India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பிரதமர் தோல்வி பயத்தால் அவதூறுகளை அள்ளி வீசுவதாக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை குற்றம் சாட்டியுள்ளார். உளவுத்துறையின் தகவலால்
தோல்வி பயத்தில் மோடி இருப்பதாக கூறிய அவர், பொறுப்பற்ற அரசியல்வாதியை 10 ஆண்டுகள் பிரதமராக பெற்றதற்காக தலைகுனிவதாக தெரிவித்தார். மேலும், காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம் என்ற மோடி, தினமும் காங்கிரஸ் கட்சியைப் பற்றி பேசுவதாகவும் அவர் தெரிவித்தார்.
அமேதியில் காங்கிரஸ் தோல்வியை ஒப்புக் கொண்டுள்ளதாக ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார். வெற்றிக்கான வாய்ப்பிருந்தால் ராகுல் அமேதியில் போட்டியிட்டிருப்பார் என்ற அவர், தோல்வி அடைவோம் என்று தெரிந்ததால், ராகுல் தொகுதி மாறியதாக விமர்சித்துள்ளார். 2019 தேர்தலில் ராகுலை எதிர்த்து அமேதி தொகுதியில் போட்டியிட்ட அவர், 55 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வென்றார். ராகுல் இந்த முறை ரேபரேலியில் போட்டியிடுகிறார்.
இந்தியாவில் கடந்த 4 மாதத்தில் 2,23,10,000 கணக்குகள் நீக்கப்பட்டுள்ளதாக வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது. குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களிடம் இருந்து பயனர்களை பாதுகாக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக, மார்ச் மாதத்தில் 79 லட்சம் கணக்குகள் நீக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டின் முதல் காலாண்டில் 1,20,00,000 வாட்ஸ்அப் கணக்குகள் மட்டுமே நீக்கப்பட்டன.
மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 3,712 பணியிடங்களுக்கான அறிவிப்பை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 12 – 27 வயதுடையவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். பணியினைப் பொறுத்து ஊதியம் ₹20,000 – ₹80,000 வரை வழங்கப்படும். இதற்கு <
டயர் தயாரிப்பு நிறுவனமான எம்ஆர்எஃப், கடந்த நிதியாண்டின் 4ஆவது காலாண்டு முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்நிறுவனத்தின் நிகர லாபம் 7.6% சரிந்து ₹379.6 கோடியாக உள்ளது. இது முந்தைய ஆண்டில் ₹410.7 கோடியாக இருந்தது. கடந்தாண்டு ₹5,725.4 கோடியாக இருந்த வருவாய், 8.6% உயர்ந்து, ₹6,215.1 கோடியாக அதிகரித்துள்ளது. இதையடுத்து அந்நிறுவனம் பங்கு ஒன்றுக்கு ₹194 ஈவுத்தொகை (Divident) வழங்க முடிவெடுத்துள்ளது.
மூத்த செய்தியாளர் சண்முகநாதன் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மூத்த செய்தியாளரும், 2021ஆம் ஆண்டு கலைஞர் எழுதுகோள் விருது பெற்றவருமான சண்முகநாதன் வயது மூப்பு காரணமாக காலமானார். அவர் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், சண்முகநாதன் மறைவு தமிழ் இதழியல் உலகுக்கு பேரிழப்பு என்று குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் மின் பயன்பாடு 20,830 மெகாவாட் என்ற புதிய உச்சத்தை எட்டியதாக தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் வெப்ப அலை வீசிவருவதால், வெயிலின் தாக்கத்தில் இருந்து தற்காத்துக்கொள்ள மக்கள் ஃபேன், ஏசியை அதிகமாகப் பயன்படுத்தி வருகின்றனர். இதன் காரணமாக, மின்தேவை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. நேற்றுவரை மின்தேவை 20,701 மெகாவாட்டாக இந்த நிலையில் இன்று மேலும் அதிகரித்துள்ளது.
ரேபரேலியில் ராகுலை எதிர்த்து பாஜகவின் தினேஷ் பிரசாத் சிங் போட்டியிடுவதால் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பாஜகவின் முக்கிய தலைவரும், முன்னாள் காங்கிரஸ் நிர்வாகியுமான அவர், ராகுலுக்கு நெருக்கடி கொடுப்பார் என அக்கட்சி நம்புகிறது. 3 முறை எம்எல்ஏவாக இருந்த அவர், 2019 தேர்தலில் ரேபரேலியில் சோனியாவிடம் தோற்றார். இதுவரை 20 முறை அங்கு தேர்தல் நடந்த நிலையில், காங்கிரஸ் 17 முறை வென்றுள்ளது.
துணைவேந்தர்கள் ராஜினாமா செய்யும் அளவிற்குப் பல்கலைக்கழகங்களில் நிதி நெருக்கடி நிலவுவதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், இளைஞர்களின் எதிர்காலத்தை வளப்படுத்தும் பல்கலைக்கழகங்களைப் பாதுகாப்பது தமிழக அரசின் கடமை எனவும், பேராசிரியர்கள், அலுவலர்கள் உள்ளிட்டோருக்குச் சம்பளம் தர முடியாத சூழலை அரசு கண்டுக்கொள்ளாதது கண்டனத்திற்குரியது எனவும் கூறியுள்ளார்.
ஒருநாள், டி20 கிரிக்கெட் தரவரிசை பட்டியலில் இந்திய அணி முதலிடம் பிடித்துள்ளது. ஐசிசி வெளியிட்டுள்ள ஒருநாள் போட்டி தரவரிசையில் இந்தியா முதலிடத்திலும், ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா 2, 3ஆவது இடங்களிலும் உள்ளன. டி20 தரவரிசையில் இந்தியா முதலிடத்திலும், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் 2, 3ஆவது இடங்களிலும் உள்ளன. டெஸ்ட் தரவரிசையில் ஆஸ்திரேலியா முதலிடத்திலும், இந்தியா 2ஆவது இடத்திலும் உள்ளன.
Sorry, no posts matched your criteria.