News March 29, 2024
ஸ்லோ பாய்சன் கொடுத்து தாதா கொலை?

உத்தர பிரதேசத்தில் பிரபல தாதா முக்தார் அன்சாரி மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஸ்லோ பாய்சன் கொடுத்து கொலை செய்யப்பட்டதாக அவரது மகன் உமர் குற்றம்சாட்டியுள்ளார். அவர் கூறுகையில், “கடந்த 19ஆம் தேதி அவருக்கு இரவு உணவில் விஷம் வைக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தை அணுக போகிறோம். நீதிமன்றம் மீது எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது” என்று தெரிவித்தார்.
Similar News
News January 16, 2026
அமைதிக்கான நோபல் பரிசு டிரம்ப்புக்கு சொந்தமானதா?

மரியா மச்சாடோ தனது <<18868940>>நோபல்<<>> பதக்கத்தை டிரம்ப்புக்கு பரிசாக வழங்கினார். சுதந்திர வெனிசுலாவை பாதுகாக்க டிரம்ப் எடுத்த நடவடிக்கைகளுக்காக இதை வழங்குவதாக மரியா கூறினார். இதற்கு டிரம்ப், ‘பரஸ்பர மரியாதையின் அடையாளம்’ என நன்றியும் தெரிவித்துள்ளார். அதேநேரம், நோபல் பரிசை மாற்றவோ, பகிரவோ முடியாது என்பதால், பதக்கம் டிரம்ப்பிடம் இருந்தாலும், கௌரவம் மரியாவுக்கே சொந்தம் என நோபல் நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது.
News January 16, 2026
உலகில் அதிக Government லீவு இருக்கும் நாடு எது தெரியுமா?

புது வருடம் பிறந்தாலே, இந்த ஆண்டில் எத்தனை அரசு விடுமுறை உள்ளது என பார்ப்பவர்கள்தான் அதிகம். உலகில் எந்த நாட்டில் அதிக அரசு விடுமுறைகள் உள்ளது என உங்களுக்கு தெரியுமா? மேலே உள்ள போட்டோவை இடது புறமாக Swipe செய்து, இந்த லிஸ்ட்டில் எந்த நாடு முதலிடத்தில் உள்ளது, இந்தியா எந்த இடத்தில் உள்ளது என்பதை தெரிஞ்சிக்கோங்க. உங்க ஆபிசில் வருஷம் எத்தனை லீவு தராங்க?
News January 16, 2026
BREAKING: கூண்டோடு மீண்டும் அதிமுகவில் இணைந்தனர்

திண்டுக்கல் மாவட்ட அமமுக இளைஞர் அணி செயலாளர் குமரேசன், மாவட்ட மாணவரணி செயலாளர் இளையராஜா உள்ளிட்ட நிர்வாகிகள் EX அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் முன்னிலையில் மீண்டும் அதிமுகவில் இணைந்தனர். பேரவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், தென் மாவட்டங்களில் கட்சியில் இருந்து வெளியேறிய சிலரை மீண்டும் அதிமுகவில் இணைக்கும் பணியில் EPS இறங்கியுள்ளார். இது, OPS, TTV-யை பலவீனப்படுத்தும் முயற்சி எனக் கூறப்படுகிறது.


