India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நடப்பு ஐபிஎல்லில் KKR & RR (16 புள்ளிகளுடன்) ஆகிய இரு அணிகளும் ஏறக்குறைய ப்ளே ஆஃப் சுற்றை நெருங்கிவிட்டன. அதேபோல், CSK, SRH, LSG ( 12 புள்ளிகளுடன்) ஆகிய அணிகளுக்கும் ப்ளே ஆஃப் செல்ல அதிக வாய்ப்புள்ளது. 6 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் உள்ள MI, இந்த ஐபிஎல்லின் லீக் போட்டியில் இருந்து வெளியேறும் முதல் அணியாக இருக்க அதிக வாய்ப்புள்ளது. அந்த அணி ப்ளே ஆஃப்-க்கு செல்ல 0.0001% தான் வாய்ப்பு இருக்கிறது.
12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியானதும், அந்தந்தப் பள்ளிகளில் மதிப்பெண் பட்டியல்களை பதிவிறக்கம் செய்யலாம் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது. மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் www.dge.tn.gov.in என்ற தளத்தில், மாணவர்களுக்கான மதிப்பெண் பட்டியல்களை 9.45 மணி முதல் பதிவிறக்கம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேவைப்படும் மாணவர்கள் மதிப்பெண் பட்டியலை பள்ளியிலேயே பெறலாம்.
கடந்த ஐந்து மாத காலமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த நாகை – இலங்கை கப்பல் போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட உள்ளது. ஏறக்குறைய 40 ஆண்டுகளுக்குப் பின் நாகை – இலங்கையின் காங்கேசன்துறை இடையே கடந்த ஆண்டு அக்.14ஆம் தேதி கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட்டது. ஆனால், குறைந்த அளவே மக்கள் பயணித்ததன் காரணமாக கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இந்நிலையில், மே 13 முதல் கப்பல் போக்குவரத்து மீண்டும் தொடங்கப்படுகிறது.
மக்களவைத் தேர்தலில் தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமர் மோடி வாரணாசி தொகுதியில் போட்டியிடுகிறார். இத்தொகுதியில் ஜூன் 1ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இந்நிலையில், மே 14 ஆம் தேதி பிரதமர் மோடி வாரணாசி தொகுதியில் வேட்புமனுத் தாக்கல் செய்கிறார். இதற்காக 13ஆம் தேதி வாரணாசி செல்லும் அவர், அங்கு பிரம்மாண்ட சாலைப் பேரணியும் நடத்த உள்ளார்.
ஊட்டி, கொடைக்கானல் செல்ல இ-பாஸ் எடுக்கும் நடைமுறை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. இதனை இணையதளம் மூலம் பெறுவதற்கான பதிவும் தொடங்கியுள்ளது. நாளை (மே 7) முதல் ஜுன் 30ம் தேதி வரை ஊட்டி, கொடைக்கானல் செல்ல இ-பாஸ் கட்டாயம் என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. http://epass.tnega.org என்ற இணையதளத்தின் வாயிலாக இதற்கு விண்ணப்பிக்கலாம். பேருந்துகளில் செல்லும் சுற்றுலாப் பயணிகள் இ-பாஸ் பெற வேண்டிய தேவை இல்லை.
லக்னோ அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் புள்ளிப் பட்டியலில் முதல் இடம் பிடித்துள்ளது கொல்கத்தா அணி. ராஜஸ்தான் மற்றும் கொல்கத்தா ஒரே புள்ளிகள் (16) பெற்றிருந்தாலும் ரன் ரேட் அடிப்படையில் KKR முதல் இடத்தில் உள்ளது. இருப்பினும் KKR அணியை விட RR ஒரு போட்டி குறைவாகவே விளையாடியுள்ளது. மூன்றாவது இடத்தில் CSK, 4- SRH, 5-LSG, 6-DC, 7-RCB, 8-PBKS, 9-GT, 10-MI அணிகள் உள்ளன.
* இன்று மாலை வரை கடலில் இறங்க வேண்டாம் என இந்திய கடல்சார் தகவல் மையம் எச்சரித்துள்ளது.
* இ-பாஸ் முறையால் சுற்றுலாப் பயணிகளுக்கு எந்த தொந்தரவும், அச்சமும் ஏற்பட வாய்ப்பில்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
* 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது.
* தமிழகத்தில் உள்ள அரசு கலை & அறிவியல் கல்லூரிகளில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது. இன்று காலை 9:30 மணிக்கு www.tnresults.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்களில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். தேர்வர்கள் தங்களது பதிவெண், பிறந்த தேதியை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். கடந்த மார்ச் 1 – 22 வரை நடைபெற்ற இத்தேர்வை சுமார் 8 லட்சம் மாணவர்கள் எழுதியது குறிப்பிடத்தக்கது.
நாடு முழுவதும் நாளை (மே 7) 12 மாநிலங்களைச் சேர்ந்த 95 தொகுதிகளுக்கு மூன்றாம் கட்டத் தேர்த நடைபெறுகிறது. இந்த தேர்தலில் நட்சத்திர வேட்பாளர்களாக அமித் ஷா, டிம்பிள் யாதவ் (முலாயம் சிங் யாதவின் மருமகள்), ஜோதிர் ஆதித்ய சிந்தியா, பிரகலாத் ஜோஷி, சிவராஜ்சிங் சவுகான், திக் விஜய்சிங், ஆதிர்ரஞ்சன் சவுத்திரி ஆகியோர் போட்டியிடுகின்றனர். இதைத்தொடர்ந்து மே 13ஆம் தேதி நான்காம் கட்டத் தேர்தல் நடைபெறுகிறது.
மக்களவைத் தேர்தலில் பாஜகவின் தோல்வி உறுதியாகிவிட்டதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார். பிற்படுத்தப்பட்டோர், தலித்துகளுக்கு எதிராக இஸ்லாமியர்களைத் திருப்பிவிடும் வேலையை பாஜக செய்வதாகக் விமர்சித்த அவர், நாடு முழுவதும் மோடி எதிர்ப்பு அலை அதிகரித்துள்ளதாகக் கூறியுள்ளார். மேலும், சிறுபான்மையினர் இடஒதுக்கீட்டை காங்., பறித்ததாக மோடி பச்சையாக பொய் பேசுகிறார் என சாடியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.