India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தேர்தலை நடத்துவது குறித்து ஐ.நா கருத்து சொல்ல தேவையில்லை என அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் சுதந்திரமான, நியாயமான முறையில் வாக்குப்பதிவு நடைபெறும் என்று நம்புவதாக ஐ.நா செய்தி தொடர்பாளர் ஸ்டீபன் கூறியிருந்தார். இதற்கு தேர்தல் சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடப்பதை இந்திய மக்கள் உறுதி செய்வார்கள், அது குறித்து ஐ.நா கவலைப்படத் தேவையில்லை என ஜெய்சங்கர் பதிலடி கொடுத்துள்ளார்.

ஐபிஎல் ஆரஞ்ச் நிற தொப்பியை வெல்லும் வீரர்கள் பட்டியலில் ஆர்சிபி வீரர் கோலி தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். இதுவரை நடந்த போட்டிகளில் 203 ரன்களை விளாசியுள்ளார். அவருக்கு பிறகு 2வது இடத்தில் 181 ரன்கள் குவித்துள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் ரியான் பராக்கும், 3வது இடத்தில் 167 ரன்கள் எடுத்துள்ள ஹைதராபாத் வீரர் கிளாசன் உள்ளனர். குஜராத் வீரர் ஷூப்மன் கில் 4ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

சோதனை மூலம் திமுகவை யாராலும் அச்சுறுத்த முடியாது என அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். திமுக நிர்வாகிகளை சோதனை மூலம் முடக்கிவிட்டால், தேர்தலில் ஆதாயம் அடையலாம் என சிலர் நினைக்கிறார்கள் என்று விமர்சித்த அவர், திமுக எமர்ஜென்சியை பார்த்த இயக்கம் இதற்கெல்லாம் அஞ்சாது என சூளுரைத்தார். முன்னதாக நெல்லை மாவட்டச் செயலாளர் ஆவுடையப்பன் அலுவலத்தில் ஐ.டி அதிகாரிகள் சோதனையிட்டனர்.

மோடி மூன்றாவது முறையாக பிரதமராக வந்தால் என்ற கேள்வியுடன் பிரபல வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் தனது எக்ஸ் பக்கத்தில Pay PM விலைப்பட்டியலை பகிர்ந்து விமர்சித்துள்ளார். அமலாக்கத்துறை, வருமானவரித்துறை, சிபிஐ சோதனைகளில் இருந்து தப்பிக்க Just ₹56 கோடி மட்டுமே, குண்டும் குழியுமாக ரோடு போட தேசிய நெடுஞ்சாலை ஒப்பந்தம் எடுக்க ₹176 கோடி மட்டுமே என பல்வேறு விவகாரங்களை சுட்டிக்காட்டி விமர்சித்துள்ளார்.

அரசு நடுநிலைப் பள்ளிகளில் ‘டிஜிட்டல்’ வழி கற்பித்தலுக்கு முக்கியத்துவம் தருமாறு ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. பல பள்ளிகளில் ஒரே ஆசிரியர் மட்டும் பணியில் இருப்பதால் கற்பித்தல் பணியை மேம்படுத்த முடியவில்லை. இதனால் மாணவர் சேர்க்கையும் குறைகிறது. எனவே, ஒவ்வொரு பள்ளியிலும் டிஜிட்டல் வழி பாடம் நடத்தும் வகையில் பிராட்பேண்ட் இணையதள இணைப்பை பெற வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

பையா-2 திரைப்படம் குறித்து இயக்குநர் லிங்குசாமி புதிய தகவலை வெளியிட்டுள்ளார். கார்த்தி, தமன்னா நடிப்பில் கடந்த 2010ஆம் ஆண்டு வெளியான பையா படம், நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இப்படத்தின் 2ஆம் பாகத்தை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து லிங்குசாமி கூறுகையில், “பையா 2 கதையை தயார் செய்துவிட்டேன். பையா 2இல் வேறு காதலர்கள் உண்டு. அந்த படத்திலும் கார் உண்டு” என்றார்.

தேர்தல்களில் பலமுறை போட்டியிட்டு தோல்வியை சந்தித்தாலும், மனம் தளராமல் தொடர்ந்து போட்டியிடுவதை சிலர் வழக்கமாக கொண்டுள்ளனர். மேட்டூரை சேர்ந்த கே. பத்மராஜன், இதுவரை 238 முறை தோல்வியடைந்துள்ளார். இதில் வாஜ்பாய், நரசிம்மராவ், மன்மோகன், கருணாநிதி, ஜெயலலிதாவுக்கு எதிராக தோல்வியடைந்ததும் அடங்கும். அதிகமுறை தோற்றதால் லிம்கா சாதனை புத்தகத்திலும் அவர் இடம்பிடித்துள்ளார்.

ம.பி.யின் இந்தூரைச் சேர்ந்த பரமானந்த் தோலானி இதுவரை 18 முறை போட்டியிட்டு தோல்வியடைந்துள்ளார். 8 முறை மக்களவைத் தேர்தலிலும், 8 முறை சட்டப்பேரவைத் தேர்தலிலும் தோல்வியை சந்தித்துள்ளார். அவரது தந்தையும் 30 ஆண்டுகளாக போட்டியிட்டு தோல்வியடைந்துள்ளார். அவர் மறைவுக்கு பிறகு தோலானி போட்டியிடுகிறார். குடும்பத்தில் யாரேனும் எம்பி, எம்எல்ஏ ஆகும் வரை போட்டியிடுவேன் என தோலானி கூறியுள்ளார்.

மகாராஷ்டிர மாநிலம் புனேயைச் சேர்ந்த விஜய் பிரகாஷ் கோடேகர், இதுவரை 24 முறை போட்டியிட்டு தோல்வியை சந்தித்துள்ளார். முன்னாள் மாநில அரசு ஊழியரான அவர், ஒவ்வொரு தேர்தலிலும் வேறுவேறு பெயரில் போட்டியிட்டுள்ளார். இதேபோல், ஹைதராபாத்தை சேர்ந்த ஐடி ஊழியரான ரவீந்தர் உப்புலா, 2014 முதல் தேர்தல்களில் போட்டியிட்டு வருகிறார். இந்த மக்களவைத் தேர்தலிலும் அவர் சுயேச்சையாக போட்டியிடுகிறார்.

உத்தர பிரதேச மாநிலம் பரேலியைச் சேர்ந்த காகா ஜோகிந்தர் சிங், 300 முறை தேர்தல்களில் போட்டியிட்டு தோல்வியை சந்தித்துள்ளார். இதில் முன்னாள் குடியரசுத் தலைவர் சங்கர் தயாள் சர்மாவுக்கு எதிராக போட்டியிட்டு தோல்வியடைந்தது, 14 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் போட்டியிட்டு தோல்வியடைந்ததும் அடங்கும். பலமுறை டெபாசிட் இழந்துள்ளார். இவர் கடந்த 1998ஆம் ஆண்டில் காலமானார்.
Sorry, no posts matched your criteria.