News April 8, 2024

இன்றைய தலைப்புச் செய்திகள்

image

➤ மோடி மீண்டும் வெற்றி பெறுவது பாஜகவுக்கே ஆபத்து – முதல்வர் ஸ்டாலின்
➤ தமிழ்நாட்டில் பாஜக வெற்றி பெறும் – ஜே.பி.நட்டா
➤ எல்.முருகனை மக்கள் பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள் – ஆ.ராசா
➤ பாஜகவை நெஞ்சுரத்தோடு முதல்வர் எதிர்க்கிறார் – திருமாவளவன்
➤ எதிர்காலத்தில் அரசியலுக்கு வர வாய்ப்பு உள்ளது – விஜய் ஆண்டனி
➤ ஹாய் நான்னா படத்துக்கு சர்வதேச விருது
➤ குஜராத்துக்கு எதிரான ஆட்டத்தில் லக்னோ அணி வெற்றி

News April 8, 2024

விபத்தில் இருந்து முழுமையாக மீளவில்லை

image

விபத்தில் இருந்து தான் இன்னும் முழுமையாக மீளவில்லை என்று நடிகர் விஜய் ஆண்டனி கூறியுள்ளார். முகத்தில் தற்போது கூட ஐந்தாறு பிளேட் இருக்கிறது. நான் பேசுவதை நன்றாக கவனித்தால் ஒரு சில வார்த்தைகளை உச்சரிப்பதற்கு சிரமப்படுவதைப் பார்க்கலாம் என்ற அவர், விபத்தில் ஏற்பட்ட அழுத்தம் குறைந்து தற்போது பாசிட்டிவாக இருப்பதாக கூறினார். மலேசியாவில் பிச்சைக்காரன் 2 படத்தில் நடித்த போது அவர் விபத்தில் சிக்கினார்.

News April 8, 2024

ராகு காலம் முடிந்து ராகுல் காலம் தொடங்கியுள்ளது

image

இந்தியாவிற்கு ராகு காலம் முடிந்து ராகுல் காலம் தொடங்கியுள்ளதாக மஜக தலைவர் தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார். சொந்த நாட்டு மக்கள் மணிப்பூரில் ரத்தக் கண்ணீர் வடித்த போது அங்கு செல்லாத மோடி, தமிழக வெள்ளத்தை பார்வையிட வராத அவர், வாக்கு கேட்க மட்டும் வருகிறார் எனக் குற்றம்சாட்டிய அவர், ஹிட்லர், முசோலினியால் கூட சிந்திக்க முடியாத அவலங்களை தனக்கு வாக்களித்த மக்களுக்கு மோடி செய்வதாக விமர்சித்தார்.

News April 8, 2024

விபத்தின் போது இந்த தவற்றை செய்யாதீர்கள்…

image

விபத்தில் காயம்பட்டவரை அவசரத்தில் கண்டபடி தூக்கிச் செல்லக் கூடாது. படுக்க வைத்து மட்டுமே கொண்டு செல்ல வேண்டும். தண்டுவடம் பாதிக்கப்படாமல் இருந்து, உடலை மடக்கித் தூக்குவதன் மூலம் அது பாதிப்படையலாம். அதன் மூலம் உடல் பாகங்கள் செயல் இழந்து, நிலைமையை மேலும் சிக்கலாக்கி விடும். அதே போன்று எலும்பு முறிவு ஏற்பட்டால், எக்ஸ்-ரே எடுக்காமல், கட்டுப்போட்டுக் கொள்வது ஆபத்தை ஏற்படுத்தலாம்.

News April 8, 2024

குஜராத் அணியை கலங்கடித்த யாஷ் தாக்கூர்

image

குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் லக்னோ வீரர் யாஷ் தாக்கூரின் பந்துவீச்சு அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தது. நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் லக்னோ நிர்ணயித்த 164 என்ற இலக்கை, குஜராத் அணி தொட முடியாமல் போனதற்கு மிக முக்கிய காரணம் யாஷ் தாக்கூர். கில், விஜய் சங்கர் என குஜராத்தின் முக்கிய விக்கெட்டுக்களை இவர் வேட்டையாடினார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவருக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.

