India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

பங்கு வர்த்தகத் தளமான ஜீரோதா இணை நிறுவனர் நிகில் காமத் தனது முதல் சம்பளம் குறித்து இதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “என்னுடைய 17 வயதில் பெங்களூருவில் உள்ள கால்சென்டரில் பணிபுரிந்த போது மாதச் சம்பளமாக ரூ.8,000 பெற்றேன். பிரிட்டனை சேர்ந்த விபத்துக் காப்பீடு விற்பனை நிறுவனத்தில் மாலை 4 மணி முதல் இரவு 1 மணி வரை பணிபுரிவேன்” என்றார். நிகில் காமத் 2022-23இல் ஆண்டு சம்பளமாக ரூ.72 கோடி பெற்றிருந்தார்.

சிங்கம் 4ஆம் பாகம் குறித்து, இயக்குநர் ஹரி சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்துள்ளார். நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், “3 பாகங்களும் மிகப்பெரிய வெற்றி பெற்றதால், 4ஆம் பாகத்தையும் ஹிட்டாக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன். அதனால், அந்த படத்திற்காக அதிக நேரம் செலவிட்டு கடினமாக உழைக்க வேண்டி இருக்கிறது. ஆனால், இப்போதைக்கு சிங்கம் 4 குறித்த எந்த ஐடியாவும் இல்லை. காலம் தான் தீர்மானிக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.

கோவை அதிமுக வேட்பாளரை போல கோட்டாவில் படித்து வரவில்லையென அண்ணாமலை நேற்று பேட்டியளித்தார். ஆனால் சிங்கை ராமச்சந்திரனின் தந்தை கோவிந்தராஜ், 1991-1996ஆம் ஆண்டு காலத்தில் அதிமுக எம்.எல்.ஏவாக இருந்தவர். மேலும் அவர் இறந்த போது சிங்கை ராமச்சந்திரனுக்கு 11 வயது. அவர் எப்படி எம்.எல்.ஏ கோட்டாவில் இடம்பெற்றிருக்க முடியும். அதே போல, IIMஇல் எம்.எல்.ஏ கோட்டா இருந்ததா என அதிமுகவினர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

நாம் தமிழர் கட்சியின் சைதாப்பேட்டை தொகுதி செயலாளர் ராஜ்குமார் கட்சியில் இருந்து விலகி சீமானுக்கு அதிர்ச்சி கொடுத்திருக்கிறார். 13 ஆண்டுகளாக கட்சியில் தீவிரமாக செயலாற்றி வந்த அவர், திடீரென அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்திருக்கிறார். கட்சிக்காக உண்மையாக உழைக்க நினைப்பவர்கள் ஓரம் கட்டப்படுவதாக ராஜ்குமார் குற்றம்சாட்டி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.

மாரடைப்பு காரணமாக நகைச்சுவை நடிகர் சேஷு இன்று காலமானார். ‘லொள்ளு சபா’ நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்ற இவர், 2002இல் ‘துள்ளுவதோ இளமை’ படத்தின் மூலம் அறிமுகமானார். பின், சந்தானத்துடன் இணைந்து பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார். மேலும், கொரோனா மற்றும் வெள்ள பாதிப்பின் போது மக்களுக்கு தேவையான பல்வேறு நிவாரண உதவிகளை செய்து வந்தார். அவரது மறைவு ரசிகர்கள், பொதுமக்கள் என அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மகளிருக்கு வழங்கும் உரிமைத் தொகையை எப்போது வேண்டுமானாலும் திமுக அரசு நிறுத்திவிடுமென அண்ணாமலை பொய் பிரசாரம் செய்து வருவதாக அமைச்சர் அன்பில் மகேஸ் குற்றம்சாட்டியுள்ளார். ஒரத்தநாட்டில் திமுக வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் பேசிய அவர், ‘தஞ்சாவூரில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில் அதிக வாக்குகளை பெற்றுத் தரும் திமுக மாவட்டச் செயலாளருக்கு, எனது செலவில் 6 பவுன் சங்கிலி பரிசாக வழங்கப்படும்’ என்றார்.

கடந்தாண்டு ஐபிஎல் இறுதிப் போட்டியில் CSK அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய ஜடேஜாவுக்கு, ரசிகர்கள் இன்று மரியாதை செலுத்தவுள்ளனர். குஜராத் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசி பந்தில் பவுண்டரியை விளாசி சென்னை அணிக்கு வெற்றியைத் தேடித் தந்தார். இந்நிலையில், இன்று நடைபெறும் குஜராத் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில், ரசிகர்கள் அனைவரும் எழுந்து நின்று ஜடேஜாவை கைதட்டி வரவேற்க திட்டமிட்டுள்ளனர்.

லொள்ளு சபா நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகர் சேஷு, உடல் நலக் குறைவால் காலமானார். 10 நாள்களுக்கு முன் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அதன் காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதயத்தில் மூன்று அடைப்புகள் இருந்ததால் சிகிச்சை பலனின்றி சேஷு இன்று காலமானார். கடைசியாக இவர் நடித்த ‘வடக்குப்பட்டி ராமசாமி’ மிகுந்த வரவேற்பை பெற்றது.

மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்குவது குறித்து நாளை காலை 9 மணிக்குள் முடிவெடுக்க வேண்டுமென தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பம்பரம் சின்னம் கோரி வைகோ தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, பம்பரம் சின்னம், அங்கீகரிக்கப்பட்ட மற்றும் பொதுச்சின்னம் பட்டியலில் இல்லை. எனவே இதுகுறித்து தேர்தல் அலுவலர் முடிவெடுப்பார் என தேர்தல் ஆணையம் சார்பில் பதிலளிக்கப்பட்டது.

ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு அடுத்தடுத்து சிக்கல் எழுந்துள்ளது. ஓ.பன்னீர் செல்வம் என்ற பெயரில் நேற்று ஒருவர் வேட்பு மனுத்தாக்கல் செய்திருந்த நிலையில், இன்று அதே பெயர் கொண்ட மேலும் 3 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர். ஒரே பெயர் கொண்ட 5 சுயேச்சை வேட்பாளர்கள் தனி சின்னத்தில் போட்டியிடுவதால் குழப்பம் ஏற்பட வாய்ப்புள்ளது.
Sorry, no posts matched your criteria.