News June 18, 2024

‘சூப்பர் 8’ போட்டிகள் சவாலாக இருக்கும்: ரோஹித் ஷர்மா

image

சூப்பர் 8 போட்டிகள் சவால் நிறைந்ததாக இருக்கும் என இந்திய அணி கேப்டன் ரோஹித் ஷர்மா தெரிவித்துள்ளார். முதல் போட்டிக்கு பின்னர் 3-4 நாளில் 2 போட்டிகளில் விளையாட வேண்டிய சூழ்நிலை உள்ளதாக தெரிவித்த அவர், எத்தகைய சூழ்நிலையையும் சமாளித்து சிறப்பான ஆட்டத்தை இந்திய அணி வெளிப்படுத்தும் என்றார். இந்திய அணி 20ஆம் தேதி ஆப்கனையும், 22இல் வங்கதேசத்தையும், 24இல் ஆஸி., அணியையும் எதிர்கொள்ள இருக்கிறது.

News June 18, 2024

இசைக் கலைஞர்களுக்கு பேருந்துகளில் கட்டணச் சலுகை

image

இசைக் கலைஞர்களுக்கு நடைமுறையில் உள்ள பேருந்து சலுகைகளை தொய்வின்றி வழங்குமாறு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. நாட்டுப்புறக் கலைஞர்கள் உள்ளிட்டோர் தொழில்முறையாக பயணிக்கும் போது 50% கட்டணச் சலுகை வழங்குமாறும், இசைக் கருவிகளை கட்டணமின்றி அரசுப் பேருந்துகளில் எடுத்துச் செல்லலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. சிவகங்கையில் இசைக்கருவியுடன் பயணிக்க அனுமதி மறுத்தது சர்ச்சையான நிலையில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

News June 18, 2024

ஆதார்- பான் எண்களை இணைக்க வேண்டுமா?

image

ஆதார்-பான் எண்களை இணைக்கும்படி மக்களை மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதை யார் உதவியும் இல்லாமல் நீங்களே செய்து கொள்ளலாம். <>https://www.incometax.gov.in/iec/foportal/<<>> இணையதளத்துக்கு சென்று, Link Adhaar என குறிப்பிடப்பட்டு இருக்கும் இடத்தை அழுத்தினால், புதிய பக்கம் திறக்கும். அதில் பான், ஆதார் எண்களை உள்ளிட்டால் விவரம் சரியாக இருக்கும்பட்சத்தில் 2 எண்களும் இணைக்கப்படும்.

News June 18, 2024

விஜய் கட்சியை கூட்டணிக்கு அழைத்த செல்லூர் ராஜூ

image

எம்ஜிஆர் போல திரைத்துறையில் சம்பாதித்த பணத்தை மக்களுக்கு செலவு செய்ய நடிகர் விஜய் நினைக்கிறார் என்று செல்லூர் ராஜூ பாராட்டுத் தெரிவித்துள்ளார். மேலும், விஜய் அதிமுக கூட்டணிக்கு வந்தால் நல்லது எனக் கூறிய அவர், கூட்டணி பேச்சுவார்த்தை குறித்து இபிஎஸ் முடிவு செய்வார் என தெரிவித்தார். தவெக – நாதக கூட்டணி அமைக்க முயற்சி நடந்து வரும் நிலையில், செல்லூர் ராஜூ மறைமுகமாக கூட்டணிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

News June 18, 2024

விலங்குகளை பாதுகாக்க சிறுவனின் புதிய கண்டுபிடிப்பு

image

தண்டவாளங்களை கடக்கும் போது, ரயிலில் அடிபட்டு வனவிலங்குகள், கால்நடைகள் உயிரிழப்பது தொடர் கதையாகி வருகிறது. இதற்கு தீர்வாக, தஞ்சாவூரைச் சேர்ந்த 10ஆம் வகுப்பு படிக்கும் அரசுப் பள்ளி மாணவன் சாம் ஜபர்சன், புதிய தானியங்கி கருவியை உருவாக்கி அசத்தியுள்ளார். இந்த கருவி, அபாய ஒலி எழுப்பி விலங்குகளை விரட்டும் அல்லது தண்ணீரை பீய்ச்சி அடித்து அவற்றை அப்புறப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

