News April 17, 2024
தமிழ் இயக்குநர்களிடம் கதை கேட்கும் பாலகிருஷ்ணா!

தெலுங்கு திரையுலகின் ரசிகர்களால் காட் ஆஃப் மாஸ் என்றழைக்கப்படுபவர் நடிகர் பாலகிருஷ்ணா. அவர் தமிழ் இயக்குநர்களிடம் கதை கேட்டு வருவதாக சினிமா வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. சென்டிமென்ட் ஆக்ஷன் பாணியிலான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்த அவர் தனது பார்வையை கோடம்பாக்கத்தின் இளம் இயக்குநர்கள் பக்கம் திருப்பியுள்ளார். கிரைம் த்ரில்லர் கதைக் களத்தில் நடிக்க அவருக்கு ஆசை இருப்பதாகக் கூறியுள்ளாராம்.
Similar News
News November 18, 2025
ரஜினிக்கு பாராட்டு விழா நடத்தும் மத்திய அரசு

கோவாவில் வரும் 20 முதல் 28-ம் தேதி வரை, சர்வதேச திரைப்பட விழா நடைபெற உள்ளது. அதில், திரைத்துறையில் 50 ஆண்டுகளை நிறைவு செய்த ரஜினிகாந்த், தெலுங்கு நடிகர் பாலய்யாவை கவுரவிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த பாராட்டுவிழா, வரும் 28-ம் தேதி நடைபெற உள்ளதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். முன்னதாக, பாராட்டு விழா நடத்த சிலர் முன் வந்த போது, ரஜினி அதை தவிர்த்துவிட்டார்.

நானும் ரவுடிதான் என்கிறார் விஜய்: சேகர் பாபு

விஜய் SIR பற்றி பேசுவது கடைசியாக நானும் ரவுடிதான் என சொல்வது போல இருக்கிறது என சேகர் பாபு விமர்சித்துள்ளார். முன்னதாக SIR-க்கு எதிராக திமுக நடத்திய அனைத்து கட்சி கூட்டத்தை விஜய் புறக்கணித்தார். அரசியல் நோக்கத்தோடு திமுக அந்த கூட்டத்தை நடத்துவதாக அறிக்கையில் விமர்சித்திருந்தார். இதனால் களத்தில் நின்று கருத்து சொல்லவில்லை, விஜய் பாஜகவின் பி டீம் என விமர்சனங்கள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.