India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

உத்தரபிரதேசத்தின் பிஜ்னோர் பகுதியைச் சேர்ந்தவர் ஆதேஷ் தேவி. மனநலம் பாதிக்கப்பட்டவரான இவருக்கு, நான்கு வயதில் மகன் உள்ளது. இந்த நிலையில், வேலைக்குச் சென்ற கணவன் வீடு திரும்பியதும், மகன் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்து போலீசில் புகார் அளித்துள்ளார். விசாரணையில், தாய் தேவி, குழந்தையின் கழுத்தை அறுத்து, வீட்டில் இருந்த அடுப்பில் வைத்து உடலை எரிக்க முயன்றது தெரியவந்துள்ளது.

இத்தாலியில் 50ஆவது ஜி7 மாநாடு இன்று தொடங்க உள்ளது. மாநாட்டில் கலந்து கொள்ள இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி அழைப்பு விடுத்திருந்த நிலையில், பிரதமர் மோடி இன்று இத்தாலி செல்கிறார். இந்த நிலையில், அங்கு வைத்து அமெரிக்க அதிபர் ஜோ பைடனை, பிரதமர் மோடி சந்திக்க உள்ளதாக, அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் தெரிவித்துள்ளார். இரு நாட்டு உறவுகள் குறித்தும் இந்த சந்திப்பில் பேசப்பட உள்ளது.

பணவீக்கம் கட்டுக்குள் வந்திருக்கும்போதும் வட்டி விகிதத்தை குறைக்க அமெரிக்காவின் மத்திய வங்கி (Fed) மறுத்துவிட்டது. உலகின் பொருளாதரமே அமெரிக்காவை சுற்றிச் சுழலும் நிலையில், இந்த முடிவு இந்திய பங்குச்சந்தைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வட்டி விகிதம் குறையாததால், இந்திய பங்குச்சந்தைகளில் இருந்து வெளிநாட்டு முதலீட்டாளர்கள் முதலீட்டை வெளியே எடுக்க வாய்ப்புள்ளது.

தமிழக பாஜகவில் ஏற்பட்டிருக்கும் உட்கட்சிப்பூசல் தொடர்பாக மேலிடம் அறிக்கை கேட்டிருப்பதாக நேற்று தகவல் வெளியானது. இந்நிலையில், அக்கட்சியின் மூத்தத் தலைவர் பியூஷ் கோயல் இந்த செய்தியை மறுத்திருக்கிறார். தமிழக பாஜகவிடம் இருந்து யாரும் எந்தவிதமான அறிக்கையையும் கேட்கவில்லை என்று அவர் தெளிவுபடுத்தியிருக்கிறார். மேலும், தமிழக பாஜகவுக்கு தான் பொறுப்பாளர் அல்ல என்றும் கோயல் கூறியிருக்கிறார்.

தமிழக அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில், மாணவர்களுக்கான தேவை போக, 1,862 ஆசிரியர்களும், அவர்களுக்கான பணியிடங்களும் உபரியாக உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. இந்த ஆசிரியர்களை 24 மணி நேரத்திற்குள் இடமாற்றம் செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட தொடக்க கல்வி அதிகாரிகளுக்கு, பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, இன்று இட மாறுதல் கவுன்சிலிங் நடைபெற உள்ளது.

நியூசிலாந்து – மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையேயான டி20 உலகக் கோப்பை போட்டி ப்ரையன் லாரா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில், முதலில் பேட்டிங் செய்த மே.இ.தீவுகள் அணி, 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்களை குவித்துள்ளது. இதனையடுத்து 150 ரன்கள் என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்கவுள்ளது. மே.இ.தீவுகள் அணியின் ரூதர்ஃபோர்டு அதிகபட்சமாக 68 ரன்கள் குவித்தார்.

ஜம்மு-காஷ்மீரின் ரியாஸியில் பேருந்து மீது தாக்குதல் நடத்திய தீவிரவாதி ஒருவனின் வரைபடத்தை போலீஸ் நேற்று முன்தினம் வெளியிட்டிருந்தது. இதையடுத்து மேலும் 4 தீவிரவாதிகளின் வரைபடங்களை சாட்சிகள் அளித்த வாக்குமூலம் அடிப்படையில் வரைந்து வெளியிட்டு, நால்வரும் பதேர்வா, தாத்ரி, காண்டோ பகுதிகளில் சுற்றித் திரிவதாகவும், தகவல் அளித்தால் ₹5 லட்சம் வெகுமதி தரப்படும் என அறிவித்துள்ளது.

ஐபிஎல்லின் வர்த்தக மதிப்பு, பிரான்ட் மதிப்பு குறித்து சர்வதேச முதலீட்டு வங்கியான Houlihan Lokey அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் ஐபிஎல்லின் மொத்த வர்த்தக மதிப்பு ₹1.35 லட்சம் கோடி என்றும், பிரான்ட் மதிப்பு ₹28,000 கோடி என்றும் கூறியுள்ளது. கடந்த ஒரு ஆண்டில் வர்த்தக மதிப்பு 6.5%மும், பிரான்ட் மதிப்பு 6.3%மும் அதிகரித்துள்ளதென்றும் Houlihan Lokey வங்கி தெரிவித்துள்ளது.

பனிப்போர் காலத்தில் இருந்தே ரஷ்யாவும், கியூபாவும் நட்பு நாடுகளாக இருந்து வருகின்றன. உக்ரைன் போரில் அமெரிக்கா உதவி வரும் நிலையில், அமெரிக்காவின் எல்லை நாடான கியூபாவிற்கு, ரஷ்யாவின் அதிநவீன போர்க்கப்பல்கள் சென்றுள்ளதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. அதிலும், அணு ஆயுதம் தாங்கிய அதிநவீன நீர்மூழ்கி கப்பல் சென்றுள்ளதால், நிலமை மோசமடைந்துள்ளது. அமெரிக்கா இதை உன்னிப்பாக கவனித்து வருவதாக தெரிவித்துள்ளது.

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலையொட்டி, தேர்தல் பணிக்குழுவை நியமித்து திமுக தலைமை அறிவித்தது. பொன்முடி, ஜெகத்ரட்சகன் தலைமையில் அமைக்கப்பட்ட அக்குழுவில், அமைச்சர்கள் KN நேரு, சிவசங்கர், அன்பில் மகேஷ் உள்ளிட்ட பலர் இடம்பெற்றுள்ளனர். ஆனால், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த மஸ்தான் பெயர் இடம்பெறவில்லை. அண்மையில் அவர், மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்தும் விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.