News June 18, 2024

சரத் பவார் அணிக்கு தாவும் 19 என்சிபி எம்எல்ஏக்கள்?

image

மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவாரின் என்சிபியில் உள்ள 19 எம்எல்ஏக்கள் மழைக்காலக் கூட்டத் தொடருக்கு பின் சரத் பவார் அணிக்கு மாற உள்ளதாக அக்கட்சியின் எம்எல்ஏ.வும் சரத் பவாரின் பேரனுமான ரோஹித் பவார் கூறியுள்ளார். கடந்தாண்டு ஜூலையில் கட்சி பிளவுபட்டபோது, அஜித் பவாருடன் 40 எம்எல்ஏக்கள் சென்றனர். வரும் அக்டோபரில் அங்கு தேர்தல் வர உள்ள நிலையில், மீண்டும் அணி மாறும் படலம் இருக்கும் என கூறப்படுகிறது.

News June 18, 2024

பள்ளிகளில் சாதி வன்முறையை தடுக்க பரிந்துரை

image

அரசு பள்ளிகளில் சாதி அடையாளங்களை உடனடியாக நீக்க நீதிபதி சந்துரு குழு அரசுக்கு பரிந்துரைத்துள்ளது. அதில், மாணவர்களின் வருகை பதிவேட்டில் சாதிப் பெயர் இடம்பெறக்கூடாது, வகுப்பறைகளில் மாணவர்களை பெயர் வரிசைப்படி மட்டுமே அமர வைக்க வேண்டும், குறிப்பிட்ட சாதி ஆதிக்கம் உள்ள பகுதிகளில் அதே சமூகத்தினரை பள்ளித் தலைமை ஆசிரியர்களாக நியமிக்கக்கூடாது உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகளை அவர் வழங்கியுள்ளார்.

News June 18, 2024

ஒரே நேரத்தில் நீட் தேர்வு எழுதி பாஸ் ஆன தந்தை, மகள்

image

டெல்லியைச் சேர்ந்த 50 வயதான விகாஷ் மங்கோத்ரா என்பவர் நீட் யுஜி 2024 தேர்வு எழுதி பாஸ் ஆகியுள்ளார். அவரின் மகள் மீம்மன்சானாவும், நொய்டா மையத்தில் நீட் தேர்வு எழுதி தேர்ச்சியாகியுள்ளார். இதுபோல தந்தையும், மகளும் ஒரே நேரத்தில் நீட் தேர்வு எழுதி தேர்ச்சியாகி இருப்பது அனைவரையும் ஆச்சரியமடையச் செய்துள்ளது. மகளை ஊக்கப்படுத்தவே தேர்வெழுதியதாக அவர் கூறியுள்ளார்.

News June 18, 2024

INDIA கூட்டணி தலைவர்களுக்கு சுவாதி மாலிவால் கடிதம்

image

ராகுல், சரத் பவார், அகிலேஷ் உள்ளிட்ட INDIA கூட்டணி கட்சி தலைவர்களுக்கு ஆம் ஆத்மி எம்.பி சுவாதி மாலிவால் கடிதம் எழுதியுள்ளார். அதில், நீதிக்காக போராடி வரும் தான் பல அவமானங்களை சந்தித்ததாகவும், தனது கருத்தை கேட்பீர்கள் என்ற நம்பிக்கையுடன் காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். பெண்களின் முன்னேற்றம் குறித்து, தொடர்ந்து பேசி வரும் அவர்கள் தனது கருத்தை கேட்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

News June 18, 2024

CCTV: நடு ரோட்டில் கொடூரக் கொலை

image

மகாராஷ்டிராவில் நடு ரோட்டில் இளம் பெண்ணை இளைஞர் ஒருவர் ஸ்பானரால் அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலை செய்தபின் பிரேத உடலைப் பார்த்து, “ஏன் எனக்கு இப்படி செய்தாய்?” என்று அந்த கொலையாளி கூச்சலிட்ட சம்பவங்கள் சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ளன. இளகிய நெஞ்சம் படைத்தோர் இந்த <>வீடியோ காட்சியை<<>> பார்க்க வேண்டாம்.

error: Content is protected !!