India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தெலுங்கு திரையுலகின் ரசிகர்களால் காட் ஆஃப் மாஸ் என்றழைக்கப்படுபவர் நடிகர் பாலகிருஷ்ணா. அவர் தமிழ் இயக்குநர்களிடம் கதை கேட்டு வருவதாக சினிமா வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. சென்டிமென்ட் ஆக்ஷன் பாணியிலான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்த அவர் தனது பார்வையை கோடம்பாக்கத்தின் இளம் இயக்குநர்கள் பக்கம் திருப்பியுள்ளார். கிரைம் த்ரில்லர் கதைக் களத்தில் நடிக்க அவருக்கு ஆசை இருப்பதாகக் கூறியுள்ளாராம்.

ஆட்டத்தின் இறுதி நிமிடம் வரை நம்பிக்கையுடன் நின்று ஃபினிஷிங் செய்யும் தோனி, கோலி போன்றவர்களை தான் பின்பற்றியதாக ஜோஸ் பட்லர் கூறியுள்ளார். ஆட்டநாயகன் விருதை பெற்ற பின் பேசிய அவர், தொடக்கத்தில் அதிரடியாக விளையாட முடியவில்லை. தொடர்ந்து அமைதியாக விளையாடுவோம் என்று எனக்கு நானே சொல்லி கொண்டே விளையாடினேன். இது என்னுடைய சிறந்த ஐபிஎல் இன்னிங்ஸ் என்று நினைக்கிறேன். அதற்காக திருப்தியடைகிறேன் என்றார்.

➤1492 – ஆசியாவில் மசாலாப் பொருள்களை கொள்வனவு செய்யும் உரிமையை கொலம்பஸ் பெற்றார். ➤1756 – ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளி தீரன் சின்னமலை பிறந்த நாள். ➤1895 – முதலாம் சீன ஜப்பானியப் போர் முடிவுக்கு வந்தது. ➤1971 –வங்கதேசத்தில் மக்கள் குடியரசு அமைக்கப்பட்டது. ➤1978 – ஆப்கனில் கம்யூனிஸ்ட் தலைவர் மீர் அக்பர் கைபர் கொல்லப்பட்டார். ➤2021 – நடிகரும் இயற்கை ஆர்வலருமான விவேக் மறைந்த நாள்.

மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெறுவதற்கு சாத்தியமே இல்லை என திரிணமூல் காங்கிரஸ் கட்சி தலைவர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். கொல்கத்தா பிரசாரக் கூட்டத்தில் பேசிய அவர், பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், மக்களின் அனைத்து உரிமைகளையும் பறித்துவிடும் என்பதை மக்கள் நன்றாக உணர்ந்துள்ளார். மக்களவையில் 200 இடங்கள் கூட பாஜகவுக்கு கிடைக்காது. INDIA கூட்டணி தான் ஆட்சி அமைக்கும் எனக் கூறினார்.

நடிகர் சிம்புவின் 50ஆவது படத்தை இயக்குநர் சுதா கொங்கரா இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுதா சொன்ன ஒன்லைன் மிகவும் பிடித்துவிட்டதால், உடனே அவருடன் சேர்ந்து பணியாற்ற சிம்புவும் சம்மதித்ததாகக் கூறப்படுகிறது. சூர்யா நடிக்கவிருக்கும் ‘புறநானூறு’ படத்திற்குத் தயாராகி வரும் சுதா கொங்கரா, அந்தப் பணிகளை முடித்துவிட்டு சிம்பு படத்திற்கான ப்ரீ புரொடக்ஷன் பணிகளையும் தொடங்குவார் எனச் சொல்லப்படுகிறது.

KKR அணிக்கு எதிரான 31ஆவது லீக் போட்டியில் சதம் அடித்த ஜோஸ் பட்லர் ஐபிஎல்லில் ஒரு புதிய சாதனை படைத்துள்ளார். அதாவது ஐபிஎல் தொடரின் வரலாற்றில், அதிக சதங்கள் அடித்த வெளிநாட்டு வீரராக வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் கிறிஸ் கெயில் (6 சதங்கள்) கருதப்பட்டார். ஐபிஎல்லில் இருந்து ஓய்வுபெற்ற அவரது வாழ்நாள் சாதனையை நேற்றைய ஆட்டத்தில் அடித்த 7ஆவது சதம் மூலம் ஜோஸ் பட்லர் முறியடித்துள்ளார்.

▶குறள் பால்: அறத்துப்பால் ▶இயல்: பாயிரவியல்
▶அதிகாரம்: கடவுள் வாழ்த்து ▶குறள் எண்: 4
▶குறள்:
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.
▶பொருள்: விருப்பு வெறுப்பற்று, நிறைந்த மனதுடன் பிறர் துன்பம் களையும் தன்னலமற்ற மாமனிதரைப் பின்பற்றி நடப்பவர்களுக்கு எப்போதுமே துன்பம் ஏற்படுவதில்லை.

லஞ்சம், ஊழல், கடன் வாங்குவதில் தான் இந்தியாவிலேயே நம்பர் ஒன் ஆட்சியாக திமுகவின் திராவிட மாடல் ஆட்சி இருந்து வருகிறதென இபிஎஸ் விமர்சித்துள்ளார். தருமபுரி பிரசாரத்தில் பேசிய அவர், சட்டப்பேரவைத் தேர்தலின்போது கவர்ச்சியான திட்டங்களை சொல்லி ஆட்சிக்கு வந்த பிறகு அந்த பல்டி அடித்து விட்டார்கள். தங்களை ஏமாற்றிய திமுக அரசாங்கத்துக்கு இந்த தேர்தலில் தகுந்த பதிலடி தர மக்கள் தயாராகிவிட்டதாகக் கூறினார்.

குஷி, லைகர் என அடுத்தடுத்து தோல்வியை தழுவிய படங்களால் இழந்த தனது மார்க்கெட்டை ‘தி ஃபேமிலி ஸ்டார்’ படம் மூலம் சரிசெய்யலாம் என நினைத்திருந்தார் விஜய் தேவரகொண்டா. மிகுந்த நம்பிக்கையுடன் அவர் எதிர்பார்த்திருந்த அந்தப் படமும் வெற்றி பெறவில்லை. இதனால் அவர் மிகவும் சோர்ந்து போய்விட்டாராம். கதைத் தேர்வில் மிகுந்த கவனம் செலுத்துவது போன்ற அதிரடி மாற்றங்களுக்கு தேவரகொண்டா தயாராகிவிட்டதாகக் கூறப்படுகிறது.

இந்தியாவின் சரக்கு வர்த்தக பற்றாக்குறை கடந்த 11 மாதங்களில் இல்லாத அளவுக்கு மார்ச் மாதத்தில் ₹1.29 லட்சம் கோடியாக சரிந்துள்ளது. வர்த்தகத்துறை அமைச்சகம் வெளியிட்ட குறிப்பில், மார்ச் மாதத்தில் நாட்டின் சரக்கு ஏற்றுமதி ₹3.46 லட்சம் கோடியாகவும்; இறக்குமதி ₹4.75 லட்சம் கோடியாகவும் இருந்தது. சேவைகள் ஏற்றுமதி ₹2.37 லட்சம் கோடியாகவும்; இறக்குமதி ₹1.31 லட்சம் கோடியாகவும் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.