News March 29, 2024
செந்தில் பாலாஜியைக் கண்டு பயந்த அண்ணாமலை?

செந்தில் பாலாஜிக்கு பயந்துதான் கரூரில் போட்டியிடாமல், கோவை பக்கம் அண்ணாமலை சென்றதாக கனிமொழி கூறியுள்ளார். கரூரில் பேசிய அவர், “அண்ணாமலை பொய் மட்டுமே பேசி வருகிறார். எங்கள் தகுதி குறித்து பேச அண்ணாமலைக்கு அருகதை இல்லை. உடல்நிலை சரியில்லாத நிலையிலும் செந்தில் பாலாஜி சிறையில் வைக்கப்பட்டுள்ளார். ஜாமீன் மறுக்கப்படுகிறது. தேர்தல் முடிந்ததும் அவர் வெளியே வந்து விடுவார்” என்றார்.
Similar News
News March 6, 2026
BREAKING: இரவில் அதிமுக கூட்டணியில் இணைந்தார்

தேர்தல் நெருங்கும் நிலையில் சிறு அமைப்புகளும், சங்கங்களும் தங்களது ஆதரவு நிலைப்பாட்டை கட்சிகளிடம் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் அகில இந்திய சித்த வைத்தியர்கள் சங்கத்தின் நிறுவனப் பொ.செ., மருத்துவர் G. கருணாமூர்த்தி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் EPS-ஐ நேரில் சந்தித்து அதிமுக கூட்டணிக்கு முழு ஆதரவு அளிப்பதாக கூறினர். அத்துடன், அதிமுக கூட்டணியின் வெற்றிக்கு பாடுபடுவோம் எனவும் உறுதியளித்தனர்.
News March 6, 2026
விஜய்க்காக காத்திருக்கிறாரா EPS?

20+ கட்சிகளை இணைத்து மெகா கூட்டணியை CM ஸ்டாலின் அமைத்துள்ளதால், தங்களது கூட்டணியை வலுப்படுத்த வேண்டும் என EPS எண்ணுகிறாராம். இந்நிலையில், தனித்து போட்டியிட்டால் தேர்தல் நேரத்தில் திமுகவின் நெருக்கடியை எதிர்கொள்ள முடியாது என விஜய்க்கு அதிமுக தலைவர்கள் மூலம் EPS தூது அனுப்பியதாக கூறப்படுகிறது. எனினும், அதிமுகவுடனான கூட்டணி குறித்து விஜய் நிறைய யோசிப்பதால், அவரது முடிவுக்காக EPS காத்திருக்கிறாராம்.
News March 6, 2026
இன்று சனிப்பெயர்ச்சி.. இதெல்லாம் செய்யாதீங்க!

இன்று காலை 8.26 மணிக்கு சனிபகவான், கும்பத்தில் இருந்து மீனத்திற்கு செல்கிறார். எனவே, சனிப்பெயர்ச்சி நாளில் செய்யக்கூடாதவை பற்றிய விவரம் *கருப்பு நிற ஆடைகளை அணியக் கூடாது *பகல் நேரத்தில் தூங்கக்கூடாது *அசைவத்தை தவிர்க்கவும் *பிறரிடம் இருந்து கடன் வாங்குவது, நகையை அடமானம் வைக்க கூடாது *யாரிடமும் எந்தவித வாக்குவாதத்திலும் ஈடுபடக் கூடாது *நெகட்டிவான வார்த்தைகளை பேசக் கூடாது


