News April 18, 2024

5 மாநிலத் தேர்தல் முடிவால் சுதாரித்த காங்கிரஸ்

image

நாட்டில் மொத்தமுள்ள 543 தொகுதிகளில் ஆட்சி அமைக்க 272 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். இதில், காங்கிரஸ் 330 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடுகிறது. கடந்த ஆண்டு நடந்த 5 மாநிலத் தேர்தல் மக்களவைத் தேர்தலுக்கு முன்னோட்டமாக பார்க்கப்பட்டது. அதில் காங். தெலங்கானாவில் மட்டுமே வெற்றி பெற்றது. இதனால், மக்களவைத் தேர்தல் தொகுதிப் பங்கீட்டில் பல மாநிலங்களில் கூட்டணி கட்சிகளுக்கு காங். விட்டுக் கொடுத்துள்ளது.

News April 18, 2024

கேஸ் சிலிண்டர் விநியோகம் பாதிக்கும் அபாயம்

image

லாரிகள் வேலைநிறுத்தத்தால், பாரத் கேஸ் சிலிண்டர் விநியோகம் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆலைகளில் இருந்து கேஸ் நிரப்பிய சிலிண்டர்களை விநியோகஸ்தர்களுக்கும், காலி சிலிண்டர்களை ஆலைகளுக்கும் கொண்டு செல்லும் பணியில் லாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இதற்கான கட்டணத்தை உயர்த்தக்கோரி வேலைநிறுத்தத்தில் லாரி உரிமையாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால் விநியோகம் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

News April 18, 2024

சனாதனம்: ஒரே சித்தாந்தத்தை கடைபிடிக்கும் திமுக, காங்கிரஸ்

image

சனாதன தர்மத்தை எதிர்ப்பதில் திமுகவின் சித்தாந்தத்தையே காங்கிரசும் கடைபிடிப்பதாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “சனாதன தர்மத்தை அழிக்க விரும்புவதாக திமுக தலைவர்கள் கூறுகின்றனர். அவர்களின் கருத்தை காங்கிரஸ் கண்டிக்கவில்லை. அதுபோன்ற நபர்களை ஆதரித்தால், அவர்களுக்கும் (காங்கிரஸ்) அதே சித்தாந்தம் உள்ளது என்றுதான் அர்த்தம்” என்றார்.

News April 18, 2024

மெகந்தி போட்டிருந்தால் வாக்களிக்க முடியாதா?

image

கையில் மருதாணி, மெகந்தி போட்டிருந்தால் வாக்களிக்க அனுமதிக்கப்பட மாட்டாது என கடந்த சில நாள்களாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இதனால், ரசாயனங்களைக் கொண்டு அவற்றை அழிக்கும் முயற்சியில் பலர் ஈடுபட்டனர். இதுகுறித்து விளக்கமளித்த தேர்தல் அலுவலர், இத்தகவல் அடிப்படை ஆதாரமற்ற வதந்தி என்று கூறினார். மேலும், வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் யார் வேண்டுமானாலும் வாக்களிக்கலாம் என்று அவர் தெரிவித்தார்.

News April 18, 2024

IPL: டெல்லி அணியின் அதிவேக ரன் சேஸ்

image

குஜராத்துக்கு எதிரான ஐபிஎல் போட்டியில், 6 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி பெற்றது. முதலில் விளையாடிய குஜராத் அணி, 89 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பின்னர் களமிறங்கிய டெல்லி அணி, 9 ஓவர்களிலேயே இலக்கை அடைந்து மகத்தான வெற்றியைப் பதிவு செய்தது. இதுவே டெல்லி அணியின் அதிவேக ரன் சேஸ் ஆகும். இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக ரன் சேஸ் செய்த அணிகளின் வரிசையில், 7ஆவது இடத்தைப் பிடித்தது டெல்லி.

