்துவீசிய ஷாஹின் அஃப்ரிடி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பின்னர் ஆடத்தொடங்கிய பாகிஸ்தான், 17 ஓவர்களில் 4 விக்கெட்டை இழந்து இலக்கை எட்டியது. இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் 2-1 என்ற கணக்கில் அயர்லாந்தை வீழ்த்தி டி20 தொடரை கைப்பற்றியது.

Similar News

News March 15, 2026

விலை குறைந்தது.. காலையிலேயே மகிழ்ச்சி

image

கேஸ் தட்டுப்பாட்டால் காய்கறிகளின் கொள்முதலை ஹோட்டல்கள் வெகுவாக குறைத்துள்ளன. இதனால் கோயம்பேடு, மதுரை, ஒசூர் உள்ளிட்ட முக்கிய சந்தைகளில் காய்கறிகள் தேக்கம் அடைந்துள்ளன. இதனிடையே, தக்காளி 1 கிலோ ₹5 – ₹8-க்கு விற்பனையாகிறது. சில்லறை கடைகளில் ₹10 – ₹12-க்கே தக்காளி விற்பனையாவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதேநேரம், வியாபாரிகள் & விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

News March 15, 2026

கட்சி சொல்லுமிடத்தில் நிற்பேன்: அண்ணாமலை

image

வரும் தேர்தலில் இந்த தொகுதியில் நில் என்று கட்சி கூறினால், அங்கு நிற்பேன் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுவரை தான் தேர்தலில் போட்டியிடுகிறேன் என்று வாய்திறந்து சொன்னதில்லை என்றும் கூறியுள்ளார். கட்சியின் கட்டளைப்படி தெருமுனை பிரசாரத்தை தான் செய்துவருவதாகவும் அவர் தெரிவித்தார். முன்னதாக, சிங்காநல்லூர் தொகுதியில் <<19379037>>அண்ணாமலை<<>> போட்டியிட விருப்பம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

News March 15, 2026

ஒரு மாவட்டமே திமுகவுக்கு கிடையாதா?

image

தொகுதிப் பங்கீட்டில் திமுக கூட்டணியில் விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் புகைச்சல் உண்டாகியுள்ளது. இந்நிலையில், நாகையில் உள்ள 3 தொகுதிகளும் கூட்டணி கட்சிகளின் வசமே செல்ல வாய்ப்புள்ளதாக கூறப்படுவதால், திமுகவினர் அதிருப்தியில் உள்ளனராம். 2 தொகுதிகளை கம்யூனிஸ்ட் கட்சிகளும், ஒரு தொகுதியை காங்., கட்சியும், மேலும், விசிகவும் ஒரு தொகுதியை கேட்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

error: Content is protected !!