News March 29, 2024

ஸ்லோ பாய்சன் கொடுத்து தாதா கொலை?

image

உத்தர பிரதேசத்தில் பிரபல தாதா முக்தார் அன்சாரி மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஸ்லோ பாய்சன் கொடுத்து கொலை செய்யப்பட்டதாக அவரது மகன் உமர் குற்றம்சாட்டியுள்ளார். அவர் கூறுகையில், “கடந்த 19ஆம் தேதி அவருக்கு இரவு உணவில் விஷம் வைக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தை அணுக போகிறோம். நீதிமன்றம் மீது எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது” என்று தெரிவித்தார்.

News March 29, 2024

ரூ.1,700 கோடி செலுத்தக்கோரி காங்கிரஸுக்கு நோட்டீஸ்

image

வட்டியுடன் அபராதமாக ரூ.1,700 கோடி செலுத்தக்கோரி, காங்கிரஸுக்கு ஐ.டி. நோட்டீஸ் அனுப்பியுள்ளது. காங்கிரசின் வங்கி கணக்குகளை ஏற்கெனவே முடக்கிய ஐ.டி., ரூ.135 கோடியை பறிமுதல் செய்தது. இந்நிலையில், 2017-18 மற்றும் 2020-21க்கு இடைப்பட்ட 4 நிதியாண்டுகளுக்கு, உரிய வருமான வரி செலுத்தவில்லை, இதற்கு ரூ.1,700 கோடி செலுத்தும்படி ஐ.டி. நோட்டீஸ் அனுப்பியிருப்பது காங்கிரசாரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

News March 29, 2024

இன்றைய தலைப்புச் செய்திகள்!

image

*ஜனநாயகத்துக்கு எதிராக செயல்படும் பாஜகவை வீழ்த்த வேண்டும் – திருமாவளவன்
*ரஷ்யாவை பாதுகாக்கவே உக்ரைனுடன் போர் செய்து கொண்டிருக்கிறோம் – அதிபர் புதின்
*திருமணமான பெண்கள் குங்குமம் வைப்பது மதக் கடமை – இந்தூர் குடும்ப நீதிமன்றம்
*இந்திய வங்கிகளில் 10 ஆண்டுகளில் ₹5.30 லட்சம் கோடி மோசடி நடந்துள்ளது – ஆர்பிஐ
*ஆசிய கூடைப்பந்து தொடரின் பிரதான சுற்றுக்கு இந்திய மகளிர் அணி முன்னேறியது.

News March 29, 2024

வேட்பாளருடன் தகராறு.. கட்சிப் பதவி பறிப்பு

image

திண்டுக்கல் தொகுதியில் பாமக வேட்பாளர் திலகபாமாவுடன் அக்கட்சியை சேர்ந்த ஜோதிமுத்து தகராறு செய்ததாக தெரிகிறது. இவர் கடந்த மக்களவை தேர்தலில் பாமக சார்பில் போட்டியிட்டார். தற்போது இவருக்கு போட்டியிட வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்நிலையில், அவர் திலகபாமா உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால், ஜோதிமுத்தை மாவட்டச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கி கட்சி தலைமை அறிவித்துள்ளது.

News March 29, 2024

RCB Vs KKR: வெல்லப்போவது யார்?

image

ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு & கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இதுவரை 32 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் KKR 18 முறையும், RCB 14 முறையும் வென்றுள்ளன. இந்தாண்டு ஐபிஎல் தொடரில் RCB, KKR அணிகளுக்கு இடையேயான முதல் போட்டி பெங்களூரு ஸ்டேடியத்தில் இன்றிரவு 7:30 மணிக்கு தொடங்குகிறது. இன்றைய போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என நீங்கள் நினைக்கிறீர்கள்? என்று இங்கே குறிப்பிடவும்.

