News April 9, 2024

ஆர்.எம்.வீரப்பன் உடலுக்கு நேரில் அஞ்சலி

image

மறைந்த முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். சென்னை அப்போலோ மருத்துவமனைக்கு சென்ற அவர், ஆர்.எம்.வீரப்பன் உடலுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். முன்னதாக அவரது மறைவு குறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், அரசியல் மட்டுமின்றி திரைத்துறையிலும் வரலாற்று முத்திரையை பதித்தவர் ஆர்.எம்.வீரப்பன் என புகழாரம் சூட்டியிருந்தார்.

News April 9, 2024

ராமரை அவமானப்படுத்தியது காங்கிரஸ்

image

காங்கிரஸ் கட்சி ராமரை அவமானப் படுத்திவிட்டதாக பிரதமர் மோடி மீண்டும் பேசியிருக்கிறார். உத்தர பிரதேசத்தின் பிலிபிட் நகரில் பிரசாரம் செய்த அவர், அயோத்தி ராமர் கோயில் பிரதிஷ்டையை காங்கிரஸ் புறக்கணித்ததாக குறிப்பிட்டுள்ளார். மதம் தொடர்பாக பிரசாரம் செய்யக் கூடாது என்று தேர்தல் ஆணையத்தின் விதி இருக்கும்போது பிரதமரே அதனை மீறுவதாக காங்கிரஸ் கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

News April 9, 2024

கெஜ்ரிவால் கைது சட்டவிரோதம் இல்லை

image

கெஜ்ரிவால் கைது சட்டப்படி தானே தவிர, தேர்தல் சமயம் என்பதற்காக அல்ல என டெல்லி ஐகோர்ட் கூறியுள்ளது. ED கைது செய்ததை எதிர்த்த வழக்கில், அவர் ஒரு முதலமைச்சர் என்பதால் சிறப்பு சலுகை கொடுக்க முடியாது எனத் தெரிவித்த கோர்ட், பொது வாழ்வில் இருப்பவர்கள் அதிக பொறுப்புடன் இருக்க வேண்டும் எனக் கூறியுள்ளது. மேலும், கெஜ்ரிவால் மீதான கைது நடவடிக்கை சட்டவிரோதம் இல்லை எனவும் ஐகோர்ட் கருத்து தெரிவித்துள்ளது.

News April 9, 2024

நூடுல்ஸ் விரும்பியா நீங்கள்?

image

அதிக அளவில் உட்கொள்ளப்படும் துரித உணவுகளில் முக்கிய இடம் வகிப்பது நூடுல்ஸ். இதை நீரிழிவு நோயாளிகள் அதிகளவில் உட்கொள்வதை குறைத்துக் கொள்ள வேண்டும் என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள். ஒரு கப் நூடுல்ஸில் சுமார் 45 கிராம் கார்ப்போஹைட்ரேட் உள்ளது. இது சாதத்துடன் ஒப்பிடுகையில் ஒன்றரை மடங்கு அதிகம். அரை கப் நூடுல்ஸ் உடன் அரை கப் காய்கறிகள் சேர்த்து சமைத்து சாப்பிட மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

News April 9, 2024

தமிழ்நாட்டில் தாமரை மலரவே மலராது

image

திமுக இருக்கும்வரை தமிழ்நாட்டில் தாமரை மலராது என்று முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் தெரிவித்துள்ளார். CNN செய்தி சேனலுக்கு பேட்டி அளித்திருக்கும் அவர், மீண்டும் மத்தியில் பாஜக ஆட்சியமைத்தால் இனி தேர்தலே இருக்காது என்றார். மக்களை திசை திருப்புவதற்காகவே கச்சத் தீவு விவகாரம் மீண்டும் கையில் எடுக்கப்பட்டுள்ளது என்றும் பாஜகவினர் தோல்வி பயத்தில் உள்ளனர் என்றும் முதல்வர் கூறினார்.

News April 9, 2024

கெஜ்ரிவாலை விடுவிக்க டெல்லி ஐகோர்ட் மறுப்பு

image

டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவாலை விடுவிக்க, டெல்லி ஐகோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது. இந்த வழக்கில் பிறருடன் சேர்ந்து கெஜ்ரிவாலும் சதி வேலையில் ஈடுபட்டது ஆவணங்கள் மூலம் தெரிய வந்துள்ளதாக குறிப்பிட்டுள்ள கோர்ட், தற்போதை நிலையில் விசாரணை நீதிமன்றத்தின் செயலில் தலையிட முடியாது எனக் கூறியுள்ளது. இந்த வழக்கில் மார்ச் 21ஆம் தேதி கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார்.

News April 9, 2024

காஸ்ட்லி கிஃப்ட் கொடுத்த அஜித்

image

‘விடாமுயற்சி’ படத்தில் தன்னுடன் இணைந்து நடித்த ஆரவிற்கு , அஜித் காஸ்ட்லி கிஃப்ட் கொடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. படப்பிடிப்பின் இடையே அஜித் நண்பர்களுடன் பைக் டூர் சென்றார். இதில் நடிகர் ஆரவும் கலந்துகொண்டார். அப்போது ஆரவ் மற்றும் அஜித் இருவரும் நல்ல நண்பர்களானதாகத் தெரிகிறது. இதையடுத்து சமீபத்தில் ரூ.35 லட்சம் மதிப்பிலான ரேஸ் பைக் ஒன்றை அஜித், ஆரவிற்கு பரிசளித்ததாக கூறப்படுகிறது.

News April 9, 2024

தலைமைத் தேர்தல் ஆணையருக்கு Z+ பாதுகாப்பு

image

இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமாருக்கு மத்திய உள்துறை அமைச்சகம் Z பிளஸ் பாதுகாப்பு வழங்கியுள்ளது. அவருக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக உளவுத்துறை அறிக்கை அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் அடிப்படையில் அவருக்கு 33 பாதுகாப்பு பணியாளர்கள் அடங்கிய Z பிளஸ் பாதுகாப்பு அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர்கள் 3 ஷிப்டுகளாக அவருடன் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர்.

News April 9, 2024

தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிக்கும்

image

வரும் நாட்களில் தமிழக உள் மாவட்டங்களில் இயல்பைவிட 2 – 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சமவெளி பகுதிகளில் அநேக இடங்களில் 38 – 41 டிகிரி செல்சியஸ் இருக்கக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது. தமிழக உள் மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை 40 – 42 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகியுள்ளது. வெப்பநிலை அதிகரிப்பால் அசெளகரியம் ஏற்படலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

News April 9, 2024

பிரசாந்துக்கு 2ஆவது திருமணம்?

image

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வந்தவர் பிரசாந்த். தொடர்ந்து பல மெகா ஹிட் படங்களை வழங்கி வந்த இவர், திருமணத்திற்கு பிறகு பெரிய சறுக்கலை சந்தித்தார். குடும்ப பிரச்னையால் பல ஆண்டுகள் சினிமாவில் கவனம் செலுத்த முடியாமல் திணறி வந்தார். தற்போது விஜய் உடன் இணைந்து GOAT படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், தனது உறவினர் பெண்ணை அவர் 2ஆவது திருமணம் செய்யவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

error: Content is protected !!