India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

▶மார்ச் – 29 | பங்குனி – 16
▶கிழமை: வெள்ளி ▶திதி: சதுர்த்தி
▶நல்ல நேரம்: காலை 09:30 – 10:30 வரை, மாலை 04:30 – 05:30 வரை
▶கெளரி நேரம்: காலை 12:30 – 01:30 வரை, மாலை 06:30 – 07:30 வரை
▶ராகு காலம்: நண்பகல் 10.30 – 12.00 வரை
▶எமகண்டம்: காலை 03:00 – 04:30 வரை
▶குளிகை: காலை 07:30 – 09:00 வரை
▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம்
▶சந்திராஷ்டமம்: உத்திரட்டாதி, ரேவதி

சீர்திருத்த நடவடிக்கைகளை துரிதப்படுத்தினால், 2047இல் இந்திய பொருளாதாரம் 8% வளர்ச்சி அடைய முடியும் என்று ஐஎம்எஃப் இந்திய நிர்வாக இயக்குநர் கிருஷ்ணமூா்த்தி தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், “8% பொருளாதார வளர்ச்சி என்பது கடினமானது. நிலம், தொழிலாளர், மூலதனம் உள்ளிட்ட துறைகளில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும். அத்துடன், உள்நாட்டு உற்பத்தியில் இந்தியா கவனம் செலுத்த வேண்டும்” எனக் கூறினார்.

மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் ஐந்து தொகுதிகளில் பாஜகவை வெற்றி பெற வைக்க திமுக ஒப்புக்கொண்டுள்ளதாக நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். குமரியில் பேசிய அவர், “திமுக – பாஜக இடையே ஒப்பந்தம் உள்ளது. அதன் காரணமாகவே பொன்முடி வழக்கில் தளர்வு ஏற்பட்டுள்ளது. பாஜகவை திமுக உண்மையாக எதிர்ப்பதாக இருந்தால், நேரடியாக மோதி இருக்க வேண்டும்; கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கியிருக்க கூடாது” என்றார்.

KKR அணியின் தலைமை பயிற்சியாளர் சந்திரகாந்த் பண்டிட்டின் ஸ்டிரிக்ட் அணுகுமுறையால் வெளிநாட்டு வீரர்கள் விரக்தி அடைந்துள்ளதாக முன்னாள் வீரர் டேவிட் வெய்சா கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், “முன்னாள் பயிற்சியாளர் மெக்கலத்தின் அணுகுமுறையில் இருந்து முற்றிலும் மாறுபட்டவராக சந்திரகாந்த் இருக்கிறார். உலகின் பல லீக் தொடர்களில் பங்கேற்றவர்களிடம் அவர் நடந்து கொள்ளக்கூடாது” என்றார்.

நடிகர் நவாசுதின் சித்திக் குழந்தைகளின் நலனுக்காக தனது மனைவி ஆலியாவுடன் மீண்டும் இணைந்து வாழ முடிவு செய்துள்ளார். கருத்துவேறுபாடு காரணமாகக் கடந்த 2020ஆம் ஆண்டு முதல் பிரிந்து வாழ்ந்துவந்த இருவரும் அவர்கள் குழந்தைகளோடு இருக்கும் புகைப்படத்தையும் சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளனர். அதனைப் பார்த்த நெட்டிசன்கள், திருமண வாழ்க்கையைத் தொடர இருவருக்கும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

உடலிலுள்ள நச்சுக்களை வெளியேற்றி, கிட்னியை தூய்மைப்படுத்த சிறுகண்பீளை குடிநீர் பருகலாம் என்று சித்த மருத்துவர் சிவராமன் பரிந்துரைக்கிறார். கைப்பிடி அளவு சிறுகண்பீளை செடியை வேருடன் எடுத்து, சுத்தம் செய்து 2 லிட்டர் நீரில் கொதிக்க வைத்து, சுண்ட காய்ச்சி நீராக பருகலாம். இந்த குடிநீரை 7 நாள்கள் குடித்தால் போதும், ரத்தம் சுத்தமாவதுடன் கிட்னியில் உள்ள பி.எச், உப்பு, நச்சுகள் அனைத்தும் வெளியேறிவிடுமாம்.

செந்தில் பாலாஜிக்கு பயந்துதான் கரூரில் போட்டியிடாமல், கோவை பக்கம் அண்ணாமலை சென்றதாக கனிமொழி கூறியுள்ளார். கரூரில் பேசிய அவர், “அண்ணாமலை பொய் மட்டுமே பேசி வருகிறார். எங்கள் தகுதி குறித்து பேச அண்ணாமலைக்கு அருகதை இல்லை. உடல்நிலை சரியில்லாத நிலையிலும் செந்தில் பாலாஜி சிறையில் வைக்கப்பட்டுள்ளார். ஜாமீன் மறுக்கப்படுகிறது. தேர்தல் முடிந்ததும் அவர் வெளியே வந்து விடுவார்” என்றார்.

காஸாவில் உடனடியாக போர்நிறுத்தம் கொண்டுவர கோரிய ஐ.நா பாதுகாப்பு சபையின் தீர்மானத்திற்கு இந்தியா வரவேற்பும் ஆதரவும் தெரிவித்துள்ளது. இது குறித்து பேசிய இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், “அனைத்து பணயக்கைதிகளையும் நிபந்தனையின்றி ஹமாஸ் விடுவிக்க வேண்டும். பாலஸ்தீனியர்களுக்கு பாதுகாப்பான வாழ்வு கிடைக்க ‘இருநாடு’ தீர்வை இந்தியா இப்போதும் முன்மொழிகிறது” என்றார்.

கடந்த சில நாள்களாக சிறுக ஏற்றம் கொண்டுவந்த ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.50,000 என வரலாற்று உச்சத்தை எட்டியுள்ளது. பொருளாதாரத்தின் நிலையற்ற தன்மை, உலகளாவிய பணவீக்கம், முதலீடு பார்வை, பெடரல் வங்கி வட்டி விகித உயர்வு போன்ற காரணங்களால் தங்கத்தின் மீதான முதலீடுகள் அதிகரித்துள்ளதாக என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இனிவரும் நாள்களில் தங்கம் விலை மட்டுமில்லாது வெள்ளியின் விலையும் புதிய உச்சத்தைத் தொடுமாம்.

*845 – பாரிஸ் நகரம் வைக்கிங்குகளால் சூறையாடப்பட்டது. *1857 – பிரிட்டன் ஆட்சிக்கெதிராக மங்கள் பாண்டே கிளர்ச்சியை ஆரம்பித்தார். *1849 – பஞ்சாபை பிரிட்டன் கைப்பற்றியது. *1973 – அமெரிக்கப் படைகள் வியட்நாமை விட்டு வெளியேறின. *2007 – நோர்வே நாட்டின் ஏபல் பரிசை (கணித நோபல் என்பர்) சீனிவாச வரதன் பெற்றார். * 1965 – கவிஞர் தமிழ்ஒளி மறைந்த நாள். 2008 – புவி மணி (Earth Hour) அனைத்துலக மயப்படுத்தப்பட்டது.
Sorry, no posts matched your criteria.