News April 17, 2024
வெப்ப நோய்களை விரட்டும் லட்சுமி தரு குடிநீர்

வெயில் காலத்தில் ஏற்படும் தொற்று நோய்களில் இருந்து உடலை தற்காத்துக்கொள்ள லட்சுமி தரு மூலிகைக் குடிநீரை பருகலாமென சித்த மருத்துவம் பரிந்துரைக்கிறது. லட்சுமி தரு மூலிகைப் பொடியை (ஒரு தேக்கரண்டி) ஐந்து லிட்டர் நீரில் போட்டு லேசாகக் கொதிக்க வைத்து, குடிநீராக பயன்படுத்தலாம். ரத்தத்தில் கொழுப்புச் சத்து அதிக அளவில் இருப்பவர்களும், உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்களும் இதை அருந்தலாம்.
Similar News
News November 12, 2025
தோல்வியில் இருந்து தப்பிய பிரக்ஞானந்தா

உலகக் கோப்பை செஸ் தொடரில் இந்தியாவின் பிரக்ஞானந்தாவும், பொது வீரராக பங்கேற்ற டேனியல் துபோவும் மோதினார்கள். விறுவிறுப்பான இந்த ஆட்டத்தின் 14-வது நகர்வின் போது ராணி முன்னால் இருந்த சிப்பாயை பிரக்ஞானந்தா கவனக்குறைவாக நகர்த்தினார். இதன்மூலம் டேனியல் எளிதாக வெற்றி பெற்றிருக்கலாம், ஆனால் அவசரத்தில் அதை கவனிக்க தவறிவிட்டார். பின்னர் 41-வது நகர்த்தலில் ஆட்டம் டிராவில் முடிவடைந்தது.
News November 12, 2025
யுபிஎஸ்சி தேர்வில் தமிழக மாணவர்கள் அசத்தல்

யுபிஎஸ்சி முதன்மை தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, முடிவுகளை <
News November 12, 2025
தனித்தனியாக ஆலோசனை செய்யும் ஸ்டாலின்

அண்ணா அறிவாலயத்தில் ‘உடன்பிறப்பே வா’ என்ற தலைப்பில் மு.க.ஸ்டாலின் புதுக்கோட்டை, வேதாரண்யம், பல்லாவரம் உள்ளிட்ட சட்டமன்ற தொகுதி நிர்வாகிகளுடன் தனித்தனியாக ஆலோசித்து வருகிறார். அப்போது, 2026 தேர்தலில் கட்டாயம் திமுக வெற்றிபெற வேண்டும; தோல்வியடைந்தால் சம்பந்தப்பட்ட நிர்வாகிகளின் பதவிகள் பறிக்கப்படும் என்று எச்சரித்துள்ளார். மேலும், யாரை நிறுத்தினால் வெற்றிபெற முடியும் என்ற கருத்தையும் கேட்டுள்ளார்.