News April 18, 2024

ஆந்திரா, தெலங்கானா: இன்று வேட்புமனுத் தாக்கல் ஆரம்பம்

image

ஆந்திரா, தெலங்கானாவில் வேட்பு மனுத் தாக்கல் இன்று தொடங்குகிறது. மக்களவைக்கு 4ஆவது கட்டமாக, 10 மாநிலங்களில் உள்ள 96 தொகுதிகளுக்கு மே 13இல் தேர்தல் நடைபெறுகிறது. இந்தத் தேர்தலுக்கான அறிவிப்பாணை அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, 10 மாநிலங்களில் உள்ள 96 தொகுதிகளுக்கும் வேட்பு மனுத் தாக்கல் இன்று தொடங்குகிறது. மனுத் தாக்கலுக்கு ஏப்.25 கடைசி நாளாகும்.

News April 18, 2024

நாளை காலையிலேயே சென்று ஓட்டு போடுங்க

image

தமிழ்நாடு உட்பட பல மாநிலங்களில் மக்களவைத் தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு நாளை (ஏப்.19) நடைபெறவுள்ளது. கடந்த சில நாள்களாக வெயில் உச்சத்தில் இருப்பதால், வாக்காளர்கள் காலையிலேயே வாக்குச்சாவடிக்கு சென்று ஜனநாயக கடமையை ஆற்றுங்கள். வெயில் அதிகமாக இருக்கும் நேரத்தில் முதியோர், கர்ப்பிணிகள் வாக்கு செலுத்துவது கடினம். உடல்நலனும் பாதிப்பு ஏற்படலாம். எனவே, முன்கூட்டியே சென்று வாக்கு அளிக்கவும்.

News April 18, 2024

பாகுபாடு காட்டியிருந்தால் எனக்கு வாக்களிக்காதீர்கள்

image

சாதி, மத பாகுபாடு காட்டியிருந்தால், தேர்தலில் தமக்கு வாக்களிக்க தேவையில்லை என்று நாக்பூர் மக்களை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வலியுறுத்தியுள்ளார். நேற்று நடந்த பிரசாரக் கூட்டத்தில் பேசிய அவர், கடந்த 10 ஆண்டுகளில் நாக்பூர் தொகுதி பணிகளிலோ, தலித்துகள், முஸ்லிம்களிடமோ பாகுபாடு காட்டியதாக கருதினால் வாக்களிக்க வேண்டாம், உண்மையாக பணியாற்றியிருந்தால் வாக்களியுங்கள் என்றார்.

News April 18, 2024

நடிகை சம்யுக்தாவின் ‘ஆதி சக்தி’

image

‘வாத்தி’ திரைப்படம் மூலம் தமிழ் ரசிகர்களிடம் கவனம் பெற்றவர் மலையாள நடிகை சம்யுக்தா மேனன். ராம நவமியை முன்னிட்டு அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில், ‘ஆதி சக்தி’ பிறந்த நாளில் பெண்களின் முன்னேற்றத்திற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு புனிதமான முயற்சியாக இதைத் தொடங்குகிறேன். இந்தப் புனிதமான பயணம் குறித்த கூடுதல் தகவலை விரைவில் பகிர்கிறேன் எனக் கூறியுள்ளார்.

News April 18, 2024

மங்காத செல்வம் தரும் சக்கரத்தாழ்வார் மந்திரம்!

image

பக்தர்களுக்கு துன்பம் ஏற்பட்டால், பெருமாளுக்கே இடையூறு ஏற்பட்டதுபோல் விரைந்து காப்பவர் சுதர்சனச் சக்கரத்தாழ்வார். சனிக்கிழமையன்று விஷ்ணு கோவில்களில் உள்ள சக்கரத்தாழ்வாருக்கு சிவப்பு வண்ண மலர் சாத்தி, 9 நெய் விளக்கேற்றி சந்நிதியை 9 முறை வலம் வந்து, ‘ஓம் நமோ பகவதே மகா சுதர்சனாய நம’ எனும் இந்த மந்திரத்தை 108 முறை சொல்லி வேண்டினால் மங்காத செல்வங்களை அவர் வாரி வழங்கிடுவார் என சாஸ்திரங்கள் கூறுகின்றன.

error: Content is protected !!