News April 9, 2024

அமேதிக்கு ஆசைப்படும் பிரியங்காவின் கணவர்

image

உ.பி மாநிலத்தின் அமேதி தொகுதியில் பிரியங்கா காந்தியின் கணவரான ராபர்ட் வதேரா போட்டியிட விரும்புவதாக தெரிய வந்துள்ளது. லக்னோவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கடந்த தேர்தலில் ஸ்மிருதி இரானியை வெற்றிபெற வைத்ததை தவறு என அமேதி மக்கள் கருதுகின்றனர். அதனை சரிசெய்ய நான் அங்கு போட்டியிட வேண்டும் என்று விரும்புகிறார்கள்” என்று தனது அரசியல் ஆசையை சூசகமாக வெளிப்படுத்தினார்.

News April 9, 2024

இயந்திர வாக்குப்பதிவுக்கு பதில் வாக்குச்சீட்டு முறை

image

மக்களவைத் தேர்தலையொட்டி, விசிகவின் தேர்தல் அறிக்கையை அக்கட்சித் தலைவர் திருமாவளவன் வெளியிட்டார். அதில், ஆளுநர் பதவி ஒழிக்கப்படும், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கவும், 100 நாள் வேலை திட்டத்தை 200 நாள்களாக உயர்த்தவும், இத்திட்டத்தை நகர்புறங்களில் அமல்படுத்தவும் வலியுறுத்தப்படும், இயந்திர வாக்குப்பதிவு முறைக்கு பதில் வாக்குச்சீட்டு முறை அமல்படுத்தப்படும் ஆகிய வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன.

News April 9, 2024

ஸ்மித் கேப்டன் தான்; ஆனால் தோனி தான் முடிவெடுப்பார்

image

தோனி புனே அணியில் விளையாடி போது அவர் விருப்பம் போல் களமிறங்குவார் என ஆஸி., முன்னாள் வீரர் டேன் கிறிஸ்டியன் தெரிவித்துள்ளார். 2017இல் தோனி புனே அணியில், ஸ்மித் கேப்டன்சியின் கீழ் விளையாடினாலும், தோனி விருப்பப்பட்ட பேட்டிங் ஆர்டரில் களம் இறங்குவார். இதை கேப்டன் ஸ்மித்தோ, பயிற்சியாளர் பிளமிங்கோ தடுக்க மாட்டார்கள் என்றும் அவர் கூறியுள்ளார். சிஎஸ்கே அணி அந்த ஆண்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தது.

News April 9, 2024

இந்தியா-பாக்., பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்

image

இந்தியா – பாகிஸ்தான் இடையிலான ஜம்மு-காஷ்மீர் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வுக் காண வேண்டுமென சவுதி வலியுறுத்தியுள்ளது. சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீபை நேற்று நேரில் சந்தித்துப் பேசியுள்ளார். இந்தச் சந்திப்பின்போது, ஆசியப் பகுதியில் அமைதி & ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துவது தொடர்பாக இருவரும் விவாதித்தாக தெரியவந்துள்ளது.

News April 9, 2024

ஸ்கூட்டரில் பேரணியாக வந்த பெண்கள்

image

மகாராஷ்டிரா முழுவதும் மராட்டியர்களின் புத்தாண்டு தினமான ‘குடி பத்வா’ திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. வசந்த கால கொண்டாட்டமாகவும், இந்துக்களின் புத்தாண்டாகவும் இந்த திருவிழா கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி நாக்பூரில் பெண்கள் பாரம்பரிய உடை அணிந்து ஸ்கூட்டர் பேரணியில் கலந்து கொண்டனர். மேலும், மாநிலம் முழுவதும் ஆட்டம், பாட்டம் என திருவிழா களைகட்டியுள்ளது.

News April 9, 2024

தங்கம் விலை சவரனுக்கு ₹80 உயர்வு

image

கடந்த சில நாட்களாக வரலாறு காணாத அளவில் தங்கம் விலை உயர்ந்து வருவது நடுத்தர மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ₹360 உயர்ந்த நிலையில் இன்று ₹80 உயர்ந்து ₹53,360க்கும், கிராமுக்கு ₹10 உயர்ந்து ₹6,670க்கும் விற்பனையாகிறது. அதேபோல், வெள்ளியின் விலை ஒரு கிராம் ₹88க்கும், கிலோ வெள்ளி ₹88,000க்கும் மாற்றமின்றி விற்பனையாகிறது.

News April 9, 2024

இலக்குகளை பாஜக எட்டியதில்லை

image

400 தொகுதிகளை வெல்ல வேண்டுமென்ற பாஜகவின் இலக்கு குறித்து கருத்து தெரிவித்த ஜெய்ராம் ரமேஷ், இலக்குகளை பாஜக எட்டியதில்லை என்பதே வரலாறு என்றார். 2017 குஜராத் தேர்தலில் இலக்கு 150 சீட், வென்றது 99 சீட். 2018 சத்தீஸ்கர் தேர்தலில் இலக்கு 50 சீட், வென்றது 15 சீட். 2019 ஜார்கண்ட் தேர்தலில் இலக்கு 65 சீட், வென்றது 25 சீட். 2021 தமிழ்நாடு தேர்தலில் இலக்கு 118 சீட், வென்றது வெறும் 4 சீட் மட்டுமே என்றார்.

News April 9, 2024

NEET: விண்ணப்பிக்க சிறப்பு அனுமதி

image

இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் (NEET) தேர்வுக்கு இன்றும், நாளையும் விண்ணப்பிக்கலாம் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. மே 5ஆம் தேதி நடைபெறும் இத்தேர்வுக்கு, மாா்ச் 9ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், விண்ணப்பதாரர்கள் தங்களின் ஆதார் மற்றும் மொபைல் எண்ணில் சிக்கல் இருப்பதாக தெரிவித்து வந்த நிலையில், 2 நாள் சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

News April 9, 2024

ரஷ்யாவில் G.O.A.T. படப்பிடிப்பு

image

விஜய் நடிக்கும் ‘G.O.A.T.’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு, தற்போது ரஷ்யாவில் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் துபாய் சென்றிருந்த நடிகர் விஜய்யும், படப்பிடிப்பில் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. பகவதி, திருப்பாச்சி, யூத், மதுர உள்ளிட்ட படங்களில் நடித்த யுகேந்திரன், 18 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் விஜய்யின் இந்தப் படத்தில் நடிக்கிறார். படத்தின் முதல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

News April 9, 2024

35 இடங்களில் அதிமுக கூட்டணி வெற்றி பெறும்

image

மதுரையில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து மாட்டுத்தாவணி காய்கறி சந்தையில் இபிஎஸ் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், அதிமுகவில் ஒரு தொண்டன் தலைமை பதவிக்கு வர முடியும். திமுகவில் வர முடியுமா? என்று கேள்வி எழுப்பினார். தலைமை பதவிக்கு வாரிசாக வருவது தான் வாரிசு அரசியல் என்றும் கூறினார். மேலும், தமிழகத்தில் 35 இடங்களில் அதிமுக கூட்டணி வெற்றி பெறும் எனவும் அவர் சூளுரைத்தார்.

error: Content is protected !!