News March 29, 2024
மார்ச் மாதத்துடன் இவற்றிற்கு காலக்கெடு முடிவு!

வரி செலுத்துதல், முதலீட்டு திட்டங்கள் ஆகியவற்றுக்கு விண்ணப்பிப்பது, மற்றும் அப்டேட் செய்வதற்கான காலக்கெடு மார்ச் 31இல் முடிவடைகிறது. அவை ➫IT ரிட்டர்ன்களை தாக்கல் செய்ய வேண்டும் ➫மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்பவர்கள் Re-KYC பூர்த்தி செய்ய வேண்டும். ➫வீட்டுக் கடன்களில் பல வங்கிகள் வழங்கும் சிறப்பு தள்ளுபடிகள் மார்ச் 31 வரை கிடைக்கும். ஏப்ரல் முதல் புதிய விதி அமலுக்கு வரும் எனத் தெரிகிறது.
Similar News
News July 7, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: இறைமாட்சி ▶குறள் எண்: 389 ▶குறள்: செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன் கவிகைக்கீழ்த் தங்கும் உலகு. ▶பொருள்: துணையாக இருப்போர் செவிபொறுத்துக் கொள்ள முடியாத சொற்களைச் சொன்னாலும் அவற்றின் நன்மை கருதிப் பொறுத்துக் கொள்ளும் பண்புடைய வேந்தனது குடை நிழலில் உலகம் தங்கி நிற்கும்.
News July 7, 2025
இந்திய வம்சாவளிக்கு பொறுப்பு: எலான் மஸ்க் அதிரடி

அமெரிக்கா பார்ட்டி என்ற புதிய கட்சியை தொடங்கிய எலான் மஸ்க், பொருளாளராக இந்திய வம்சாவளியை சேர்ந்த வைபவ் தனேஜாவை நியமித்துள்ளார். டெல்லியில் பிறந்த இவர், தனது இளநிலை படிப்பை டெல்லி பல்கலைகழகத்தில் முடித்துவிட்டு அமெரிக்கா சென்றுள்ளார். கடந்த 8 வருடங்களாக டெஸ்லாவில் பணிபுரிந்தும் வருகிறார். கட்சியின் முக்கிய பொறுப்பில் வெளிநாட்டவர் நியமிப்பதா என எலான் மஸ்க் மீது விமர்சனங்களும் வந்துள்ளன.
News July 7, 2025
இன்றைய நேரம் நல்ல நேரம்

▶ஜூலை 7- ஆனி – 23▶ கிழமை: திங்கள் ▶நல்ல நேரம்: 9:15 AM – 10:15 AM & 4:45 PM – 5:45 PM ▶கெளரி நல்ல நேரம்: 1:45 AM – 2:45 AM & 7:30 PM – 8:30 PM ▶ராகு காலம்: 7:30 AM – 9:00 AM ▶ எமகண்டம்: 10:30 AM – 12:00 PM ▶குளிகை: 1:30 PM – 3:00 PM ▶திதி: துவாதசி▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர் ▶பிறை: வளர்பிறை.