News April 8, 2024

இன்றைய நல்ல நேரம்

image

ஏப்ரல் – 08 | பங்குனி – 26
▶கிழமை: திங்கள்
▶நல்ல நேரம்: 06:30 AM – 07:30 AM, 4:30 PM – 5:30 PM
▶கெளரி நேரம்: 09:30 AM – 10:30 AM,
7:30 PM – 8:30 PM
▶ராகு காலம்: 7:30 AM- 09:00 AM
▶எமகண்டம்: 10:30 AM – 12:30 PM
▶குளிகை: 01:30 AM – 03:30 AM
▶சூலம்: கிழக்கு
▶பரிகாரம்: தயிர் ▶ திதி – அமாவாசை

News April 8, 2024

ரவுடியை ஏவி விடும் வேலையை தான் பாஜக செய்கிறது

image

காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் ஒன்றும் இல்லை என சீமான் விமர்சித்துள்ளார். சிபிஐ இருக்கும் பொழுது என்.ஐ.ஏ அமைப்பு விசாரணையில் இறங்குகிறது. ஐ.டி அமைப்பு இருந்தும் ED வழக்குகளை கையாள்கிறது, ஏன் இரண்டுக்கும் மத்திய அரசு செலவு செய்கிறது என்று கேள்வி எழுப்பிய அவர், முதலில் ஒரு ரவுடியை ஏவி விடுவது, அவன் அடி வாங்கி விட்டு வந்த பிறகு மற்றொரு பெரிய ரவுடி அனுப்பும் வேலையை பாஜக செய்வதாகவும் விமர்சித்தார்.

News April 8, 2024

உருவம் தவிர்; உள்ளத்தை பார்

image

ஒருவரின் உருவத்தை வைத்து யாரையும் மதிப்பீடு செய்யக் கூடாது. உருவுகண்டு எள்ளாமை வேண்டும் என்கிறது குறள். ஒவ்வொருவரிடமும் குறை, நிறைகள் இருக்கும். அதற்காக அவர்களைக் குறைத்து மதிப்பீடு செய்யக் கூடாது. யானையின் காதில் புகுந்த எறும்பு, யானையை விட அந்த நேரத்தில் பலசாலியாகிவிடும். அது போல காலநேரம் அனைவருக்கு வரும். சிலருக்கு காலம் தாழ்ந்து வரும், அதற்காக பிறரை கஷ்டப்படுத்தக் கூடாது.

News April 8, 2024

திட்டமிட்டு பொய் செய்தியை பரப்புகிறார்கள்

image

சில அரசியல் கட்சிகளின் தூண்டுதல் காரணமாக தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூடு நடைபெற்றதாக இபிஎஸ் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் பலமுறை துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. குறிப்பாக, முந்தைய திமுக ஆட்சியில் சேலத்தில் துப்பாக்கிச்சூடு நடைபெற்றதாக கூறிய அவர், தேர்தல் நேரத்தில் துாத்துக்குடி துப்பாக்கிச்சூடு பற்றி திட்டமிட்டு திமுக பொய் செய்திகளை பரப்பி வருவதாகவும் விமர்சித்தார்.

News April 8, 2024

இன்றைய பொன்மொழிகள்

image

➤ ஒருவனை அகந்தை ஆட்கொண்டால், அழிவு அவன் தலைமுறையையும் ஆட்டுவிக்கும்.
➤ மணிக்கணக்கில் உபதேசம் செய்வதை விட ஒரு கணப் பொழுதாவது உதவி செய்வது மேல்.
➤ நீ மற்றவர்களுக்காக வழிவிட்டுக் கொடு; இறைவன் நிச்சயம் உனக்கு வழி விடுவான்.
➤ அழுகையை ரசிப்பவர்கள் தான் ஆனந்தமாய் சிரிக்க முடியும்.
➤ வாழ்வில் பொய் கூட உரைக்கலாம் உண்மை பேசுபவன் போல் ஒரு போதும் நடிக்காதே.

error: Content is protected !!