News March 29, 2024

பெரியாரின் பொன்மொழிகள்!

image

✍சிந்திப்பவன் மனிதன்; சிந்திக்க மறுப்பவன் மதவாதி; சிந்திக்காதவன் மிருகம்.✍கல்வி, சுயமரியாதை, பகுத்தறிவு இவையே தாழ்ந்து கிடக்கும் மக்களை உயர்த்தும்.✍முட்டாள்தனம் சுலபத்தில் தீப்பிடிக்கக் கூடியது; அறிவு தீப்பிடிக்க சற்று தாமதமாகும்.✍விதி என்பது ஒடுக்கப்பட்டவர்கள் கொதித்து எழாதிருக்க செய்யப்பட்ட சதியாகும்.✍ஓய்வும் சலிப்பும் தற்கொலைக்குச் சமம்.✍அச்சத்துக்கும் அறியாமைக்கும் பிறந்த குழந்தையே கடவுள்.

News March 29, 2024

ராகுலுக்கு சம்மன் அனுப்பிய நீதிமன்றம்

image

பாஜக மீது 40% கமிஷன் குற்றச்சாட்டை முன்வைத்த காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தியை விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கர்நாடக சட்டமன்றத் தேர்தலின்போது, ‘40% கமிஷன் அரசு’ என காங்., விளம்பரம் செய்ததை எதிர்த்து பாஜக மான நஷ்ட வழக்கு தொடுத்தது. ஜூன் 1இல் நடக்கவுள்ள இவ்வழக்கு விசாரணை தொடர்பாக ராகுலுக்கு கோர்ட் சம்மன் அனுப்பியுள்ளது.

News March 29, 2024

தோனியை விட சிறந்த வீரர் வேறு யார்?

image

ஸ்டம்புகளுக்குப் பின்னால் தோனியை விட சிறந்த வீரர் இந்தியாவில் யாரும் இல்லை என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஸ்டீவ் சுமித் புகழாரம் சூட்டியுள்ளார். ஊடகமொன்று அளித்த பேட்டியில், “களத்தையும், விளையாட்டின் கோணங்களையும் அவர் புரிந்து கொள்ளும் விதம் போல வேறு யாராலும் புரிந்துகொள்ள முடியாது. எப்போதும் கூலாக இருக்கும் அவர், ஆடுகளத்தில் வீரர்களைக் கையாளும் விதமே தனி ரகம் தான்” எனக் கூறினார்.

News March 29, 2024

பாலியல் தொல்லை செய்த ANI செய்தியாளர் ‘சஸ்பெண்ட்’

image

PTI செய்தி நிறுவனத்தின் பெண் பத்திரிகையாளருக்கு பாலியல் தொல்லை அளித்த செய்தியாளரை ANI செய்தி நிறுவனம் சஸ்பெண்ட் செய்துள்ளது. பெங்களூருவில் பெண் பத்திரிகையாளரிடம் ஆண் நிருபர் தவறாக நடந்துகொண்டதாகக் கூறப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பாக எடுக்கப்பட்ட வீடியோவை, PTI நிறுவனம் தன் சமூக வலைதளத்தில் பதிவிட்டதுடன், ANI நிறுவன செய்தியாளர் மீது நடவடிக்கை எடுக்கும்படி குறிப்பிட்டிருந்தது.

News March 29, 2024

‘கலகலப்பு 3’ அறிவிப்பு விரைவில்

image

இயக்குநர் சுந்தர்.சி, நடிகர் ‘மிர்ச்சி’ சிவா வெற்றிக் கூட்டணி மீண்டும் இணையவுள்ளது. இப்படத்துக்கான முன் தயாரிப்புப் பணிகள் நடந்து வருவதாக பேசப்படுகிறது. அனேகமாக இந்தப் படம் அவர்களின் கூட்டணியில் வெளியான கலகலப்பு படத்தின் 3 ஆம் பாகமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. குஷ்பூவின் தயாரிப்பில் வெளியான கலகலப்பு 1 & 2 ஆகிய இரு படங்களும் விமர்சன ரீதியாக மட்டுமில்லாது வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது.

error: Content is protected !!