India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள் போன்ற பொருட்களுக்கு விருதுநகர் சந்தை பிரதானம். பருப்பு, எண்ணெய் வகைகளுக்கு இங்கு தான் விலை நிர்ணயிக்கப்படும். இந்த நிலையில், உளுந்து, பாசிப் பருப்பு போன்றவற்றின் விலை தற்போது கணிசமாக உயர்ந்துள்ளதால் இல்லத்தரசிகள் கலக்கமடைந்துள்ளனர். முழு உளுந்து 100 கி. மூட்டைக்கு ₹700, சாதா உளுந்து ₹200, தொலி உளுந்து ₹100 மற்றும் பாசிப் பருப்பு ₹150 வரை விலை உயர்ந்துள்ளன.

இது யார் ஆட்சியில் தொடரக் கூடாது என்பதை முடிவெடுப்பதற்கான தேர்தல் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள மடலில், ‘மோடி வளர்ச்சியின் நாயகன்’ என்பது பொய் என்று 10 ஆண்டுகளில் தெரிந்து விட்டது. ஜனநாயகம் காக்கும் போர்க்களத்தில் நீதியின் பக்கம் நின்று, இந்தியா கூட்டணிக்கு தமிழ்நாட்டு மக்கள் வரலாறு காணாத வெற்றியைத் தேடித் தர வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.

இடஒதுக்கீடு குறித்து முடிவெடுக்க மூன்றாம் பாலினத்தவர் புள்ளிவிவரங்களை சேகரிக்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. கல்வி, வேலைவாய்ப்பில் மூன்றாம் பாலினத்தவருக்கு உரிய இட ஒதுக்கீடு வழங்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில், தேர்தல் நடத்தை விதி நீக்கப்பட்ட பின் 3 மாதங்களில் இந்த புள்ளிவிவரங்களை சேகரிக்கவும், ஏற்கெனவே சலுகை வழங்கப்பட்டால் அது குறித்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மின்னணு வாக்கு இயந்திரங்களில் முறைகேடு இல்லாமல் வாக்குப்பதிவு நேர்மையாக நடந்தால், பாஜக 180 தொகுதிகளில் கூட வெல்லாது என பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். பாஜகவின் ‘400 தொகுதிகளில் வெற்றி’ என்ற இலக்கு குறித்து கருத்து தெரிவித்த அவர், 400 இடங்களில் வெல்வோம் எனக் கூற அவர்கள் என்ன ஜோதிடர்களா? எனக் கேள்வி எழுப்பினார். இந்தத் தேர்தல் மக்கள் பிரச்னைகளை முன் வைத்த தேர்தலாக இருக்க வேண்டும் என்றார்.

ஊழியர்களின் ஓய்வூதிய நிதி அமைப்பு விதிகளில் சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இது தொடர்பாக EPFO வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, மருத்துவச் சிகிச்சைக்காக ஊழியர்கள் இனி ரூ.1 இலட்சம் வரையிலான பணத்தைத் திரும்பப் பெற முடியும். இதற்கு முன்னதாக, இந்த வரம்பு ரூ.50,000ஆக இருந்தது. படிவம் 68Jஐ பயன்படுத்தி சந்தாதாரர் அல்லது குடும்ப உறுப்பினரின் மருத்துவச் சிகிச்சைக்காக முன் பணம் கோரலாம்.

பெரம்பலூர் தொகுதியில் நிச்சயம் வெற்றி பெறுவேன் எனப் பாரிவேந்தர் எம்.பி தெரிவித்துள்ளார். ஊழல் வேண்டுமா? வேண்டாமா? என்பதை இறுதி செய்யும் தேர்தலாக மக்களவைத் தேர்தல் உள்ளது. இதில் குடும்ப ஆட்சி நடத்தும் யாருக்கும் வாக்களிக்கக் கூடாது என்பதில் மக்கள் தெளிவாக இருப்பதாகக் கூறிய அவர், கூட்டணிக் கட்சியினர் உதவியுடன் இலட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் எனத் தெரிவித்துள்ளார்.

17ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நடப்பு ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக துஷார் தேஷ்பாண்டே அதிக டாட் பால்களை வீசி சாதனை படைத்துள்ளார். மொத்தம் 22 ஓவர்களில் 60 டாட் பால்கள் வீசி அசத்தியுள்ளார். முன்னதாக, மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் அவர் 4 ஓவர்கள் வீசி வெறும் 29 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தார்.

அமெரிக்காவில் பணவீக்கம் அதிகரித்து வருவதால், வட்டி விகித குறைப்பு நடவடிக்கை மேலும் தாமதமாக வாய்ப்புள்ளதாக அமெரிக்க மத்திய வங்கியான ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் தலைவர் ஜெரோம் பவெல் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் பணவீக்க விகிதம் நிர்ணயிக்கப்பட்ட இலக்கான 2 சதவீதத்திற்குள் தொடர்ந்தால் மட்டும் வங்கிகளுக்கான வட்டி விகிதம் குறைக்கப்படும். இதனால் இந்தியாவிலும் ரெப்போ விகிதம் மாற்றமின்றி தொடர வாய்ப்புள்ளது.

நாட்டின் மிகப்பெரும் பணக்காரர்கள் 25 பேரின் ரூ.16 இலட்சம் கோடி கடனை மோடி தள்ளுபடி செய்துள்ளதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் பிரசாரம் செய்த அவர், பணக்காரர்களின் கடனைத் தள்ளுபடி செய்த மோடியால் ஏழை விவசாயிகளின் கடனை ஏன் தள்ளுபடி செய்ய முடியவில்லை என மக்கள் கேட்பதாகத் தெரிவித்தார். மேலும், அந்தப் பணம் 25 ஆண்டுகளுக்கான 100 நாள்கள் வேலைத் திட்டத்திற்கான பணத்துக்குச் சமம் என்றார்.

தமிழ்நாட்டில் இதுவரை ₹1,297 கோடி மதிப்பிலான பணம், தங்கம், வெள்ளி உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். மேலும், 39 தொகுதிகளில் 8,400 தபால் வாக்குகள் பதிவாகியுள்ளன. அதிகப்பட்சமாகத் திருச்சியில் 3,369 தபால் வாக்குகள் பதிவாகியுள்ளது. தேர்தல் பணியில் ஈடுபடுவோர் நாளை (ஏப்.18) வரை தபால் வாக்குகளைச் செலுத்தலாம் எனவும் அவர் தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.