News April 8, 2024
மத்திய அமைச்சர் கார் மோதி முதியவர் பலி

மத்திய அமைச்சர் ஷோபா கரந்த்லாஜேவின் கார் மோதி 62 வயதான முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு கிருஷ்ணராஜபுரம் அருகே ஸ்கூட்டரில் சென்ற பிரகாஷ் என்பவர் மீது, ஷோபாவின் கார் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து முதியவரின் சடலத்தை மீட்ட போலீசார், விபத்து சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News December 10, 2025
விஜய்க்கு சரியாக சொல்லி கொடுக்கவில்லை: நமச்சிவாயம்

புதுச்சேரியில் நேற்றைய மக்கள் சந்திப்பின் போது, அங்கு ரேஷன் கடைகளே இல்லை என விஜய் பேசியது தற்போது பேசுபொருளாகியுள்ளது. அங்கு, 2016-ல் தற்காலிகமாக மூடப்பட்ட ரேஷன் கடைகள், 2024 முதல் செயல்பட்டு வருவதை குறிப்பிட்டு, நெட்டிசன்கள் அவரை விமர்சித்து வருகின்றனர். அதேபோல், அம்மாநில உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், விஜய்க்கு சொல்லி கொடுத்தவர்கள் சரியாக சொல்லி கொடுக்கவில்லை என தெரிவித்துள்ளார்.
News December 10, 2025
8 மாவட்டங்களில் இடியுடன் மழை பெய்யும்

தமிழகத்தில் காலை 7 மணி வரை 8 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என IMD அறிவித்துள்ளது. அதன்படி, நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சை, திருவாரூர், தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், வரும் 15-ம் தேதி வரை மாநிலத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
News December 10, 2025
உலகின் டாப் 10 அழகான நடிகைகள்

2025 நிறைவடைய உள்ள நிலையில், IMDB பட்டியலிட்டுள்ள இந்த ஆண்டின் டாப் 10 அழகான நடிகைகளை இங்கு பார்க்கலாம். ஹாலிவுட் முதல் பாலிவுட் வரை உள்ள நடிகைகளின் அழகை அலசி ஆராய்ந்து இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் ஒரே ஒரு இந்திய நடிகை மட்டும் இடம்பிடித்துள்ளார். இவர்களின் போட்டோக்களை மேலே தொகுத்துள்ளோம். ஒவ்வொன்றாக Swipe செய்து பார்த்து, உங்களுக்கு பிடித்த நடிகை யார் என்பதை கமெண்ட் பண்ணுங்க.


