News March 26, 2025

மீனவர் பிரச்னை: வவுனியாவில் பேச்சுவார்த்தை

image

இந்திய – இலங்கை மீனவர் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் வவுனியாவில் பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை நடத்தி வரும் தாக்குதல் தொடர்கதையாகி வருகிறது. வரும் 5 ஆம் தேதி பிரதமர் மோடி இலங்கை செல்லவுள்ள நிலையில், இரு நாட்டு மீனவர்கள் பிரச்னைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான பேச்சுவார்த்தை வவுனியாவில் தொடங்கியுள்ளது.

News March 26, 2025

மாரடைப்பால் உயிரிழந்த பிரபலங்கள்!

image

மாரடைப்பால் உயிரிழப்பு நிகழ்வது சமீப காலங்களாக அதிகரித்து வருகிறது. அதிலும் திரைத்துறையில் இந்த சோகம் தொடர்கிறது. கொரோனாவுக்குப் பின் கன்னட சூப்பர்ஸ்டார் புனித் ராஜ்குமார் மாரடைப்பால் உயிரிழந்தது இந்திய திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதன் பின் நடிகர்கள் விவேக், டேனியல் பாலாஜி, மாரிமுத்து, மயில்சாமி, டாக்டர் சேது, பாடகர் கே.கே, தற்போது மனோஜ் என தொடர்கதையாகி வருகிறது.

News March 26, 2025

அலகாபாத் ஐகோர்ட் தீர்ப்பு: SC கடும் அதிருப்தி

image

பெண்ணின் மார்பகத்தை பிடித்தாலோ, ஆடையை கிழித்தாலோ ‘ரேப்பாக’ கருத முடியாது என அலகாபாத் ஐகோர்ட் அளித்த தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது. குற்றத்தின் தீவிரத்தை உணராமல் நீதி வழங்கப்பட்டுள்ளது. ஒரு நீதிபதிக்கு எதிராக இப்படி சொல்வது வேதனை தருகிறது. உ.பி, மத்திய அரசுகள் உரிய பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

News March 26, 2025

காவல், தீயணைப்பு நிலையங்கள்: CM பதில்

image

TNல் புதிய காவல் நிலையங்கள், தீயணைப்பு நிலையங்கள் அமைக்கப்படும் என CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பேரவையில், எம்எல்ஏக்கள் பலர் முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளித்த ஸ்டாலின், கோரிக்கைகள் அனைத்தும் பரிசீலிக்கப்பட்டு சாத்தியக்கூறு இருக்கும் இடங்களில் புதிதாக காவல், தீயணைப்பு நிலையங்கள் அமைக்கப்படும் என உறுதியளித்தார். காவல்துறை மானியக் கோரிக்கையில் இதற்கான அறிவிப்புகள் வெளியாகும் எனவும் கூறினார்.

News March 26, 2025

மியாமி ஓபன்: காலிறுதியில் ஜோகோவிச்

image

மியாமி ஓபன் ஆண்கள் ஒற்றைய பிரிவு சுற்றில் நட்சத்திர வீரரான செர்பியாவின் ஜோகோவிச் இத்தாலியின் லோரென்சோ முசெட்டியை எதிர்கொண்டார். தனது அனுபவத்தின் காரணமாக தொடக்கம் முதலே அதிரடி காட்டினார் ஜோகோவிச். இதனால் 6-2, 6-2 என்ற நேர் செட் கணக்கில் அவர் வெற்றி பெற்றார். இதன்மூலம் காலிறுதிக்கு ஜோகோவிச் முன்னேறினார்.

News March 26, 2025

கணக்கு போடுவதில் இபிஎஸ் கெட்டிக்காரர்: வேலுமணி

image

கணக்கு கேட்டு கட்சித் தொடங்கியவர்கள், தப்புக் கணக்கு போடுகின்றனர் என்று பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அதிமுகவை சீண்டினார். இதற்கு எஸ்.பி.வேலுமணி, இபிஎஸ் கணக்கு போடுவதில் பயங்கர கெட்டிக்காரர். எம்ஜிஆர், ஜெ., போன்று அவர் போடும் கணக்கு எப்போதும் சரியாகத்தான் இருக்கும். 2026இல் முடிக்க வேண்டியவர்களின் கணக்கை முடித்து (திமுக), இபிஎஸ் புதிய கணக்கை தொடங்குவார் என்று பதிலடி கொடுத்துள்ளார்.

