India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

‘எமிஸ்’ இணையதளத்தில், பதிவான ஒரு கோடிக்கும் அதிகமான மாணவர்களின் பெற்றோரது மொபைல் எண்கள் சரிபார்க்கப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. அரசின் நலத்திட்டங்கள் குறித்து பெற்றோர்களுக்கு தெரிவிக்க ‘எமிஸ்’ உருவாக்கப்பட்டுள்ளது. இதில், பதிவு செய்யாதவர்களின் எண்களை குறிப்பிட்ட ஆசிரியர்கள் பள்ளி திறக்கும் நாளன்று கேட்டு பதிவு செய்ய வேண்டும் என்றும் பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

நோய் எதிர்ப்பு சக்தியே ஆரோக்கியத்தை தீர்மானிக்கிறது. இதனை கீழ்காணும் நடைமுறைகளை பின்பற்றினால் சீராக பராமரிக்கலாம் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர் *வைட்டமின் சி சத்துள்ள ஆரஞ்சு, எலுமிச்சை, திராட்சையை உண்ண வேண்டும் * நீர்ச்சத்து குறையாமல் இருக்க நீர் ஆகாரங்களை அருந்த வேண்டும் * பழங்கள், காய்கறிகளை அதிகம் உண்ண வேண்டும் * சரியான நேரத்தில் தூங்கி எழ வேண்டும்.

ஜம்மு & காஷ்மீர் சட்டமன்றத் தேர்தலை நடத்த தலைமைத் தேர்தல் ஆணையம் முன் தயாரிப்பு பணிகளை மேற்கொண்டு வருவதாக ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், தேர்தலில் போட்டியிட விரும்புவோரிடமிருந்து பொதுச் சின்னத்தை ஒதுக்கக் கோரும் விண்ணப்பங்களை தேர்தல் ஆணையம் வரவேற்பதாகக் கூறினார். கடைசியாக, கடந்த 2014ஆம் ஆண்டு, ஜம்மு & காஷ்மீரில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

மத்தியில் அமையப் போகும் NDA கூட்டணி அரசு நீண்ட காலம் நீடிக்காது என சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகல் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், அக்னிவீர் திட்டம், சாதிவாரி கணக்கெடுப்பு, பொது சிவில் சட்டம் ஆகியவற்றில் அவர்களிடையே கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. அங்கே இருப்பவர் வாஜ்பாய் அல்ல, மோடி. அவர் யார் பேச்சையும் கேட்கமாட்டார் என்பதால் அரசு நீடிக்காது என தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரை அடுத்த மதுரமங்கலத்தை சேர்ந்த தேவி என்ற கர்ப்பிணியை கொடூரமாக கொலை செய்து, உடலை கால்வாயில் வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேவியின் உடலை கைப்பற்றிய போலீசார், கொலை செய்து கால்வாயில் வீசிச் சென்றவர்கள் யார் என்றும், குடும்பத் தகறாறு காரணமாக கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு காரணமா என்பது குறித்தும் தீவிர விசாரணையை தொடங்கியுள்ளனர்.

எஸ்.பி.வேலுமணிக்கும் தனக்கும் பிரச்னை என திட்டமிட்டு பொய் பரப்பி, குழப்பம் விளைவிக்க முயற்சி நடப்பதாக அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் கூறியுள்ளார். இதனால், பாஜக கூட்டணி தொடர்பாக இபிஎஸ் & வேலுமணி ஆகியோரிடையே இருவேறு கருத்துக்கள் நிலவுவதாக எழுந்த சர்ச்சை முற்றுப்பெற்றுள்ளது. பாஜகவுடன் அதிமுக கூட்டணியில் இருந்திருந்தால் 30 தொகுதிகளில் வென்றிருக்கலாம் என வேலுமணி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

பானா காத்தாடி படத்தின் மூலம் அதர்வா மற்றும் சமந்தாவை அறிமுகப்படுத்தியவர் இயக்குனர் பத்ரி வெங்கடேஷ். இவரது பெற்றோரை நேரில் சந்தித்துள்ளார் ஸ்ருதி ஹாசன். இதுபற்றி பேசிய பத்ரி வெங்கடேஷ், என் பெற்றோர் ஒரு முறை கூட சினிமா பிரபலங்களை அழைத்து வரும்படி சொன்னதில்லை. ஆனால் ஸ்ருதியுடன் மட்டும் புகைப்படம் எடுத்துக் கொள்ள விரும்பினர். அதை நிறைவேற்றிய ஸ்ருதிக்கு நன்றி என நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

பாகிஸ்தான் அணியை வீழ்த்த வேண்டுமென்ற ஒரே லட்சியத்துடன் தான் களமிறங்கவுள்ளதாக இந்திய அணியின் துணை கேப்டன் ஹர்திக் பாண்டியா சூளுரைத்துள்ளார். பொதுவாகவே இந்தியா, பாகிஸ்தான் மோதல் என்றால் எதிர்பார்ப்பு எகிறும் எனக் கூறிய அவர், அத்தகைய போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைத்தது தனது அதிர்ஷ்டம் என்றார். இந்த ஸ்பெஷல் வாய்ப்பை பயன்படுத்தி, வரலாறு படைக்க முயற்சிப்பதாக கூறியுள்ளார்.

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு முதல் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், இன்று கோவை, நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், தமிழகத்தில் ஜூன் 12ஆம் தேதி வரை வெப்பநிலை 1- 2 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என்றும் சென்னையில் அடுத்த 2 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

கடந்த 2 மக்களவைத் தேர்தல்களில் உ.பி.,யில் வெற்றிக் கொடி நாட்டிய பாஜக, இந்த முறையும் நம்பிக்கையுடன் இருந்தது. ஆனால், 80 தொகுதிகளில் 33இல் மட்டுமே பாஜக வென்றது. சமாஜ்வாதி 37, காங்கிரஸ் 6இல் வென்று அதிர்ச்சியளித்தன. இந்த பின்னடைவுக்கு, தேர்தலுக்கு முன்பு அனுபவம் வாய்ந்த 35 தலைவர்களை வேட்பாளராக்க ஆதித்யநாத் பரிந்துரைத்ததாகவும், அதை அமித் ஷா நிராகரித்ததும் காரணமாகக் கூறப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.