News May 2, 2024

IPL: புதிய சாதனை படைத்தது பஞ்சாப் அணி

image

CSK அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய பஞ்சாப் அணி, புதிய சாதனை படைத்துள்ளது. ஐபிஎல் வரலாற்றில், CSK-க்கு எதிராக தொடர்ச்சியாக அதிக வெற்றிகளை பதிவு செய்த MI அணியின் சாதனையை சமன் செய்துள்ளது. இரு அணிகளும் தலா 5 போட்டிகளில் CSK அணியைத் தொடர்ச்சியாக வீழ்த்தியுள்ளன. மே 5ஆம் தேதி நடைபெறும் அடுத்தப் போட்டியில், MI-இந்த சாதனையை பஞ்சாப் அணி முறியடிக்குமா? எனப் பொறுத்திருந்து பார்ப்போம்.

Similar News

News December 16, 2025

தேனியில் தோட்ட வேலைக்கு சென்றவர் உயிரிழப்பு!

image

போடி, ஆதிப்பட்டி பகுதியை சோ்ந்தவர் வேலாண்டி. இவா் முத்துக்கோம்பை பகுதியில் ஒரு தோட்டத்தில் வேலை பாா்த்து வந்தார். மது பழக்கத்துக்கு அடிமையான இவர் சில தினங்களுக்கு முன் ஆதிப்பட்டிக்கு வந்துவிட்டு தோட்டத்துக்கு செல்வதாகக் கூறி சென்ற நிலையில் அணைக்கரைப்பட்டியிலிருந்து முத்துக்கோம்பைக்கு செல்லும் பாதையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து போடி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

News December 16, 2025

ஜனாதிபதி முர்மு நாளை தமிழகம் வருகை

image

வேலூரில் உள்ள பிரசித்திபெற்ற தங்க கோயிலில் தரிசனம் செய்வதற்காக ஜனாதிபதி திரெளபதி முர்மு நாளை தமிழகம் வருகிறார். ரேணிகுண்டாவில் இருந்து ஹெலிகாப்டரில் வேலூருக்கு வரும் முர்முவை, கவர்னர் ஆர்.என்.ரவி, மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் வரவேற்கின்றனர். இதையொட்டி வேலூரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பிறகு அவர் ஐதராபாத் புறப்பட்டு செல்கிறார்.

News December 16, 2025

இன்று தளபதி ரசிகர்களுக்கு ட்ரீட்!

image

தளபதி கச்சேரி பாடலுக்கு பிறகு ‘ஜனநாயகன்’ அப்டேட் இன்றி விஜய் ரசிகர்கள் ஏமாற்றத்தில் இருந்தனர். இந்நிலையில், அடுத்த அப்டேட் இன்று மாலை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. 2-வது பாடல் ரிலீஸ் ஆக இருக்கலாம் என கூறப்படுகிறது. 10 நாள்களில் இசை வெளியீடு விழா, டிரெய்லர் ரிலீஸ், படக்குழுவினரின் நேர்காணல் என அடுத்தடுத்து அப்டேட் வரவுள்ளதால் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி கடலில் மூழ்கியுள்ளனர்.

error: Content is protected !!