News March 26, 2025

மாதம் ₹7,000 வழங்கும் ‘பீமா சகி யோஜனா’ திட்டம்

image

‘பீமா சகி யோஜனா’ திட்டம் கிராமப்புற பெண்கள் LIC காப்பீட்டு முகவர்களாக மாறுவதற்கும், கிராமங்களில் காப்பீட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தவும் மத்திய அரசு தொடங்கியுள்ளது. இதில், பங்கேற்க 18 – 70 வயது வரையிலான 10ஆம் வகுப்பு படித்த பெண்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு உதவித்தொகையாக முதல் ஆண்டில் மாதம் ₹7,000, 2ஆம் ஆண்டில் ₹6,000, 3ஆம் ஆண்டில் ₹5,000 வழங்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு இங்கே <>கிளிக்<<>> பண்ணுங்க.

News March 26, 2025

திருப்பணியில் ஊழலா? பக்தர்கள் அதிர்ச்சி!

image

திருச்செந்தூரில் பக்தர்களுக்காக கட்டப்பட்ட கழிவறை தரமற்றதாக இருப்பதாக சர்ச்சை எழுந்தது. கோயில் பணியில் ஊழல் நடந்துள்ளதாக அண்ணாமலையும் சாடியிருந்தார். இந்நிலையில் வழக்கறிஞர் ராமநாத ஆதித்தன் என்பவர் RTI மூலம் பெற்ற தகவலில் ₹300 கோடி செலவில் நடக்கும் கோயில் திருப்பணிக்கு, வரைபடம் தயாரிக்க மட்டும் Pvt நிறுவனத்திற்கு ₹8 கோடி வழங்கியது தெரியவந்துள்ளது. இந்த தகவலால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

News March 26, 2025

திமுக கூட்டணி கட்சிகளை குறி வைக்கும் இபிஎஸ்?

image

ஆளும் திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகள் அங்கேயே இருக்க போகிறதா என்ன?; தேர்தல் நேரத்தில் எல்லாம் நடக்கும் என்று இபிஎஸ் சூசகமாக தெரிவித்துள்ளார். சமீபகாலமாக, தவாக, விசிக, கம்யூ., கட்சிகள் திமுகவுக்கு எதிரான கருத்துகளை கூற தொடங்கியுள்ளன. இதையும், இபிஎஸ் சொல்வதையும் இணைத்து பார்த்தால் கணக்கு புரிகிறது. ஆனால், அதிமுக கூட்டணியில் பாஜக இருந்தால், இந்த கட்சிகள் கூட்டணிக்கு வருமா என்பது சந்தேகமே.

News March 26, 2025

இரானி கொள்ளையர்கள் சிக்கியது எப்படி?

image

சென்னையில் தொடர் செயின் பறிப்பு சம்பவங்களை தொடர்ந்து 100 சிசிடிவிக்கள் ஆய்வு செய்யப்பட்டதாக கமிஷனர் அருண் கூறியுள்ளார். பிடிபட்ட 3 குற்றவாளிகளும் ‘இரானி கொள்ளையர்கள்’ மக்களின் கவனத்தை திசை திருப்பி கொள்ளையடிப்பதில் திறமையானவர்கள் என்றார். நகைகள், பைக்கை பறிமுதல் செய்ய சென்றபோது தப்பிக்க முயன்றதால் <<15888455>>ஜாபரை<<>> சுட்டதாகக் கூறிய அவர், 26 சவரன் நகை, துப்பாக்கி ஒன்றை பறிமுதல் செய்துள்ளதாகவும் கூறினார்.

error: Content is protected !!