India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

பிரதமர் மோடி மக்களை தவறாக வழிநடத்துவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி குற்றம்சாட்டியுள்ளார். 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த பாஜக மீண்டும் தேர்தலை சந்திக்கிறது. 10 ஆண்டுகளில் மக்களுக்கு செய்த நலத்திட்டங்களை கூறுவதை விடுத்து, எதிர்க்கட்சித் தலைவர்களை குறிவைத்து பிரதமர் மோடி பேசி வருகிறார். இதன் மூலம் மக்களை தவறாக வழிநடத்த முயற்சிப்பதாக அவர் தெரிவித்தார்.

சண்டிகரில் இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் மற்றும் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் ஷிகர் தவான் பவுலிங் தேர்வு செய்துள்ளார். இதையடுத்து இன்னும் சற்று நேரத்தில் SRH அணி பேட்டிங்கை தொடங்க உள்ளது. இரு அணிகளும் இதுவரை 4 போட்டிகளில் விளையாடி 2 வெற்றி, 2 தோல்விகளைப் பெற்றுள்ளது. இன்று எந்த அணி வெற்றிபெறும்? கமெண்ட் பண்ணுங்க.

பேடிஎம் பேமெண்ட் பேங்கின் நிர்வாக இயக்குநரும், தலைமை செயல் அதிகாரியுமான சுரிந்தர் சாவ்லா பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். தனிப்பட்ட காரணங்களுக்காக பதவி விலகுவதாக அவர் தெரிவித்துள்ளார். பேடிஎம் பேமெண்ட் பேங்க் மீது ஜனவரி 31ஆம் தேதி ரிசர்வ் வங்கி பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. டெபாசிட் மற்றும் கடன் பரிவர்த்தனைக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்ட நிலையில் சுரிந்தர் சாவ்லா ராஜினாமா செய்துள்ளார்.

தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரிப்பதால் பகல் வேளையில் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. அதிகபட்சமாக இன்று திருப்பத்தூர் – 41.6 டிகிரி செல்சியஸ்(dC), ஈரோடு – 40 dC, சேலம் – 39.1 dC, கரூர் பரமத்தி – 39 dC,நாமக்கல் – 38.5 dC, வேலூர் – 38.4 dC, பாளையங்கோட்டை – 38 dC, தருமபுரி – 38.2 dC, மதுரை ஏர்போர்ட் – 38.4 dC, திருத்தணி – 37.7 dC வெப்பம் பதிவாகியுள்ளது.

CSK கேப்டன் பொறுப்பை ஏற்றதில் இருந்து ரசிகர்கள் கொடுக்கும் அன்பை நினைத்து நெகிழ்வதாக ருதுராஜ் கெய்க்வாட் கூறியுள்ளார். இந்த அனுபவம் தனக்கு மிகவும் பிடித்திருப்பதாக குறிப்பிட்டுள்ள அவர், ஒவ்வொரு முறை டாஸ் போடும்போது தோனிக்கு கொடுத்த அதே அன்பு தனக்கும் கிடைப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், சேப்பாக்கம் எனும் சிஎஸ்கேவின் கோட்டை இன்னும் சத்தமாக இருக்க வேண்டும் என விரும்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.

பாஜகவிற்கு வாக்கு சேகரிக்கும் விதமாக சென்னையில் ரோடு ஷோ நடத்துகிறார் பிரதமர் மோடி. தி.நகரில் உள்ள பனகல் பார்க் பகுதியில் இருந்து அவரது சாலை மார்க்கமான ஊர்வலம் தொடங்கியிருக்கிறது. சாலையின் இரு மருங்கிலும் கூடியிருக்கும் பாஜக தொண்டர்கள் மற்றும் மக்களைப் பார்த்து கையசைத்தபடி ஊர்வலமாக செல்கிறார் மோடி. சுமார் 2 கிமீ தூர பேரணிக்கு பிறகு ஆளுநர் மாளிகைக்கு செல்லவுள்ளார்.

மறைந்த முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பனின் உடலுக்கு ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி செலுத்தினார். ரஜினியின் மிகப்பெரிய ஹிட் படமான பாட்ஷாவை தயாரித்தவர் ஆர்.எம்.வீரப்பன்தான். தற்போது மரியாதை நிமித்தமாக தி.நகரில் வைக்கப்பட்டிருக்கும் வீரப்பனின் உடலுக்கு ரஜினி நேரில் அஞ்சலி செலுத்தினார். இசையமைப்பாளர் இளையராஜாவும் RMV உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார்.

நடிகரின் வாரிசு என்பதால் முதல் படத்தில் மட்டும் தான் சுலபமாக வாய்ப்பு கிடைக்கும் என ப்ருத்விராஜ் தெரிவித்துள்ளார். தனது தந்தை சுகுமாரன் (மலையாள நடிகர்) மூலம் தனக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததாக கூறிய அவர், அதன் பிறகு கடுமையாக உழைத்தால் மட்டுமே அடுத்தடுத்த வாய்ப்புகளை உருவாக்க முடியும் என்றார். இந்த விஷயங்களை தான் நானும், துல்கர் சல்மானும் செய்து வருவதாகவும் அவர் கூறினார்.

சென்னையில் வாகனப் பேரணி மேற்கொள்வதற்காக பிரதமர் மோடி சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். மாலை 6.30 மணிக்கு தி.நகர் பனகல் பார்க்கில் பேரணியை தொடங்கும் அவர், தேனாம்பேட்டை சிக்னல் வரை சுமார் 2 கிமீ ஊர்வலம் செல்கிறார். அப்போது, சென்னையில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் தமிழிசை உள்ளிட்டோரை ஆதரித்து வாக்கு சேகரிக்கிறார். அதைத் தொடர்ந்து கிண்டி ராஜ்பவனில் இன்று இரவு தங்குகிறார்.

WC டி20 தொடருக்கான இந்திய அணியில், விராட் கோலி இடம்பெறுவார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. மே.இ.தீகள் மற்றும் அமெரிக்காவில் T20 தொடர் நடைபெற உள்ள நிலையில், மே.இ.தீவுகள் மைதானத்தில் கோலியால் சரியாக விளையாட முடியாது எனவும், அதனால் அணியில் அவருக்கு இடமில்லை எனவும் கூறப்பட்டது. ஆனால், ஐபிஎல் தொடரில் அவரது ஆட்டத்திறனை பார்த்த BCCI, WC அணியில் கோலியை சேர்க்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Sorry, no posts matched your criteria.