News March 18, 2024

தலைமை தேர்தல் அதிகாரி இன்று ஆலோசனை

image

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாகு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் இன்று ஆலோசனை நடத்தவுள்ளார். தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்.19ஆம் தேதி மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. நாளை மறுநாள் (மார்ச் 20) மக்களவைத் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் தொடங்கும் நிலையில், தேர்தல் நடத்தை விதிகள், வேட்புமனு தாக்கலுக்கான ஏற்பாடுகள் தொடர்பாக ஆலோசனை செய்ய உள்ளார்.

News March 18, 2024

ஏப்.13க்குள் தேர்வுகளை நடத்தி முடிக்க திட்டம்

image

மக்களவைத் தேர்தல் காரணமாக தமிழகத்தில் 1 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இறுதி தேர்வுகளை ஏப்.13க்குள் நடத்தி முடிக்க தமிழக பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்.19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. வகுப்பு மற்றும் பாடவாரியாக தேர்வு கால அட்டவணையை பள்ளிக்கல்வி அதிகாரிகள் இறுதி செய்யவுள்ளனர். அதன் விபரம், இன்று அல்லது நாளை வெளியாகுமென எதிர்ப்பார்க்கப்படுகிறது.

News March 18, 2024

40 தொகுதிகளிலும் I.N.D.I.A கூட்டணி வெல்லும்

image

தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் I.N.D.I.A கூட்டணி வெற்றி பெறுமென காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். நாமக்கல்லில் நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்று பேசிய அவர், ‘பிரதமர் மோடியின் தேர்தல் சுற்றுப் பயணத்திற்காகவே இந்தியாவில் 7 கட்டங்களாக தேர்தலை நடத்துகின்றனர். சிவகங்கை தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டால், நான் மீண்டும் போட்டியிட விருப்பமனு அளிப்பேன்’ என்றார்.

News March 18, 2024

காலையில் டீ, காபிக்கு பதில் இதை அருந்தலாம்

image

காலையில் டீ, காபிக்கு பதிலாக மோரில் இஞ்சி, கருமிளகு, சீரகம் போன்றவற்றை சேர்த்து அருந்தலாம். ஒரு கிளாஸ் மோர் அருந்துவது சூட்டை தணித்து உடலை வறண்ட நிலையில் இருந்து பாதுகாக்கிறது. வெண்ணெய் நீக்கப்பட்ட தயிரில் மோர் தயாரிப்பது நல்லது. மோர் ரத்த அழுத்தத்தை குறைப்பதோடு, உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவும். பெண்களுக்கு மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் வாயுப்பிரச்சனையை சரி செய்ய உதவுகிறது.

News March 18, 2024

டோவினோவின் திருப்பம் நிறைந்த த்ரில்லர்

image

வெவ்வேறு வழக்குகளில் நடக்கும் இரண்டு கொலைகளும் அந்த வழக்கை தீர்க்க போராடும் காவல்துறை அதிகாரியின் போராட்டம் தான் ‘Anweshippin Kandethum’ மலையாளப் படத்தின் ஒன்லைன். டோவினோ தாமஸ் நடித்துள்ள இப்படம் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது. இளம்பெண்ணின் கொலை, யார் குற்றவாளி என்பதை திரில்லர், கிளைமாக்ஸ் திருப்பம், அங்கீகாரத்திற்கு போராடும் காவலர் என சுவாரஸ்யமாக காட்சிப்படுத்தியுள்ளனர்.

News March 18, 2024

தேர்தல் ஆணையம் சுதந்திரமாக செயல்படும்

image

I.N.D.I.A கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியமைத்த பிறகு, தேர்தல் ஆணையம் சுதந்திரமாக செயல்படும் என தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார். மும்பையில் இந்திய ஒற்றுமை நீதிப் பயணத்தின் நிறைவு விழாவில் பேசிய அவர், ‘வாக்குப்பதிவு இயந்திரத்தில் நீங்கள் பதிவு செய்த வாக்கு சரியாக பதிவாகி இருக்கிறதா என சோதனை செய்து கொள்வது அவசியம். அதற்கு பின் இந்த இயந்திரங்கள் இருக்காது’ என்றார்.

News March 18, 2024

வரலாற்றில் இன்று!

image

➤ 1913 – கிரேக்கத்தின் முதலாவது ஜோர்ஜ் மன்னர் படுகொலை செய்யப்பட்டார். ➤1922 – ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்ட காந்தி 6 ஆண்டு சிறைத்தண்டனை பெற்றார். ➤1965 – சோவியத் வீரர் அலெக்சி லியோனொவ், வஸ்கோத் 2 விண்கலத்தின் வெளியே 12 நிமிடங்கள் நடந்து விண்வெளியில் நடந்த முதல் மனிதர் என்ற சாதனையை படைத்தார். ➤ 1989 – எகிப்தில் 4,400 ஆண்டுகள் பழமையான பதனிடப்பட்ட உடல் பிரமிட் ஒன்றினுள் கண்டுபிடிக்கப்பட்டது.

News March 18, 2024

சோடியம் பேட்டரி தயாரிப்பில் தீவிரம் காட்டும் சீனா!

image

எலெக்ட்ரிக் கார்களுக்கு பயன்படுத்தப்படும் லித்தியம் அயன் பேட்டரி பற்றாக்குறை, விலை உயர்வு காரணமாக சோடியம் அடிப்படையிலான பேட்டரிகள் தயாரிப்பில் சீனா அதிகளவில் முதலீடு செய்து வருகிறது. லித்தியம் பேட்டரி தயாரிப்பில் சிலி, பொலிவியா மற்றும் அர்ஜெண்டினா நாடுகள் முன்னணியில் உள்ளன. இதனை முறியடிக்க சீனா திட்டமிட்டுள்ளது. சோடியம் பேட்டரியில் வீட்டில் பயன்படுத்தும் உப்பு தான் முக்கிய மூலப்பொருளாகும்.

News March 18, 2024

இன்று தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி

image

மக்களவைத் தேர்தல் தேதி அறிவிப்பிற்கு பின், பிரதமர் மோடி முதல்முறையாக இன்று தமிழகம் வருகிறார். கர்நாடகாவின் ஷிவமோகாவில் இருந்து கோவைக்கு மாலை 5.30 மணிக்கு வரும் மோடி, வாகன பேரணியில் பங்கேற்க உள்ளார். சாய்பாபா காலனியில் தொடங்கும் வாகன பேரணி, ஆர்.எஸ்.புரம் காமராஜர் புரம் தலைமை தபால் நிலையம் அருகே நிறைவு பெறுகிறது. பிரதமரின் வருகையை முன்னிட்டு கோவையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

News March 18, 2024

தினம் ஒரு திருக்குறள்

image

◾பால்: அறத்துப்பால்
◾அதிகாரம்: அடக்கமுடைமை
◾குறள்: 123
செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்து ஆற்றின் அடங்கப் பெறின்.
◾விளக்கம்: அடக்கத்துடன் வாழ்வதே அறிவுடைமை என்று அறிந்து, ஒருவன் அடக்கமாக வாழ்ந்தால் அவனது அடக்கம் நல்லவர்களால் அறியப்பட்டு அது அவனுக்குப் பெருமையைக் கொடுக்கும்.

error: Content is protected !!