News June 14, 2024

நடிகையை SV.சேகர் மிரட்டுவதாக புகார்

image

செய்தியாளருக்கு எதிரான பாலியல் வழக்கில் சமரசம் செய்யக் கூறி, நடிகர் எஸ்.வி.சேகர் மிரட்டுவதாக நடிகை காயத்ரி சாய் தெரிவித்துள்ளார். முதல்வரின் தனிப்பிரிவு, அரசு பெயரை பயன்படுத்துவதாகவும், கல்லூரி செல்லும் தனது மகளை இந்த விவகாரத்தில் இணைத்துவிடுவதாக மிரட்டுவதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், இது குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்கவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

News June 14, 2024

ரேஷன் கடைகளுக்கு எச்சரிக்கை

image

ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு, பாமாயில், மண்ணெண்ணெய் உள்ளிட்ட பொருள்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்த நிலையில், சில ரேஷன் கடை ஊழியர்கள், ரேஷன் பொருள்களை கள்ளச்சந்தையில் விற்று அதிக லாபம் ஈட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், கள்ளச்சந்தையில் ரேஷன் பொருள்களை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அனைத்து ரேஷன் கடைகளுக்கும் தமிழக அரசு எச்சரிக்கை உத்தரவை பிறப்பித்துள்ளது.

News June 14, 2024

மக்களே! ரேஷன் பொருள்கள் கிடைக்கிறதா?

image

தமிழ்நாட்டில் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பொருள்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மே மாதம் பருப்பு, பாமாயில், மண்ணெண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டதை அடுத்து, தேர்தல் முடிவுக்கு பிறகு ரேஷன் பொருள்கள் தட்டுப்பாடு இன்றி வழங்கப்படும் என அரசு அறிவித்தது. ஆனால், தற்போது வரை முறையாக பொருள்கள் கிடைக்கவில்லை என்றும் அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

News June 14, 2024

அக்காவைச் சந்தித்த தம்பி

image

தமிழகத்தில் தாமரை மலர்ந்திட மாநிலத் தலைவராகத் திறம்படச் செயல்பட்ட அக்கா தமிழிசையின் அனுபவமும், ஆலோசனைகளும் உதவும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். தமிழகத்தில் தாமரை நிச்சயம் மலரும் என்பதை உறுதியுடன் கூறி, அதற்காகக் கடினமாக உழைத்த தமிழிசையை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசியதில் தான் பெருமகிழ்ச்சி அடைந்ததாகக் கூறிய அவர், இச்சந்திப்பில் புதிய உத்வேகத்தைப் பெற்றதாகவும் தெரிவித்தார்.

News June 14, 2024

ஸ்வீட் கொடுத்த அண்ணாமலை; கசப்பை மறந்த தமிழிசை

image

தமிழக பாஜக மூத்த தலைவர் தமிழிசையை அண்ணாமலை மரியாதை நிமித்தமாக, அவரது இல்லத்திற்கு நேரில் சந்தித்து பேசியுள்ளார். தேர்தல் கூட்டணி, உறுப்பினர் சேர்க்கை உள்ளிட்டவை குறித்து தமிழிசை தெரிவித்த கருத்துகள் அரசியல் அரங்கில் பூதாகரமானது. இந்த விவகாரம் தமிழிசை Vs அண்ணாமலை என இணையத்தில் ட்ரெண்டானது. இச்சந்திப்பின் மூலம், மோதலுக்கு இருவரும் முற்றுப்புள்ளி வைத்துள்ளதாக, அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

News June 14, 2024

குலாப் ஜாமுன் பிரியர்கள் கவனத்திற்கு

image

உடல் ஆரோக்கியத்திற்காக ஒருவர் தினமும் அரை மணி நேரம் முதல் 1 மணி நேரம் வரை நடைபயிற்சி செய்வார் என வைத்துக் கொள்வோம். ஒரு குலோப் ஜாமுனில் 150-200 கலோரிகள் கிடைப்பதால், 2 சாப்பிட்டால் கூட, அந்த கலோரிகளை குறைக்க கூடுதலாக அவர் ஒரு மணி நேரம் நடைபயிற்சி அல்லது 30 நிமிட தீவிர நடைபயிற்சி மேற்கொள்ள வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள். சர்க்கரையினாலான பண்டங்களை முடிந்த அளவு தவிர்ப்பதும், குறைப்பதும் நல்லது.

News June 14, 2024

இந்திய ராணுவத்தின் தாக்குதல் ட்ரோன்கள்

image

இந்திய ராணுவத்தில் அதிநவீன ‘Nagastra 1’ எனும் தாக்குதல் ட்ரோன்கள் இணைக்கப்படுகின்றன. வீரர்கள் எளிதாக எடுத்துச் செல்லும் வகையிலான தற்கொலைப்படை ட்ரோன்கள் இவை. தீவிரவாத பயிற்சி முகாம்கள், எதிரி நாடுகளின் முகாம்கள் மீது துல்லியமாக தாக்குதல் நடத்தும் வல்லமை கொண்டவை. இத்தகைய ட்ரோன்களை இதுவரை வெளிநாடுகளில் இருந்து இந்தியா வாங்கி வந்த நிலையில், தற்போது உள்நாட்டிலேயே தயாரித்துள்ளது.

News June 14, 2024

செந்தில் பாலாஜி வழக்கில் நீதிமன்றம் அறிவிப்பு

image

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜி, வங்கி அதிகாரிகளின் விவரங்களை வழங்கக்கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை இன்று தள்ளுபடி செய்த சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், ED வழக்கில் இருந்து விடுவிக்க கோரி அவர் தாக்கல் செய்த மனு மீது ஜூன் 19இல் உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது. இது செந்தில் பாலாஜி-க்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

News June 14, 2024

அரிசி உணவை எந்த நாட்டினர் அதிகம் சாப்பிடுகின்றனர்?

image

உலகில் இந்தியர்களே அரிசி உணவுகளை அதிகம் உட்கொள்வதாக பொதுவான கருத்து உண்டு. ஆனால் அதில் உண்மையில்லை. சீன நாட்டினரே அரிசி உணவுகளை அதிகம் உட்கொள்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் சீனர்கள் 142.70 மெட்ரிக் டன் அரிசியை உணவுக்கு பயன்படுத்துகின்றனர். இது உலகின் ஒட்டுமொத்த அரிசி உற்பத்தியில் 30% ஆகும். இதற்கடுத்து 2ஆவது இடத்தில் இந்தியர்கள் 97.35 மெட்ரிக் டன் அரிசியை உணவாகப் பயன்படுத்துகின்றனர்.

News June 14, 2024

திமுக இன்னும் திருந்தவில்லை: அண்ணாமலை

image

SRM ஓட்டலை மூடும் முயற்சியில் திமுக அரசு ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது என, அண்ணாமலை தெரிவித்துள்ளார். கூட்டணிக்கு வரவில்லை என்பதற்காக விஜயகாந்தின் மண்டபத்தை இடித்துப் பழிவாங்கிய திமுக, இன்னும் திருந்தவில்லை
என்பதை, இது உறுதிப்படுத்துவதாகவும் சாடியுள்ளார். தேர்தலில் திமுகவை எதிர்த்து போட்டியிட்டதற்காக பாரிவேந்தரை பழிவாங்கும் நடவடிக்கையில், திமுக ஈடுபட்டுள்ளதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.

error: Content is protected !!