News April 17, 2024

மகாவீரரின் பொன்மொழிகள்

image

✍அச்சம் என்பது தலைதூக்கி நிற்கும்வரை, நாம் அடிமையாகத்தான் வாழ வேண்டியிருக்கும்.
✍பிற உயிர்களுக்குத் தீங்கிழைக்காமல் இருப்பதே உண்மையான வீரமாகும். ✍நேர்மை, ஒழுக்கம் ஆகிய இரண்டும் அறத்தின் ஆணிவேராகும்.✍தேவைக்கு அதிகமாகி சேர்த்து வைக்கும் செல்வம் பயனற்றதாகிவிடும்.✍கற்கும் கல்வியால் மட்டுமே பிறப்பால் உருவான ஏற்றத்தாழ்வு மறையும்.✍துன்பத்தில் உழலும் பிறருக்கு மனமுவந்து உதவுபவர்களே வீடுபேறை அடைவர்.

News April 17, 2024

ஸ்டாலினை உள்ளே வைத்தால் சரியாகிவிடும்!

image

முதல்வர் ஸ்டாலின் மீது எப்.ஐ.ஆர்., போட்டு உள்ளே வைத்தால், எந்த குழந்தையும் இறக்காது என்று பாஜக தமிழகத் தலைவர் அண்ணாமலை காட்டமாக கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், “உயிரே போனாலும் ‘நீட்’ தேர்வை எக்காரணம் கொண்டும் பாஜக ரத்து செய்யாது. எந்த குழந்தையும் ‘நீட்’ தேர்வு காரணமாக இறப்பதில்லை. இறப்பதற்கு துாண்டுகின்றனர். ஏழை மாணவர்கள் ‘நீட்’ மூலமாக அரசு மருத்துவக் கல்லுாரிக்கு செல்கின்றனர்” என்றார்.

News April 17, 2024

அனைத்து ஒப்புகைச் சீட்டுகளை எண்ணுவது சாத்தியமற்றது

image

விவிபாட் இயந்திரத்தின் அனைத்து ஒப்புகைச் சீட்டுகளையும் எண்ணுவது சாத்தியமற்றது என உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. காகித வாக்குச்சீட்டு முறையை அமல்படுத்த வேண்டும் எனக் கோரி ADR அமைப்பு தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் விசாரித்தது. மனுவை ஆராய்ந்த நீதிமன்றம், மனித தலையீடு இல்லாத இயந்திரம் சரியான முடிவுகளை கொடுக்கும் எனக் கருத்து தெரிவித்து இந்த வழக்கின் விசாரணையை தள்ளிவைத்தது.

News April 17, 2024

நாதகவின் வாக்கு சதவிகிதம் நிச்சயம் கூடும்

image

சினிமாவில் கால் பதிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நடிகரும் பிக் பாஸ் சீசன் டைட்டில் வின்னருமான அசீம் அரசியலில் அதிரடியாக எண்ட்ரி கொடுத்துள்ளார். நாதக வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்துவரும் அவர், மாற்றத்தை விரும்பும் மக்கள் வாக்களித்தால் இந்தத் தேர்தலில் நாதகவின் வாக்கு சதவிகிதம் நிச்சயம் கூடும். சில இடங்களில் 2 அல்லது 3 ஆவது இடம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. ஜூன் 4ஆம் தேதி பார்க்கலாம் என்றார்.

News April 17, 2024

எக்ஸ் தளத்தில் போஸ்ட், லைக், கமெண்ட் பண்ணக் கட்டணமா?

image

எக்ஸ் சமூக வலைதளத்தில் புதிதாக இணையும் பயனர்கள் போஸ்ட், கமெண்ட், லைக் செய்திட கட்டணம் செலுத்தும் நடைமுறை விரைவில் அமலாகும் என எலான் மஸ்க் அறிவித்துள்ளார். இணையதளம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “போலிக் கணக்குகளைக் (BOT) கட்டுப்படுத்த இந்தப் புதிய கட்டண திட்டத்தை அறிமுகம் செய்வதற்கான வேலைகள் நடந்து வருகிறது” என்றார். மஸ்கின் இந்த அறிவிப்பிற்கு நெட்டிசன்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

