India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மூன்றாம் வகுப்பு பாடப் புத்தகத்தில் குறிப்பிட்ட மதங்களை மட்டும் திணிப்பதாக இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் குற்றம் சாட்டியிருந்தார். இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள TN Fact Check தளம், அந்த புத்தகத்தில் இந்து, முஸ்லீம், கிறிஸ்தவர் என மத நல்லிணக்கத்திற்கு அடையாளமாக அனைத்து மதமும் இடம்பெற்றுள்ளதாகக் கூறியுள்ளது. குறிப்பிட்ட மதத்தை மட்டும் திணிப்பதாக வதந்தி பரப்பப்படுகிறது எனத் தெரிவித்துள்ளது

வார இறுதி, பக்ரீத் பண்டிகை விடுமுறையை முன்னிட்டு, மக்கள் சொந்த ஊர்களுக்குச் செல்லத் தொடங்கியுள்ளனர். இந்நிலையில், சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்குச் செல்லும் ஆம்னிப் பேருந்துகளில் கட்டணம் அதிரடியாக உயர்ந்துள்ளது. குறிப்பாக, சென்னை – திருச்சி, மதுரை, நெல்லை, குமரிக்கு செல்வதற்கான கட்டணம் 2 மடங்கு உயர்ந்துள்ளது. கட்டண உயர்வை தடுக்குமாறு அரசுக்கு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அமெரிக்காவுடனான பெட்ரோ டாலர் ஒப்பந்தத்தை சவுதி அரேபியா ரத்து செய்திருப்பது சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜூன் 8, 1974 இல், அமெரிக்கா-சவுதி இடையே பெட்ரோ டாலர் ஒப்பந்தம் கையெழுத்தானது. 50 ஆண்டுகள் நடைமுறையில் இருந்த இந்த ஒப்பந்தம் ஜூன் 9ஆம் தேதியுடன் காலாவதியான நிலையில், அதனை சவுதி நீட்டிக்கும் என அமெரிக்கா எதிர்பார்த்தது. ஆனால், அதை நீட்டிக்க சவுதி சம்மதிக்கவில்லை.

சவுதியிடமிருந்து கச்சா எண்ணெய்யை கொள்முதல் செய்யும் உலக நாடுகள் இதுவரை டாலரை மையப்படுத்தியே வர்த்தகம் செய்துவந்தன. அதற்கு காரணமான பெட்ரோ டாலர் ஒப்பந்தம் தற்போது காலாவதியானதால், சவுதியிடம் ரூபாய், யூரோ, யென், தினார், ரியால் போன்ற கரன்சிகளில் வணிகம் செய்ய முடியும். அரசியல் & பொருளாதார ரீதியாக மேலாதிக்கம் செய்துவரும் அமெரிக்க டாலரின் ஆதிக்கத்தின் மீது விழுந்த சம்மட்டி அடியாக பார்க்கப்படுகிறது.

குவைத் தீ விபத்தில் உயிரிழந்த தமிழர்கள் 7 பேரின் உடல்கள் நாளை இந்தியாவுக்கு கொண்டு வரப்படுகிறது. விமானம் மூலம் 7 பேரின் உடல்களும் நாளை காலை 9.30 மணியளவில் கொச்சி விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட உள்ளதாக தமிழக அரசுத் தரப்பில் கூறப்பட்டுள்ளது. உயிரிழந்த தமிழர்களின் உடல்களை, அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கும் பணியை மேற்கொள்வதற்காக அமைச்சர் செஞ்சி மஸ்தான் நாளை கொச்சி செல்ல உள்ளார்.

குவைத்தில் ஏற்பட்ட தீ விபத்தில், உயிரிழந்த தமிழர்கள் 7 பேரின் குடும்பங்களுக்கு தலா ₹5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். கேரளாவைச் சேர்ந்த தொழிலதிபருக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று காலை பயங்கரத் தீ விபத்து ஏற்பட்டது. இதில், 7 தமிழர்கள் உள்பட 40க்கும் அதிகமான இந்தியர்கள் உயிரிழந்தனர். அவர்கள் உடலை இந்தியாவுக்கு கொண்டுவரும் பணி நடைபெற்று வருகிறது.

தேசிய பாதுகாப்பை வலுப்படுத்த ராணுவத் துறையை நவீனமயமாக்குவதில் மத்திய அரசு கவனம் செலுத்தும் என்று மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். அமைச்சராகப் பொறுப்பேற்றப் பின் பேசிய அவர், “பாதுகாப்பு உபகரணங்களின் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். 2028 – 29ஆம் ஆண்டுக்குள் உபகரணங்கள் ஏற்றுமதியை ₹50,000 கோடியாக உயர்த்த அரசு முனைப்புடன் செயல்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீரின் ரியாஸி பகுதியில், பக்தர்கள் பயணித்த பேருந்து மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 9 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், இந்த தீவிரவாத சம்பவம் தொடர்பாக, 50 பேரை விசாரணை காவலில் வைத்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், 2005ஆம் ஆண்டு வரை தீவிரவாதிகளின் மையமாக விளங்கிய அர்னாஸ், மஹோர் ஆகிய பகுதிகளில் தீவிர தேடுதல் வேட்டையும் நடத்தி வருவதாக தெரிவித்துள்ளனர்.

IAS அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார். அதன்படி, நிதித்துறை (செலவு) செயலராக நாகராஜன், வீட்டுவசதி வாரிய மேலாண் இயக்குநராக சமீரன், வணிக வரித்துறை முதன்மை செயலராக பிரஜேந்திர நவ்நீத், சென்னை மாநகராட்சி துணை ஆணையராக சிவகிருஷ்ணமூர்த்தி, கனிமவளத்துறை ஆணையராக சரவண வேல்ராஜ், சிறுபான்மையினர் நலத்துறை முதன்மை செயலாளராக விஜயராஜ்குமார் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் முதல்கட்டமாக 14 மாவட்டங்களில் உள்ள ரேஷன் கடைகளில், விரைவில் தேங்காய் எண்ணெய் விநியோகிக்கப்படும் என பொள்ளாச்சி MP ஈஸ்வரசாமி தெரிவித்துள்ளார். ரேஷன் கடைகளில் தேங்காய், தேங்காய் எண்ணெய் விற்க வேண்டும் என தென்னை விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில், முதல்வர் ஸ்டாலினிடம் ஒப்புதல் பெற்று விரைவில் தேங்காய் எண்ணெய் விற்கப்படும் என MP ஈஸ்வரசாமி உறுதியளித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.