India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தமிழகத்தில் ஏப்ரல் 19 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அனைத்து கட்சியினரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், தருமபுரி பிரசாரத்தில் பேசிய உதயநிதி, மதுரையில் எய்ம்ஸ் அமைக்க பாஜகவினரும், எடப்பாடியும் ஒரு செங்கல் நட்டார்கள். அதை நான் எடுத்து வந்துவிட்டேன். எய்ம்ஸ் மருத்துவமனை கட்டினால் மட்டுமே அந்த செங்கலை திருப்பி கொடுப்பேன் எனக் கூறியுள்ளார்.

KKR அணிக்கு எதிரான போட்டியில் CSK வீரர் ஜடேஜா சிறப்பாக பந்துவீசியுள்ளார். 4 ஓவர்கள் வீசிய அவர், 18 ரன்கள் விட்டுக்கொடுத்து KKR அணியின் அதிரடி ஆட்டக்காரர்களான நரைன், வெங்கடேஷ் ஐயர், ரகுவன்ஷி ஆகிய மூன்று பேரை அவுட்டாக்கினார். இவரது சிறப்பான பவுலிங்கால் KKR அணி 9 ஓவர்கள் முடிவில் 66 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. தேஷ்பாண்டே, தீக்ஷனா தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

மகளிர் உரிமைத் தொகை பெறாதவர்கள் குறித்த கணக்கெடுப்பு நடந்து வருவதாக அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார். ஏழைப் பெண்கள் பயனடையும் வகையில், தமிழக அரசு மாதம் தலா ₹1,000 வழங்கி வரும் நிலையில், சிலருக்கு அந்தத் தொகை கிடைக்கவில்லை எனப் புகார் எழுந்தது. இது குறித்த தகவல் சேகரிக்கப்பட்டு வருவதாகக் கூறிய அமைச்சர், தேர்தல் முடிந்ததும் விடுபட்டவர்களுக்கும் மாதம் ₹1,000 வழங்கப்படும் என உறுதி அளித்தார்.

தன்னை ஓரம்கட்ட முயற்சிப்பதாக இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவரும், எம்.பியுமான பி.டி உஷா புகார் தெரிவித்துள்ளார். இந்திய ஒலிம்பிக் சங்கத்தில் தன்னால் நியமனம் செய்யப்பட்ட நிர்வாகிகளை ஒலிம்பிக் கவுன்சில் உறுப்பினர்கள் நீக்கம் செய்வது குறித்து “நம்மால் இன்னும் ஒரு குழுவாக செயல்பட முடியவில்லை. உங்களது ஒவ்வொரு செயலும் என்னை ஓரம் கட்டும் முயற்சியாக பார்க்கும் போது வருத்தமாக உள்ளது” என தெரிவித்துள்ளார்.

ஐபிஎல், மக்களவைத் தேர்தல் என மக்களின் கவனம் ஒருபுறம் குவிந்திருக்க, பெரு நகரங்களில் உள்ள மல்டிபிளக்ஸ் தியேட்டர்கள், வங்கிகளுடன் இணைந்து ரசிகர்களை ஈர்க்க முயற்சித்து வருகின்றன. அந்த வகையில், பல்வேறு வங்கிகளை சேர்ந்த 78 கிரெடிட் கார்டுகளில் சினிமா டிக்கெட் ஒன்று வாங்கினால் மற்றொன்று இலவசம், டிக்கெட் கட்டணம் குறைப்பு, கேஷ்பேக் உள்ளிட்ட சலுகைகளை வழங்கி ரசிகர்களை தக்க வைக்க முயற்சித்து வருகின்றன.

மத்திய அமைச்சர் ஷோபா கரந்த்லாஜேவின் கார் மோதி 62 வயதான முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு கிருஷ்ணராஜபுரம் அருகே ஸ்கூட்டரில் சென்ற பிரகாஷ் என்பவர் மீது, ஷோபாவின் கார் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து முதியவரின் சடலத்தை மீட்ட போலீசார், விபத்து சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

அதிமுக கூட்டணி ஆதரிக்கும் பிரதமர் வேட்பாளர் யார் என்று கூற முடியுமா என உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். சசிகலாவுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் எடப்பாடி பழனிசாமி துரோகம் இழைத்ததாக குற்றம்சாட்டிய அவர், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து கேள்வி கேட்டால், பிரதமர் மோடிக்கு பதிலாக இபிஎஸ் பதிலளிப்பதாகக் கூறினார். மேலும், பாஜக-அதிமுக கள்ளக் கூட்டணி எனவும் அவர் விமர்சித்தார்.

தமிழகத்தில் இன்று 14 இடங்களில் வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி பதிவாகியுள்ளது. சேலம் – 41.7 டிகிரி செல்சியஸ்(dC), ஈரோடு – 41.6 dC, திருப்பத்தூர் – 41.4 dC, திருச்சி – 40.7 dC, நாமக்கல் – 40 dC, மதுரை – 41.2 dC, கரூர் பரமத்தி – 41 dC, தருமபுரி – 40.7 dC, கோவை – 38.9 dC, பாளையங்கோட்டை – 38.8 dC மற்றும் தஞ்சை, திருத்தணி, வேலூர், மதுரை ஏர்போர்ட்டில் தலா 39.6 dC வெப்பம் பதிவாகியுள்ளது.

தேர்தல் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக கர்நாடக முன்னாள் முதல்வர் வீரப்ப மொய்லி அறிவித்துள்ளார். நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் ‘சிக்பள்ளாப்பூர்’ தொகுதியில் போட்டியிட காங்., மேலிடத்தில் வாய்ப்பு கேட்டார். கட்சி மேலிடம் மறுப்பு தெரிவித்த நிலையில், இன்று ஓய்வை அறிவித்துள்ளார். இருப்பினும், சிக்பள்ளாப்பூர் தொகுதியில் காங்., சார்பில் போட்டியிடும் ரக்ஷா ராமையாவை ஆதரிப்பதாக தெரிவித்துள்ளார்.

ஐபிஎல்லில் முதல் ஓவரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பவுலர்கள் பட்டியலில் புவனேஷ்குமார் முதலிடத்தில் உள்ளார். அவர் 116 போட்டிகளில் 27 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். தொடர்ந்து, போல்ட் 26 விக்கெட்டுகள், பிரவீன்குமார் 15 விக்கெட்டுகள், ஜாகீர் கான் 14 விக்கெட்டுகள், தீபக் சாகர் 13 விக்கெட்டுகள், சந்தீப் சர்மா 13 விக்கெட்டுகள், மலிங்கா 12 விக்கெட்டுகளை வீழ்த்தி அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.