News April 17, 2024

இன்றைய நல்ல நேரம்!

image

▶ஏப்ரல் – 17 | ▶ சித்திரை – 04
▶கிழமை: புதன் | ▶திதி: நவமி
▶நல்ல நேரம்: காலை 09:30 – 10:30 வரை, மாலை 04:30 – 05:30 வரை
▶கெளரி நேரம்: காலை 10:30 – 11:30 வரை, மாலை 06:30 – 07:30 வரை
▶ராகு காலம்: காலை 12:00 – 01:30 வரை
▶எமகண்டம்: காலை 07:30 – 09:00 வரை
▶குளிகை: காலை 10:30 – 12:00 வரை
▶சந்திராஷ்டமம்: கேட்டை
▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால்

News April 17, 2024

IPL: ஜோஸ் பட்லர் புரிந்த சாதனைகள்

image

KKR-க்கு எதிரான 31ஆவது லீக் போட்டியில், 107 ரன்கள் எடுத்த ஜோஸ் பட்லர் பல சாதனை பட்டியல்களில் இடம்பிடித்துள்ளார். அதன் விவரம் பின்வருமாறு:- 1. ஐபிஎல் தொடரின் வரலாற்றில், அதிக சதங்கள் அடித்த வெளிநாட்டு வீரர்களின் பட்டியலில் முதலிடம் . 2. ரன் சேஸிங்கில் அதிக சதங்கள் அடித்தவர்களின் பட்டியலில் முதலிடம். 3. வெற்றிக்கு வழிகோலிட்ட அதிக சதம் அடித்த வீரர்களின் பட்டியலில் மூன்றாவது இடம்.

News April 17, 2024

இஸ்ரேலுக்கு பகிரங்க மிரட்டல் விடுத்த ஈரான்

image

இஸ்ரேல் மீண்டும் தங்களைத் தாக்கினால் இதுவரை யாருமே பயன்படுத்தாத ஆயுதத்தை கையில் எடுப்போம் என்று ஈரான் வெளியுறவு அமைச்சர் அலி பகேரி எச்சரித்துள்ளார். ஈரானின் ட்ரோன் தாக்குதலுக்கு பதிலடி கொடுப்போமென இஸ்ரேல் ராணுவத் தலைவர் ஹெர்ஸி ஹலேவி கூறியிருந்தார். அதற்குப் பதிலளித்துள்ள பகேரி, இஸ்ரேலுக்கு எதிராக நாங்கள் போரில் குதித்தால் மத்திய கிழக்கு பிராந்திய மட்டுமல்ல இந்த உலகமே தாங்காது எனக் கூறினார்.

News April 17, 2024

ஜெயிலிலா அல்லது பெயிலா?

image

தேர்தல் முடிவுகள் வெளிவந்த பின் திமுகவினர் ஜெயிலில் இருப்பார்களா, பெயிலில் இருப்பார்களா என தெரியவரும் என்று பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், திமுக என்றாலே ஊழல் மிகுந்த கட்சி என்று தான் பொருள். திமுகவைச் சேர்ந்த 13 பேர் ஒரு லட்சம் கோடி சொத்து சேர்த்துள்ளனர். டைனஸ்டி (குடும்ப அரசியல்), மணி லாண்டரிங், கட்டப்பஞ்சாயத்து இந்த மூன்றை மட்டுமே திமுக செய்கிறது என்றார்.

News April 17, 2024

வெப்ப நோய்களை விரட்டும் லட்சுமி தரு குடிநீர்

image

வெயில் காலத்தில் ஏற்படும் தொற்று நோய்களில் இருந்து உடலை தற்காத்துக்கொள்ள லட்சுமி தரு மூலிகைக் குடிநீரை பருகலாமென சித்த மருத்துவம் பரிந்துரைக்கிறது. லட்சுமி தரு மூலிகைப் பொடியை (ஒரு தேக்கரண்டி) ஐந்து லிட்டர் நீரில் போட்டு லேசாகக் கொதிக்க வைத்து, குடிநீராக பயன்படுத்தலாம். ரத்தத்தில் கொழுப்புச் சத்து அதிக அளவில் இருப்பவர்களும், உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்களும் இதை அருந்தலாம்.

error: Content is protected !!