India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

பாமகவின் செயல் தலைவராக ஸ்ரீகாந்தி செயல்படுவார் என ராமதாஸ் அறிவித்துள்ளார். தருமபுரியில் நடைபெற்ற கட்சியின் கூட்டத்தில் பேசிய அவர், கட்சிக்கும் தனக்கும் ஸ்ரீகாந்தி பாதுகாப்பாக இருப்பார் என்றார். பாமக இளைஞரணி செயலாளராக தமிழ்க்குமரன் சிறப்பாக செயல்படுவார் என தெரிவித்தார். முன்னதாக செயல் தலைவர் பதவியிலிருந்து அன்புமணியை நீக்கிய ராமதாஸ், அன்புமணி கட்சிக்காக எதுவும் செய்யவில்லை என குற்றம்சாட்டினார்.

அமெரிக்கா மற்றும் சீனா இடையே கடந்த சில மாதங்களாக வர்த்தக பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில், தென்கொரிய உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக செல்லும் டிரம்ப், அங்கு சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்து பேச உள்ளார். சீன அதிபருடன் பேச நிறைய விஷயங்கள் உள்ளதாக தெரிவித்துள்ள அவர், இந்த சந்திப்பின் போது தைவான் பற்றி பேசுவேன் என்றும், இது ஒரு நல்ல சந்திப்பாக நடக்கும் என நம்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு பற்றி கேள்வி கேட்டதே குற்றம் என அமைச்சர் <<18095753>>துரைமுருகன்<<>> நினைப்பது நியாயமா என்று செல்வப்பெருந்தகை கேள்வி எழுப்பியுள்ளார். நல்லாட்சி நடக்கும்போது, அதிகாரிகள் இப்படி செய்வது வேதனையாக உள்ளதாக தெரிவித்த அவர், துரைமுருகனின் கருத்து வருத்தமளிப்பதாக கூறினார். நல்ல ஆட்சிக்கு குந்தகம் விளைவிக்க கூடாது என்பதற்காகவே அமைதியாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஆஸி.,க்கு எதிரான 3-வது ODI-ல் இந்திய கேப்டன் சுப்மன் கில் 24 ரன்களுக்கு அவுட்டானார். 237 ரன்களை துரத்தும் இந்திய அணி, தற்போது 10.2 ஓவர்களில் 69/1 ரன்களை எடுத்து விளையாடி வருகிறது.

*ஒரு நாளுக்கு ₹50,000-க்கு மேல் டெபாசிட் செய்தால் பான் கார்டு விவரம் கட்டாயம்.
*Savings Account-ல் ஆண்டுக்கு ₹10 லட்சத்துக்கு மேல் டெபாசிட் செய்தால், வங்கி தரப்பில் IT-க்கு தெரிவிக்கப்படும்.
*Current Account-ல் ஆண்டுக்கு ₹50 லட்சத்துக்கு மேல் டெபாசிட் செய்தால், வங்கி தரப்பில் IT-க்கு தெரிவிக்கப்படும்.
*இந்த டெபாசிட்களுக்கு உரிய ஆவணங்கள் இல்லையென்றால் சிக்கல் ஏற்படும். ஷேர் பண்ணுங்க

ஆந்திராவின் காக்கிநாடா அருகே மச்சிலிப்பட்டினம் – கலிங்கப்பட்டினத்துக்கு இடையே அக்.28 மாலை அல்லது இரவில் Montha புயல் கரையை கடக்கும் என IMD அறிவித்துள்ளது. இன்று இரவு முதலே கடலில் காற்றின் வேகம் அதிகரிக்கும் என்றும், புயல் கரையை கடக்கும்போது அதிகபட்சம் 110 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது. ஆந்திராவில் புயல் கரையை கடந்தாலும் தமிழகத்தில் மழை பெய்யும் எனவும் கணித்துள்ளது.

கல்வியும், மருத்துவமும் நாட்டில் இலவசம் என்றாலும், குழந்தைகளின் கல்வித்தரத்தை மேம்படுத்த பெற்றோர்கள் பெரும் பணத்தை செலவு செய்கின்றனர். அந்த வகையில், 2025 – 26 ஆண்டு கல்வி கட்டணத்தின் அடிப்படையில் நாட்டில் அதிக கட்டணம் வசூலிக்கும் ஸ்கூல்களின் பட்டியலை மேலே கொடுத்துள்ளோம். அவை என்னென்ன என அறிய போட்டோவை வலது பக்கமாக Swipe பண்ணி பாருங்க.

வேலூர், நாமக்கல், நீலகிரி, புதுக்கோட்டை, பெரம்பலூர், ராணிப்பேட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, திருப்பத்தூர், தேனியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் நிறைவடைந்துவிட்டது. அதேநேரம் இம்மாவட்டங்களில் நவ.14-க்குள் கலெக்டர் ஆபிஸில் மக்கள் குறை தீர்க்கும் நாளில் மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பிக்கலாம். இதனிடையே, வரும் 28-ம் தேதி ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்கள் நடைபெறும் இடங்களின் விவரங்களை அறிய <

தமிழகத்தில் அக்.1 முதல் 25-ம் தேதி வரை பெய்த மழைக்கு, 31 பேர் உயிரிழந்துள்ளதாக அமைச்சர் KKSSR தெரிவித்துள்ளார். உயர் அதிகாரிகளுடன், மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து, ‘மோன்தா’ புயலை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். முகாம்கள் தயாராக உள்ளதாகவும், ஏரிகளின் நீர்மட்டத்தை கண்காணித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

2024-ல் தவெக உதயம், புத்தக விழா ஒன்றில் திருமாவுக்கு தூதுவிட்ட விஜய், 2025-ல் கட்சியின் ஓராண்டு நிறைவு, வீட்டிற்கு வரவைத்து வெள்ள நிவாரணம், 3 சனிக்கிழமைகள் பரப்புரை, 2 முறை கல்வி விருதுகள் என விஜய்யின் அரசியல் நுழைவை சுருக்கிவிடலாம். இந்த ஒன்றரை வருடத்தில் ஒருமுறை கூட செய்தியாளர்களை விஜய் சந்திக்கவில்லை (பின்னால் வர வேண்டாம் என கூறியது தவிர). இனி விஜய் ஊடகங்களை சந்தித்தால் என்ன கேள்வி கேட்கலாம்?
Sorry, no posts matched your criteria.