News March 19, 2024

பிரபல பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

image

ஊட்டியில் உள்ள பிரபல பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தனியார் பள்ளிகளுக்கு அண்மையில் மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து விசாரணை நடத்தப்படும் நிலையில், ஊட்டியில் 2 சர்வதேச பள்ளிகளுக்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதையடுத்து, மோப்ப நாயுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தி வருகின்றனர்.

News March 19, 2024

திமுக கூட்டணிக்கு 3 கட்சிகள் ஆதரவு

image

மக்களவைத் தேர்தலுக்கான திமுக கூட்டணிக்கு ஆதரவளிப்பதாக மமக உள்பட 3 கட்சித் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். தேர்தல் நெருங்கும் சூழலில் தமிழக அரசியல் களம் பரபரப்பாகியுள்ளது. இந்நிலையில், சென்னையில் முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்த மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, ஆதித் தமிழர் பேரவை நிறுவனர் அதியமான் மற்றும் சமத்துவ மக்கள் கழகத் தலைவர் எர்ணாவூர் நாராயணன் ஆகியோர் ஆதரவு தெரிவித்தனர்.

News March 19, 2024

IPL-இல் ‘ஸ்மார்ட் ரீபிளே’ சிஸ்டம் அறிமுகம்

image

2024 ஐபிஎல் தொடரில், ‘ஸ்மார்ட் ரீபிளே’ சிஸ்டம் (Smart Replay System) அறிமுகம் செய்யப்படவுள்ளது. இது 3ஆவது நடுவரை துல்லியமாகவும் வேகமாகவும் முடிவெடுக்க உதவும். போட்டியில் ரிவியூ கேட்கும் போது, 3ஆவது நடுவர் அவுட்டா? இல்லையா? என்று பொறுமையாக பார்த்து சொல்ல வேண்டும். அதற்கு அதிக நேரம் எடுப்பதால், இந்த புது வசதி கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரு புகைப்படத்தை வெவ்வேறு கோணங்களில் பார்க்க முடியும்.

News March 19, 2024

இடஒதுக்கீடு உச்சவரம்பு நீக்கப்படும்

image

நாட்டில் தற்போதுள்ள இடஒதுக்கீடு உச்சவரம்பான 50% நீக்கப்படும் என்று காங்கிரஸ் கட்சி தேர்தல் வாக்குறுதியில் இடம்பெற்றுள்ளது.. சமூக, பொருளாதார, சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விவசாயப் பணிகளுக்கு ஜி.எஸ்.டி விலக்கு, 30 லட்சம் இளைஞர்களுக்கு அரசுப் பணி ஆகிய அம்சங்கள் காங்கிரஸின் தேர்தல் வாக்குறுதியில் இடம்பெற்றுள்ளன.

News March 19, 2024

ரூ.500 கோடி வசூலித்த முதல் படம் எது தெரியுமா?

image

இந்தியாவில் ரூ.500 கோடி வசூலித்த முதல் திரைப்படம், 2013ல் வெளியான அமீர்கானின் தூம் 3 திரைப்படம் தான். ரூ.175 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட அந்தப் படம் தான், முதன்முதலில் Imax தொழில்நுட்பத்தில் டால்பி அட்மஸ் ஒளியமைப்பில் வெளியான படமாகும். படம் வெளியாகி, 10 நாள்களில் உலகம் முழுவதும் ரூ.400 கோடி வசூலித்தது. இதையடுத்து, ரூ.500 கோடியைத் தாண்டியது. 2013ல் அதிக வசூலித்த படமும் இதுதான்.

News March 19, 2024

பிரதமர் மோடி மீது தேர்தல் ஆணையத்தில் புகார்

image

கோவை சாலைப் பேரணியில் தேர்தல் விதிகளை மீறியதாக பிரதமர் மோடி மற்றும் தமிழக பாஜகவினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தேர்தல் ஆணையத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி புகாரளித்துள்ளது. இது தொடர்பாக எழுதியுள்ள கடிதத்தில், பிரதமரின் சாலைப் பேரணியில் 6 – 8ஆம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி மாணவர்களை பங்கேற்க வைத்தது அப்பட்டமான தேர்தல் நடத்தை விதிமீறல் எனக் குறிப்பிட்டு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

News March 19, 2024

மும்பை இந்தியன்ஸ் அணியில் மாற்றம்

image

2024 ஐபிஎல் தொடர் தொடங்க இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. காயம் காரணமாக ஆஸி., வீரர் ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப்க்கு பதிலாக, இங்கி., வேகப் பந்துவீச்சாளர் லூக் வுட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இங்கிலாந்து அணிக்காக 2 ஒருநாள் மற்றும் 5 T20 போட்டிகளில் விளையாடிய லூக் வுட், முதல் முறையாக ஐபிஎல் தொடரில் பங்கேற்க உள்ளார். இதனால் ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

News March 19, 2024

சீமான் வழக்கில் விஜயலட்சுமிக்கு உத்தரவு

image

சீமான் வழக்கில் ஏப்.2ல் நேரிலோ, காணொலியிலோ ஆஜராக விஜயலட்சுமிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றிவிட்டதாக விஜயலட்சுமி தொடர்ந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சீமான் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு வந்தது. விஜயலட்சுமி ஆஜராக நோட்டீஸ் அனுப்பியும் பதில் இல்லை என காவல்துறை தெரிவித்ததால், ஆஜராக அவகாசம் அளித்து, விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

News March 19, 2024

பாலிவுட்டுக்கு செல்லும் சுந்தர்.சி

image

தமிழில் பல வெற்றிப் படங்களை இயக்கிய சுந்தர்.சி அடுத்ததாக ஹிந்தி படமொன்றை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் பாலிவுட்டின் பிரபல நடிகர் அக்ஷய் குமார் நாயகனாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இது இரண்டு ஹீரோ கதை என்பதால் மற்றொரு நாயகனாக தமிழ் நடிகர் நடிக்கலாம் எனத் தெரிகிறது. இப்படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News March 19, 2024

சென்னை ரயில் நிலையத்தில் பெண் மீது தாக்குதல்

image

சென்னை கிண்டி ரயில் நிலையத்தில் வான்மதி என்ற பெண்ணை அவரது கணவர் வெங்கடேசன் இரும்புக் கம்பியால் குத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குடும்ப பிரச்சனை காரணமாக வான்மதியை வெங்கடேசன் தாக்கியதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. மனைவியை தாக்கிய வெங்கடேசனை கைது செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். மனைவி வான்மதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

error: Content is protected !!