News March 19, 2024

சீமான் வழக்கில் விஜயலட்சுமிக்கு உத்தரவு

image

சீமான் வழக்கில் ஏப்.2ல் நேரிலோ, காணொலியிலோ ஆஜராக விஜயலட்சுமிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றிவிட்டதாக விஜயலட்சுமி தொடர்ந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சீமான் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு வந்தது. விஜயலட்சுமி ஆஜராக நோட்டீஸ் அனுப்பியும் பதில் இல்லை என காவல்துறை தெரிவித்ததால், ஆஜராக அவகாசம் அளித்து, விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

Similar News

News February 19, 2026

தென்காசி: மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழப்பு.!

image

சங்கரன்கோவில் அருகே உள்ள நடுமலையடிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து (23). இவர் நேற்று முன்தினம் இவரது நிலத்தை, டிராக்டரில் உழுது கொண்டிருந்தார். அப்போது தாழ்வாக சென்ற மின்கம்பி, டிராக்டர் மீது உரசியுள்ளது. இதில் தூக்கிவீசப்பட்ட இளைஞர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இளைஞரின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வலியுறுத்தி, உறவினர்கள் கரிவலம்வந்தநல்லூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

News February 19, 2026

பெரும் சிக்கலில் திமுக, அதிமுக.. இதான் பிரச்னை! (1/2)

image

ராஜ்யசபாவில் திமுகவின் 4 MP சீட்களுக்கு தேர்தல் வருகிறது. ஏற்கெனவே திருச்சி சிவாவுக்கு ஒரு சீட் நிச்சயமாகிவிட்டதாக சொல்லப்படுகிறது. மீதமிருக்கும் 3-ல் காங்., & விசிக ஒன்றை கேட்கிறதாம். அத்துடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் இருப்பதாக கூறப்படும் தேமுதிகவும், ராமதாஸும் தலா 1 சீட் கேட்கிறார்களாம். இதனால் திமுக திக்குமுக்காடி போயிருப்பதாக பேசப்படுகிறது. அதிமுக செய்திக்கு <<19180714>>CLICK<<>>.

News February 19, 2026

பெரும் சிக்கலில் திமுக, அதிமுக.. இதான் பிரச்னை! (2/2)

image

அதிமுகவில் 2 ராஜ்யசபா சீட்டுக்கு தேர்தல் நடக்கவுள்ளது. அந்த இரண்டே சீட்டுக்கு அக்கட்சியில் கடும் போட்டி நடக்கிறதாம். ஏற்கெனவே 1 MP சீட் அன்புமணிக்கு உறுதியாகிவிட்டது. மீதமிருக்கும் ஒரே சீட்டுக்கு அத்தனை நெருக்கடி. ஒரு பக்கம் GK வாசன், இன்னொரு பக்கம் தம்பிதுரை நிற்கிறார்களாம். அத்துடன் அதிமுகவுக்கும் 1 MP சீட் வேண்டும் என நிர்வாகிகள் கேட்பதால் இடியாப்ப சிக்கலில் EPS இருப்பதாக பேசப்படுகிறது.

error: Content is protected !!