News March 26, 2024
நடிகர் சேஷு காலமானார்

லொள்ளு சபா நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகர் சேஷு, உடல் நலக் குறைவால் காலமானார். 10 நாள்களுக்கு முன் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அதன் காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதயத்தில் மூன்று அடைப்புகள் இருந்ததால் சிகிச்சை பலனின்றி சேஷு இன்று காலமானார். கடைசியாக இவர் நடித்த ‘வடக்குப்பட்டி ராமசாமி’ மிகுந்த வரவேற்பை பெற்றது.
Similar News
News November 15, 2025
வாக்காளர் படிவம் திரும்பப்பெறும் பணி கலெக்டர் ஆய்வு

வேலூர் மாவட்ட தேர்தல் அலுவலர் சுப்புலெட்சுமி இன்று (நவ.15) எண். 40. காட்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வி.ஜி.ராவ் நகர் பகுதியில் பூர்த்தி செய்யப்பட்ட வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த கணக்கீட்டு படிவங்களை திரும்பப்பெறும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது வாக்காளர் பதிவு அலுவலர் மாறன், உதவி வாக்காளர் பதிவு அலுவலர் ஜெகதீஸ்வரன் ஆகியோர் உடனிருந்தனர்.
News November 15, 2025
உங்கள் அறையை பிரகாசிக்க வைக்கும் 10 கலர்கள்

வீட்டை கண்கவர வைக்கும் வல்லமை வண்ணங்களுக்கு உண்டு. சரியான வண்ணம், ஒரு அறையை வெளிச்சம் அதிகமாக பரவச் செய்யவும், சிறிய அறையை பிரமாண்டமான இடமாக மாற்றவும் உதவும். இந்த 10 வண்ணங்கள் உங்கள் அறையை அப்படியே மாற்றிவிடும். அது என்னென்ன வண்ணங்கள் என்று தெரிஞ்சுக்க, மேலே பகிர்ந்துள்ள போட்டோஸை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE
News November 15, 2025
சொந்த கட்சி மீதே காங்கிரஸ் நிர்வாகிகள் அதிருப்தி: PM

தேர்தல் தோல்விக்கான காரணம் தெரியாமல் ECI மீது காங்கிரஸ் குற்றம்சாட்டி வருவதாக PM மோடி விமர்சித்துள்ளார். இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி போன்ற தலைவர்களிடம் பணியாற்றிவர்கள் இன்று மிகுந்த மனவருத்தத்தில் உள்ளதாக சூரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் தெரிவித்துள்ளார். மேலும் பிஹார் சட்டமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகளின் போலி முகத்திரை கிழிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.


