News April 17, 2024

இனி ரூ.1 இலட்சம் எடுக்கலாம்

image

ஊழியர்களின் ஓய்வூதிய நிதி அமைப்பு விதிகளில் சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இது தொடர்பாக EPFO வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, மருத்துவச் சிகிச்சைக்காக ஊழியர்கள் இனி ரூ.1 இலட்சம் வரையிலான பணத்தைத் திரும்பப் பெற முடியும். இதற்கு முன்னதாக, இந்த வரம்பு ரூ.50,000ஆக இருந்தது. படிவம் 68Jஐ பயன்படுத்தி சந்தாதாரர் அல்லது குடும்ப உறுப்பினரின் மருத்துவச் சிகிச்சைக்காக முன் பணம் கோரலாம்.

Similar News

News November 16, 2025

ஆசிரியர்களுக்கு சூப்பர் வாய்ப்பு: 14,967 பணியிடங்கள்

image

கேந்திரிய வித்யாலயா & நவோதயா வித்யாலயா பள்ளிகளில் காலியாகவுள்ள 14,967 ஆசிரியர் & ஆசிரியரல்லாத பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. கல்வித்தகுதி: 10th, UG, PG உடன் B.Ed (பதவிகளுக்கேற்ப). சம்பளம்: ₹18,900 – ₹78,800 (பணிக்கு ஏற்ப). விண்ணப்பிக்க கடைசி நாள்: டிச.4. மேலும் அறிய & விண்ணப்பிக்க இங்கே <>கிளிக்<<>> செய்யுங்கள். ஷேர் பண்ணுங்க.

News November 16, 2025

BREAKING: விடுமுறை அறிவிப்பு வெளியானது.. எங்கு தெரியுமா?

image

புதுச்சேரியில் 2026ஆம் ஆண்டில் 17 நாள்கள் அரசு விடுமுறை என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஜன.1 ஆங்கில புத்தாண்டு, ஜன.15 பொங்கல், ஜன.16 திருவள்ளுவர் தினம், ஜன.26 குடியரசு தினம், மார்ச் 20 ரம்ஜான் உள்பட 17 நாள்கள் அரசு விடுமுறையாக வருகிறது. முன்னதாக தமிழ்நாடு அரசு 2026-ம் ஆண்டு 24 நாள்கள் பொதுவிடுமுறை என்று அறிவிப்பு வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

News November 16, 2025

PK நிலைமை தான் விஜய்க்கும்: தமிழிசை

image

லட்சக்கணக்கானோரின் வாக்குகளை SIR பறிப்பதாகவும், தவெக தொண்டர்களுக்கு SIR படிவங்களை அளிக்க மறுப்பதாகவும் <<18296708>>விஜய்<<>> குற்றஞ்சாட்டியிருந்தார். இந்நிலையில், இதையெல்லாம் எப்படி தம்பி நம்புவது என்று தமிழிசை செளந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், கட்சி ஆரம்பித்ததும் CM ஆக வேண்டும் என்று நினைத்தால், பிஹாரில் பிரசாந்த் கிஷோருக்கு ஏற்பட்ட நிலை தான் விஜய்க்கும் ஏற்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.

error: Content is protected !!