News May 3, 2024

எம்ஆர்எஃப் நிறுவனத்தின் லாபம் 7.6% சரிவு

image

டயர் தயாரிப்பு நிறுவனமான எம்ஆர்எஃப், கடந்த நிதியாண்டின் 4ஆவது காலாண்டு முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்நிறுவனத்தின் நிகர லாபம் 7.6% சரிந்து ₹379.6 கோடியாக உள்ளது. இது முந்தைய ஆண்டில் ₹410.7 கோடியாக இருந்தது. கடந்தாண்டு ₹5,725.4 கோடியாக இருந்த வருவாய், 8.6% உயர்ந்து, ₹6,215.1 கோடியாக அதிகரித்துள்ளது. இதையடுத்து அந்நிறுவனம் பங்கு ஒன்றுக்கு ₹194 ஈவுத்தொகை (Divident) வழங்க முடிவெடுத்துள்ளது.

Similar News

News November 7, 2025

அதிமுக + விஜய் கூட்டணி… முடிவை அறிவித்தார்

image

விஜய்யுடன் கூட்டணி அமைப்பதில் அதிமுக உறுதியாக இருப்பதை RB உதயகுமார் மீண்டும் பதிவு செய்துள்ளார். எல்லா கட்சிகளும் அறிவிப்பது போல தவெகவும் CM வேட்பாளரை அறிவித்துள்ளதாக குறிப்பிட்ட அவர், மெகா கூட்டணியை EPS அமைப்பார் எனத் தெரிவித்துள்ளார். தை பிறந்தால் வழி பிறக்கும் என்றும் RB உதயகுமார் சூசகமாக தெரிவித்துள்ளார். அதிமுகவின் மெகா கூட்டணியில் தவெக இடம்பெறுமா?

News November 7, 2025

2032-ல் 9 நாடுகள் பாதிக்கப்படலாம்

image

2032-ஆம் ஆண்டில் ஒரு சிறுகோள் நமது சூரிய மண்டலத்தின் வழியாக செல்ல உள்ளது. விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, இந்த சிறுகோள் பூமியை பாதுகாப்பாக கடந்து செல்ல 97.9% வாய்ப்பு உள்ளது. இருப்பினும், 2.1% மோதலுக்கான வாய்ப்பு உள்ளது. அதன்படி, மோதல் ஏற்பட்டால், எந்தெந்த நாடுகளில் பாதிப்பு ஏற்படும் என்று மேலே போட்டோக்களில் பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE பண்ணுங்க.

News November 7, 2025

கோவை பெண் கடத்தல்: புகார் எதுவும் வரவில்லை

image

கோவை இருகூர் தீபம் நகரில் இளம்பெண் ஒருவரை காரில் <<18222861>>கடத்தி செல்லும் சிசிடிவி<<>> காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் பெண் மாயமானது தொடர்பாக இதுவரை எந்த புகாரும் வரவில்லை என கோவை காவல் ஆணையர் தெரிவித்துள்ளார். மேலும், சிசிடிவி காட்சியில் கார் நம்பர் தெரியவில்லை என கூறிய அவர், அது கண்டறியப்பட்ட உடன் உண்மை என்ன என்பது தெரியவரும் எனவும் விளக்கியுள்ளார்.

error: Content is protected !!