India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

காசு கொடுத்து வாக்கு வாங்கும் நிலை எங்களுக்கு வந்தால் விவசாயம் செய்ய சென்றுவிடுவோமென நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். தென்காசியில் இசை மதிவாணனை ஆதரித்து பிரசாரம் செய்த அவர், ‘₹100 கோடி, ₹150 கோடி என செலவழித்து, வாக்குக்கு காசு கொடுத்து, உங்களது வாக்குகளை பெறும் நிலையில் நாம் தமிழர் கட்சி இல்லை. அந்த சூழல் வந்தால் அரசியலை தொடர வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை’ என்றார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘தமிழும் சரஸ்வதியும்’ தொடரில் நடித்த அக்ஷிதாவுக்கும், ப்ரீத்தம் சுரேஷ் என்பவருக்கும் விரைவில் திருமணம் நடைபெறவுள்ளது. கர்நாடகாவின் கூர்க்கில் இரு வீட்டார் முன்னிலையில் நிச்சயதார்த்தம் நேற்று நடந்துள்ளது. அக்ஷிதா தனது இன்ஸ்டா பக்கத்தில் ‘My Man’ என்ற ஹேஷ்டேக்குடன் நிச்சயதார்த்த புகைப்படங்களை பகிர்ந்திருந்தார். இந்த ஜோடிக்கு பலரும் வாழ்த்துகளை கூறி வருகின்றனர்.

காங்கிரஸ் கட்சியைத் தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் வருமானவரித் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், பழைய PAN எண்ணை பயன்படுத்தியதாக குறிப்பிட்டுள்ள வருமானவரித் துறை, நிலுவையில் உள்ள ₹11 கோடி வரி பாக்கியை செலுத்த வேண்டும் எனக் கூறியுள்ளது. முன்னதாக காங்கிரஸ் கட்சி ₹1,823 கோடி வரி பாக்கியை செலுத்த வேண்டும் என அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஒரே பிரேமில் விராட் கோலி, மற்றும் கேகேஆர் அணியின் ஆலோசகர் கம்பீர் இருவரும் இருக்கும் இரு புகைப்படங்களை கொல்கத்தா அணி நிர்வாகம் பகிர்ந்துள்ளது. இதில் ஒரு புகைப்படத்தில் கோலியையும், மற்றொன்றில் கம்பீரையும் முன்னிலைப்படுத்தி காட்டியுள்ளது. ஐபிஎல் போட்டிகளில் இவர்கள் இருவருக்கும் இடையே பல முறை வார்த்தைப் போர் நடந்துள்ளது. இன்று நடைபெறும் போட்டியில் KKR – RCB அணிகள் மோதுவது குறிப்பிடத்தக்கது.

இந்திய ஜனநாயக புலிகள் என்ற புதிய கட்சியை தொடங்கியுள்ள நடிகர் மன்சூர் அலிகான், ராகுல் காந்தி பிரதமர் ஆக வேண்டும் என்று ஆதரவு அளித்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈழத் தமிழர்களின் இனப் படுகொலைக்கு காங்கிரஸ் துணை நின்றதாக நம்புபவர்கள் தமிழ் தேசியவாதிகள். ஆனால், தன்னை தமிழ் தேசியவாதி என்று சொல்லிக் கொள்ளும் மன்சூர் அலிகான், காங்கிரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

தமிழகம், புதுச்சேரி என 40 தொகுதிகளிலும் முதலமைச்சர் ஸ்டாலினின் அலைதான் வீசுகிறதென அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். மயிலாடுதுறையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், ‘கூட்டணி கட்சிகள் சின்னங்களை கோரி விருப்பம் தெரிவித்து இருக்கின்றனர். நிச்சயமாக எந்த சின்னம் வழங்கினாலும் நாங்கள் வெற்றி பெற பாடுபடுவோம். அண்ணாமலை ஒவ்வொரு நாளும் குளறுபடியான வேலைகளை தான் செய்து கொண்டிருக்கிறார்’ என்றார்.

மூன்று நாள்கள் தொடர் விடுமுறை என்பதால் கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் முகாமிடத் தொடங்கியுள்ளனர். வத்தலகுண்டு அடிவாரத்தில் இருந்து கொடைக்கானலுக்கு செல்லும் பாதையில் சாலைப் பணிகள் நடந்து வருவதால் அங்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் வரை வாகனங்கள் அணிவகுத்து நிற்பதால் சுற்றுலாப் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியிருக்கின்றனர்.

ஐபிஎல் தொடரில் இன்று RCB-KKR அணிகள் மோதும் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறுகிறது. முன்னதாக 2015ஆம் ஆண்டு பெங்களூரு மைதானத்தில் நடந்த போட்டியில் KKR அணியை RCB வீழ்த்தியது. அதன் பிறகு 2017, 2018, 2019, 2023ஆம் ஆண்டுகளில் இந்த மைதானத்தில் நடந்த அனைத்துப் போட்டிகளிலும் RCB அணி தோல்வியையே தழுவியது. இதனால், இன்றைய போட்டியில் KKR அணியை RCB வெல்லுமா என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

தேர்தல் பணிகளுக்கான கூடுதல் பணிக்குழு பொறுப்பாளர்களை அதிமுக நியமித்திருக்கிறது. அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், சிங்காரம் – தருமபுரி, மாதவரம் மூர்த்தி – சென்னை வடக்கு, நாஞ்சில் வின்செண்ட் – கன்னியாகுமரி, சிட்லபாக்கம் ராஜேந்திரன் – காஞ்சிபுரம், அய்யாத்துரை பாண்டியன் – தென்காசி ஆகியோர் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களாக கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

வரி செலுத்துதல், முதலீட்டு திட்டங்கள் ஆகியவற்றுக்கு விண்ணப்பிப்பது, மற்றும் அப்டேட் செய்வதற்கான காலக்கெடு மார்ச் 31இல் முடிவடைகிறது. அவை ➫IT ரிட்டர்ன்களை தாக்கல் செய்ய வேண்டும் ➫மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்பவர்கள் Re-KYC பூர்த்தி செய்ய வேண்டும். ➫வீட்டுக் கடன்களில் பல வங்கிகள் வழங்கும் சிறப்பு தள்ளுபடிகள் மார்ச் 31 வரை கிடைக்கும். ஏப்ரல் முதல் புதிய விதி அமலுக்கு வரும் எனத் தெரிகிறது.
Sorry, no posts matched your criteria.