News April 5, 2024

தொடர் தோல்வி கண்டும் துவளாதவர்கள் (1)

image

தேர்தல்களில் பலமுறை போட்டியிட்டு தோல்வியை சந்தித்தாலும், மனம் தளராமல் தொடர்ந்து போட்டியிடுவதை சிலர் வழக்கமாக கொண்டுள்ளனர். மேட்டூரை சேர்ந்த கே. பத்மராஜன், இதுவரை 238 முறை தோல்வியடைந்துள்ளார். இதில் வாஜ்பாய், நரசிம்மராவ், மன்மோகன், கருணாநிதி, ஜெயலலிதாவுக்கு எதிராக தோல்வியடைந்ததும் அடங்கும். அதிகமுறை தோற்றதால் லிம்கா சாதனை புத்தகத்திலும் அவர் இடம்பிடித்துள்ளார்.

Similar News

News February 11, 2026

தி.மலை: செலவு இல்லாமல் கேஸ் போடலாம்

image

தி.மலை மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட சேவைகள் மையம் இயங்கி வருகிறது. நீங்கள், அங்கு சென்று சட்ட ஆலோசனை மற்றும் வழக்குகளுக்கான உதவிகளை இலவசமாக பெறலாம். மாவட்ட இலவச சட்ட உதவி மையம் – 04175-232845, (தமிழ்நாடு) அவசர உதவி – 044–25342441, TOLL FREE -1800 4252 441,சென்னை ஐகோர்ட் – 044-29550126, ஐகோர்ட் மதுரை கிளை – 0452-2433756 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளுங்கள். இந்த தகவலை ஷேர் பண்ணுங்க.

News February 11, 2026

ஆபிஸில் சீக்ரெட்டை ஷேர் பண்றீங்களா?

image

ஆபிஸில் சக ஊழியர்களிடம் சீக்ரெட்களை பகிர்வது சரியானது அல்ல என சைக்காலஜிஸ்டுகள் எச்சரிக்கிறார்கள். குறிப்பாக, பர்சனல் லைஃப், நிதி நிலை குறித்து பேசவே கூடாதாம். இதற்கு சில காரணங்களும் சொல்கிறார்கள். சம்பளம் குறித்து பேசுவது பொறாமைக்கு வழிவகுக்கலாம். பர்சனல் விஷயங்களை பகிர்ந்தால், ஏதோ ஒரு மனஸ்தாபத்தில் பிரிய, நம்மை குறித்த சீக்ரெட் வெளியாகிவிடுமோ என்ற தேவையற்ற பதற்றத்தை கொடுக்கும். உஷாரா இருங்க!

News February 11, 2026

நடிகர் ராமராஜன் விவாகரத்து.. பிரபல நடிகை கண்ணீர்

image

ராமராஜன் – நளினி தம்பதி கடந்த 2000-ல் விவாகரத்து பெற்றனர். ராமராஜனும் சேது பட நடிகை அபிதாவும் காதலிப்பதே நளினி உடனான விவாகரத்திற்கு காரணம் என அப்போது கிசுகிசுக்கப்பட்டது. இதுகுறித்து, 25 ஆண்டுகளுக்கு பின், அபிதா மனம் திறந்துள்ளார். ராமராஜன் தன்னை திருமணம் செய்யப் போவதாக வதந்தி பரவியபோது, தினமும் அழுது கொண்டிருந்தேன் என அபிதா குறிப்பிட்டுள்ளார். மனதளவில் பாதிக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

error: Content is protected !!